(Reading time: 36 - 72 minutes)

ற்றைக்கையால் அவன் பட்டன்களை போட்டுக் கொள்வதைப் பார்த்த மனோவுக்கு கோபம் வந்தது….அதாவது கோபம் மாதிரி ஏதோ ஒன்னு வந்துச்சு….

பின்னே அதென்ன பிடிவாதம்….இவதான் ஹெல்ப் பண்றேன்னு சொல்றாளே…..

அசையாமல் நின்று அவனை முறைப்பது போல் ஏதோ செய்து கொண்டிருந்தாள்….

இப்பொழுது  அறைக்கதவை திறந்து கொண்டு அவன் வெளியே போக…. ஆமாம் உள்ள வரவும் இந்த டைம் பொண்னு பார்த்து பொறுப்பா கதவை மூடி வச்சிறுந்துச்சே….

அவன் வெளியே சென்றுவிட்டான் என்றான பின்னும் இவள் தன் சிலை மோடை மாத்தலை.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

ஆதித்யா சரணின் "சிவன்யா" - புத்தம் புது தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

“மனு… ஒரு ஹெல்ப்” கூப்பிட்டது அவன் தான்…..

இதுக்கு மேல அவ எங்க இங்க நிக்க…… நிக்கனும்னு அவ நினச்சாலும் அவ கால் நிக்குமா என்ன? அவனிடம் ஓடி இருந்தாள் மனோ.

இவள் போகும் போது மாடியிலிறுந்து இறங்கும் படியின் முகப்பில் நின்றிருந்தான் அவன். அதாவது மேலிருந்து முதல் படி….

‘பசிக்குதுன்னு சொன்னானே…… எம்ட்டி ஸ்டொமெக்ல மெடிசின் எஃபெக்ட்ல இவ்ளவு படியப் பார்க்கவும் அவனுக்கு தலை எதுவும் சுத்திட்டோ……?’ அவசரமாய் அவன் அருகில் போய் நின்று, அவன் அடிபடாத கையை இவள் பிடிக்க நினைத்த நொடி…

யெஸ் நினைத்த நொடி, சட்டென குனிந்து தன் கையால் இவளை கால்களோடு வளைத்து தூக்கி தோளில் போட்டவன் நிதானமாக படியில் இறங்க தொடங்கினான்…

“ஐயோ என்ன பண்றீங்க நீங்க…?”

“எனக்கு உடம்பு சரி இல்லன்னு சொல்லிட்டு இருக்கல்ல…...நான் எவ்ளவு ஃபிட்டா இருக்கேன்னு ஃப்ரூவ் பண்றேன்…”

“அச்சோ அண்ணி இருக்காங்க மனு….விடுங்க என்ன ”

“இதெல்லாம் நீ முன்னாலயே யோசிச்சிறுக்கனும்….”

“முன்னாலயா?”

“ஆமா நான் ஃபிட் இல்லன்னு சொல்றதுக்கு முன்னால…”

இவள் என்னதான் திமிற நினைத்தாலும் அவன் பிடியில் அசையக் கூடிய முடியவில்லை இவளால்…. ‘போடா வேட்டக்காரா’

இப்பொழுது வந்த வெட்கமும் கூடவே சேர்ந்த சிரிப்புமாய் கண் மூடிக் கொண்டாள் அவள்…..அவளால் அப்போதைக்கு முடிந்தது அது ஒன்றுதான்….

க்ரவ்ண்ட் ஃப்ளோரில் சமயலறை வாசலில் போய்தான் அவளை இறக்கிவிட்டான்…..அதுவும் இறக்கி…. வாசல் புற சுவரில் அவளை சாய்த்து….. அவள் முகம் அருகில் தன் முகம் நிறுத்தி….. ஒரு புறம் தன் கை ஊன்றி……. அவள் மொத்த முகத்தையும் கண்களால் கைது செய்தபடி…..

இன்னும் கூட மனோ கண் திறக்கவில்லை…..

எவ்ளவுதான் பேசாதீங்கன்னு சொன்னாலும் இவ்ளவு பேசுறான்….. இதில் இந்த ஒற்றை இதழ் ஒற்றலில் என்னவாகிடப் போகிறது என்றாகிவிட்டது அவளுக்கு….

“இப்ப ஒத்துக்கிறியா மனுப் பொண்ணு…..?” இது அவன் ஃபிட்னெஸைப் பத்தி கேட்கிறான் எனப் புரிகிறது இவளுக்கு…

“ம்”

அடுத்து அவளவன் என்ன செய்வான் என அவளுக்கு தெரியுமாதலால்.... வெட்கத்தை மட்டும் வைத்துக் கொண்டு சிரிப்பை  நிறுத்திக் கொண்டாள்…..

ஆனால் அவனோ  “ சோ இனிமே என்ன ரூமுக்குள்ள வச்சு பூட்டி வச்சுட்டுப் போக மாட்ட….” என சம்பந்தமே இல்லாத கோணத்திற்கு போனான்.

‘ அச்சோ அவன்  அத இப்டியா நினச்சுட்டு இருக்கான்... ’ அவசரமாக கண் திறந்தவள்

 “அது அப்டி இல்ல மனுப்பா…..உங்களுக்கு  சேஃப்டி ப்ராப்ளம்னதும் நீங்க என் ஐ சைட்லயே இருக்கனும் போல இருக்கு…..” அவன் முகத்தைப் பார்த்து அவன்  புரிந்து கொள்ள வேண்டுமே என்று சற்று தவிப்பாகவே சொன்னவள்

“மத்தபடி நீங்க அன்ஃபிட் உங்களால சமாளிக்க முடியாதுன்னுல்லாம் நான் நினைக்கலைபா….”  என விளக்கினாள்.  ‘உன்னை என் கண்ணுக்குள்ள வச்சுக்கனும் போல இருக்கு’ என முன்பு அவன் சொன்னது இப்போது இவளுக்கு ஏனோ ஞாபகம் வந்து போகிறது…

கேட்டிருந்த அவன் கண்ணில் ஒரு தாய்மைக் கோடு….. இவள் தலையில் கை வைத்து செல்லமாய் சின்னதாய் ஒரு ஆட்டு….. அடுத்து அவன் என்ன சொல்ல வந்தானோ அல்லது செய்ய நினைத்தானோ

எதற்கும் அனுமதி தராமல் இடையில் வந்தது இன்டர்காம் அழைப்பு…..

இவர்களுக்கான சாப்பாடு இவங்க போர்ஷனுக்கு அனுப்பப்பட்டிருந்தது.

‘மனுப்பையா தப்பிச்சடா நீ….’

மித்ரனின் உடல் நிலைக்கு ஏற்ப  சிக்கன் ப்ராத் சூப்,  சிம்ம்ட் எக்,  கஞ்சி என என்னென்னவோ இருந்தது அதில்…. அதோடு இவளுக்கும் இன்பாவுக்குமாக கூட பார்த்து பார்த்து அனுப்பப் பட்டிருந்தது. அனுப்பியது களஞ்சியமாக இருக்கும் என தோன்றியது மனோவுக்கு……

ஆனால் ஏனோ அன்றும் சரி, அடுத்து  மித்ரன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலிருந்த அடுத்த இரண்டு நாட்களும் சரி களஞ்சியம் தன் மகனைப் பார்க்க வரவே இல்லை….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.