(Reading time: 36 - 72 minutes)

ஹேய்….அங்கங்க ஒளிஞ்சிருக்க ஃபீவர் நீ தொட்டாதான போகும்…..பாரு ஃபோர் ஹெட்  நெக்லலாம் இப்ப போய்ட்டு…”  செய்த வேலைக்கு இப்படி ஒரு விளக்கம் அவனிடமிருந்து.

விலகி உட்கார்ந்திருந்தவள் இப்போது விறு விறுவென அவனிடமாய் வந்தாள். வந்த வேகத்தில் கையை ஓங்கி….. வேகமாய்….. அவன் வாய் மீது…. ஒரு போடு….. இல்ல அவன் வாய்க்கும் இவள் கைக்கும் இடையில் கடைசி மில்லி மீட்டரில் நிறுத்தி இருந்தாள் தன் கையை…

“நெக்‌ஸ்ட் டைம் பேசுனீங்கன்னா நிஜமா போட்றுவேன்…”

முன்பு இவளை சீண்டும் போது செய்வது போல் தன் கீழ் உதடை மட்டும் கடிக்காமல்….மீதி அத்தனை குறும்பு பாவத்துடன் அவளை  ரசித்துக் கொண்டிருந்தவன்,  ஓங்கி இருந்த அவள் கையை ஒருவிதமாய் பற்றினான் இப்போது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

ரேணுகா தேவியின் "அனல் மேலே பனித்துளி..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

அவன் தந்த உள்ளங்கை முத்தம் ஏனோ இப்போது ஞாபகம் வந்து சிலிர்க்கிறது இவளுக்கு…..

இவள் கண்களில் அதைக் கண்டானோ? அவன் கண் பாவத்தில் மாற்றம்…..முகத்தில் இருந்த குறும்பு போய்…..

அதற்கு மேல் அவன் முகம் பார்க்க முடியாமல் விழி தாழ்த்தினாள் இவள்.

தான் பற்றி இருந்த அவள்  கையை சற்றே அழுத்தினான் அவன்.

 நிச்சயம் இந்த தொடுகை வேறு விதம் என்கிறது இவள் பெண்மை.

அருகில் நின்ற அவளை மெல்லென இழுத்து தனக்கு மிக அருகில் கொண்டு வந்தான்…..

மிதந்து போய் இவள்.

குனிந்திருந்த அவள் முகத்தை நாடி தொட்டு தூக்கினான்….

விழி விரித்து அருகில் தெரிந்த அவன் கண்களை நோக்கினாள்.

அவனோ இவள் கன்னத்தின் புறமாக மெல்ல குனிந்தான் இப்போது…..

இவளும் மெல்ல மெல்ல தன் விழிகளை தாழ்த்திக் கொண்டாள்….

 ஜில்லென ஒரு சூடும், தெரியாத ஒரு சிவப்பும் இவள் கன்னப் புறம்….

சீரான அவன் சுவாசம் அதை தொட்டது அந்நேரம்…

அவளை ஆட்டி வைக்கும் அலைஉணர்வை அடி உதடை கடித்து இவள் அடக்க

அழகிய வெட்கம் அரேங்கேறி இருந்தது அவள் முகம் முழுவதும்.

இன்னுமாய் குனிந்தாள்.

இதை இவள் மறுப்பாக எண்ணிவிட்டானோ? இப்போழுது சற்று நிமிர்ந்து, அவள் கண்களை நேருக்கு நேராக பார்த்தவன், விழியால் தன் செயல் அவளுக்கு சம்மதமா என  கேட்டான்.

ஆசைதான் அவளுக்கும்….ஆனாலும் அதை எப்படிச் சொல்ல….?

அருகில் தெரிந்த அவன் உதடுகளை பார்த்தாள்.

அப்போதுதான் அவன் அதை அசைக்க கூடாதென்பதே ஞாபகம் வருகிறது இவளுக்கு….

வேண்டாம்  விழியால் மறுத்தாள்.

அப்படியே அகன்று கொண்டான் அவன்… சற்று விலகியும் நடந்தான்

‘ஹர்ட் ஆகிட்டானோ?’  என்றாகிவிட்டது இவளுக்கு….

“உங்களுக்கு உடம்பு சரி இல்லையே மனு.. அதான்” என அவசரமாக அவனுக்கு காரணம் சொன்னாள்…

ஒரு கணம் இவளை திரும்பிப் பார்த்தவன் அதற்கு பதிலேதும் சொல்லாமல் ‘சாப்ட போகலாம்’  என சகை செய்தான்.

‘அவன் பேச்சை மாத்த இப்படி சொல்றானோ….இன்னும் சமாதானம் ஆகலையோ’ என்றெல்லாம் இவளை நினைக்கவிடாமல் ‘பசிக்குது’ என்ற பதம் அதன் வேலையை காட்ட

“கிட்சென்க்கு கால் பண்ணா கொண்டு வந்துடுவாங்க மனுப்பா…… என்ன சாப்டுறீங்க? என்ன கொண்டு வர சொல்லலாம்?” என  கேட்டபடி அவனிடம் போனாள்.

அவனோ அந்த ஐடியாவையே மறுத்தவன் கீழ உள்ள இந்த வீட்டு கிட்செனுக்கு போகலாம் என்றான். அதாவது இவங்களா சமச்சுகனும்….

மனோவுக்கும் அவனுக்கு அவள் கையால் சமைத்து கொடுக்க விருப்பம்தான்…. அதுக்காக மேரேஜுக்கு ஃப்யூ டேஸ் முன்னால அம்மாட்ட அடுப்படில அவசர ட்ரெய்னிங்லாம் எடுத்தாளே…..

ஆனாலும் அவன எக்ஸ்பெரிமென்ட் எலியா இந்த சிச்சுவேஷன்ல யூஸ் பண்ணவான்னு தயக்கமா இருக்கு….. அவன் ஹெல்த் இப்டி இருக்கிற நேரத்துல இது ஏன் தேவையில்லாத ரிஸ்க் என காதல் மனைவியாய் கன்சர்ன் இருக்கும்தானே…

அந்த நினைவை முகத்தில் கொண்டு வந்து அவனைப் பார்த்து முழித்தாள்.

ஆனாலும் அவன் தன் ப்ளானில் பின்வாங்குவதாய் இல்லை…. கீழ போறதுக்கு ஷேர்ட் வேணுமென தன் பேக்கை போய் திறந்தான்.

அவனை தடுக்க முடியாது போலும்……

அவன் எடுத்த ஷேர்ட்டை அவசரமாக அவன் கையிலிருந்து பிடுங்காத குறையாக வாங்கி……அவனுக்கு போட்டுவிட முனைந்தாள் மனைவி…. அவனுக்கு கைல அடிபட்டுறுக்கே என்று இருக்கிறது இவளுக்கு….

ஆனால் அவனோ முறைத்தான் என்றெல்லாம் இல்லை…..இருந்தாலும் இவள் கையிலிருந்த ஷேர்ட்டை தான் வாங்கி தானே போட்டுக் கொண்டான்….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.