(Reading time: 36 - 72 minutes)

த வீட்ல சொல்லிட்டு போய்ருக்கலாம்னு பார்க்கியா மனோ…..?”

“………..”

“வீட்ல ஜோவன் பத்தி பேச முடியாது….”

“…………..”

“ஏன்னா ஜோவனை வீட்ல யாருக்கும் பிடிக்காது…….ஜோவனுக்கும் நம்ம வீட்டை அவ்ளவா பிடிக்காது….

“…………….”

“எதாவது சொல்லு மனோ…..இப்டி அமைதியா இருந்தா எனக்கு ரொம்பவும் பேனிக் ஆகுது நீ என்ன நினைக்கிறியோன்னு…. எனக்கு உண்மையிலேயே இதை எப்டி ஹேண்டில் பண்ணனு தெரியலை…..பட் கண்டிப்பா நம்ம ரெண்டு பேர் ஃப்ரெண்ட்ஷிப்புக்கு இடையில இது வந்துடக்கூடாது…..” என்ற இன்பா இப்போது ஒரு ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டு தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டவள்….

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

பிந்து வினோத்தின் "மலர்கள் நனைந்தன பனியாலே..." - உதய் - 26, நந்திதா - 28... சிறகடித்து பறக்குமா இவர்களின் காதல் எனும் பட்டாம்பூச்சி εїз...!

படிக்க தவறாதீர்கள்...

“ எனக்கு …..ஐ திங்க்…..நான் ஜோவன்ட்ட ரொம்ப டிஸ்டர்ப் ஆகுறேன் மனோ…. ஐ திங்க் ஐம் இன் லவ்…. ஆனா இது எதிர்காலமே இல்லாத ஒன்னு…..கனவில கூட இது நிறைவேறப் போறது கிடையாது….இதை எப்டி உன்ட்ட சொல்றதுன்னு ஒரு மாதிரி இருந்துச்சு…..அதான் சொல்லலை……மத்தபடி மின்னுவ பார்க்க ஹாஸ்பிட்டல் போறது எனக்கு அவ மேல…..அவளும் என்னை மாதிரி அம்மா இல்லாத குழந்தை……” ஒருவாறு விஷயத்தை சொல்லி முடித்தாள்.

மனோவுக்கு இப்போது இன்பாவின் செயல்களை அதோடு இணைந்திருக்கும் உணர்வு போராட்டங்களை புரிந்து கொள்ள முடிந்தாலும் இதை எப்படி எடுத்துக் கொள்ள, என்னவென்று தீர்த்து வைக்க எனப் புரியவில்லை….. இவள் பதில் சொல்லாமல் நிற்பதைக் கண்டு இன்னுமாக விளக்க முயன்றாள் இன்பா.

“என் பாட்டி இருக்காங்களே அவங்களுக்கு என் அம்மா தவிர ஒரு மகனும் உண்டு….என் அம்மாக்கு அண்ணா அவங்க….எனக்கு தாய்மாமா…. அவங்களுக்கு ஒரே சன் ரவீஷ்….. ரவீஷோட ஃப்ரெண்ட்தான் இந்த ஜோவன்….என் பாட்டிகூட அப்பப்ப நான் மாமாவீட்டுக்கு போவேன்….. அப்ப நான் ஜோவனைப் பார்த்திருக்கேன்…..அப்பல்லாம் எனக்கு மனசுல அவங்க மேல எந்த தாட்டும் கிடையாது….. யூஜி எக்‌ஸாம்ஸ் முடிஞ்சு நான் அப்டி மாமா வீட்டுக்கு போயிருந்தப்ப இந்த ஜோவன் என்ட்ட ப்ரபோஸ் செய்தாங்க…. கண்டிப்பா நான் அதை எதிர்பார்க்கல….

ஆக்சுவலி அந்த டைம் ரவீஷ் கூட எனக்கு மேரேஜ் செய்யலாம்னு வீட்ல பேச்சு ஆரம்பிச்சிருந்துது….. எனக்கு ரவீஷ் மேல விருப்பம்னு எதுவும் கிடையாது…….அப்பவரை அவனை நான் அந்த கோணத்துல யோசிச்சதும் கிடையாது……பட் வீட்ல கல்யாண பேச்சு ஆரம்பிச்சப்ப அம்மா பார்த்து யாரை செய்ய சொன்னாலும் செய்யலாம்னு ஒரு ஃபீல்…

சோ ஜோவன் ப்ரபோஸ் செய்யவும் எனக்கு முதல்ல எரிச்சல்தான் வந்துச்சு….. உங்க ஃப்ரெண்டு கூட எனக்கு மேரேஜ் ஆகப் போகுது….என்ட்ட வந்து ப்ரபோஸ் செய்றீங்களேன்னு திட்டிட்டேன்…..

அதே நேரம் நாங்க பேசிட்டு இருந்த ரூம்க்கு பாட்டி வந்து சேர்ந்தாங்க……அவங்க ஜோவனை ரொம்ப ரொம்ப மோசமா திட்டிடாங்க……ஜோவன் ஃபேமிலி இப்ப அளவு வசதி கிடையாது அப்போ…. அப்பர் மிடில் க்ளாஸ் அவங்க……அதை சொல்லிதான் ரொம்பவும் பேசிட்டாங்க பாட்டி….. எனக்கும் ரவீஷ்க்கும் மேரேஜ் செய்யனும்ன்றது பாட்டியோட ஆசைதான் போல……ஆக அவங்க கொதிச்சுட்டாங்க……ரவீஷையும் ஜோவனையும் கம்பேர் பண்ணி கன்னா பின்னானு பேசிட்டாங்க…..

யாருக்குன்னாலும் அது கண்டிப்பா ஹர்ட் ஆகும்…..ஜோவனுக்கும் ஆச்சு…..அதுக்கு பிறகுதான் அவங்க ஃபினான்ஸியலி க்ரோ ஆனது….. ஒரு மாதிரி ப்ரவோக் ஆகிட்டாங்க அவங்க….. அப்பப்ப அவங்க பிஸினஸ் விஷயத்ல நம்ம கம்பெனி கூட க்ளாஷ் ஆவங்க….நம்ம கம்பெனிக்கு அவங்க ரைவல்னு வச்சுகோயேன்…. ஆனா இதுல ஒரு அழகான விஷயம் என்னன்னா ரவீஷும் ஜோவனும் இப்ப வரைக்குமே நல்ல ஃப்ரெண்ட்ஸ்…

வர்ஷன் ஸ்டடீஸ் முடியவும் எந்த எக்ஸ்‌பீரியன்ஸும் இல்லாம கம்பெனிய முழுசா கைல எடுத்தான்…. ஆக்சுவலி அதுக்கு காரணமும் பாட்டிதான்…. அவன்தான் வந்துட்டான்ல அவன்ட்ட எல்லாத்தையும் கொடு….நீ உன் மகன்ட்ட தூக்கி கொடுக்க ப்ளான் போடுறன்னு அம்மாட்ட ஆடுனது பாட்டிதான்….அம்மா அதோட ஆஃபீஸ் போறதை நிறுத்திட்டாங்க….

அப்டி வர்ஷன் வந்த புதுசுல இந்த ஜோவன்ட்ட கொஞ்சம் லாஸ் செய்துறுக்கான்…..பட் அதுக்கு பிறகு வர்ஷனும் பிக்கப் செய்துகிட்டான்…. அதுவரைக்குமே எனக்கு ஜோவன் மேல பெரிய ஃபீல் எதுவும் கிடையாது…… பட் அப்பப்ப வர்ஷன் ஜோவனைப் பத்தி பேசுவான்…

என்னதான் கிளாஷ் இருந்தாலும் ஜோவன் எப்பவுமே ரொம்ப ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்ட்னு….. அது மாதிரி நிறைய…. வர்ஷனுக்கே ஜோவன் மேல ஒரு அட்மிரேஷன் உண்டு….

இதுக்கிடையில் இன்னொரு விஷயம்….. ரவீஷ் கூட என் மேரேஜ் பேச்சு ஆரம்பிச்சிதுன்னு சொன்னேன்ல….அந்த டைம் அதப் பத்தி ரவீஷ்ட்ட சொன்னவுடனே அவன் இன்பா எனக்கு தங்கச்சி மாதிரி….இன்னொரு டைம் இதப் பத்தி பேசாதீங்கன்னுட்டான் போல….

என் பாட்டி தான் உருண்டு புரண்டு அழுதுகிட்டு கிடந்தாங்களே தவிர எனக்கு அது ஒரு விஷயமாவே படலை….. ரவீஷ்க்கு இஷ்டம் இல்லைனா இதுக்கு மேல இதப் பத்தி ஒரு வார்த்தை பேசக் கூடாதுன்னுட்டங்க மாமவும்…..ரவீஷ் ஷில்பான்னு ஒரு பொண்ணை லவ் மேரேஜ் செய்துறுக்கான்…..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.