(Reading time: 27 - 54 minutes)

ஸ்ட்ரெய்ட் கட் அடர் நீல ஜீன்ஸ், கைகள் மடித்து விடப்பட்டிருந்த லைட் ப்ளூ டெனிம் ஷர்ட், தோளில் ஸ்ட்ராப் வைத்த ஜோல்னா பை மாடல் பேக் பாக் (back bag), பாப் செய்த சற்றே கலைந்திருந்த  தலை முடி, காலில் ஸ்னீக்கர்ஸ் எந்த வித அணிகலன்கள் ஒப்பனையும் இல்லாமல் சிம்பிளாக இருக்கும் இந்தப் பெண் யாராக இருக்கக் கூடும் என்று

புதியவர்களிடையே சலசலப்பு.

சித்தார்த் தோளில் கை வைத்ததும் அமர்ந்திருந்த நிலையிலேயே  திரும்பி பார்த்தவள் எழுந்து அவன் முழங்கைக்குள் தன் கையை கோர்த்தபடியே

"சித்து என்ன விஷயம்...சந்தோஷ் என்னவோ சொல்ல வரான். ஒண்ணுமே தெளிவா சொல்ல மாட்டேங்குறான். உனக்கு தெரியுமாமே" அவன் முகத்தை அண்ணார்ந்து பார்த்துக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

பார்ட்டி ஹாலில் தாங்கள் இருக்கிறோம் என்ற உணர்வே அவளுக்கு அப்போது இல்லை. சந்தோஷின் பதட்டம் அவளுக்கு கவலை அளித்திருந்தது.  

ஆனால் ஹாலில் இருந்த அனைவரும் இவர்களை தான் கவனித்துக் கொண்டிருந்தனர்.

"ஹு இஸ் ஷி"

" பாஸ் பேசிக்கொண்டிருக்கும் அந்தப் பெண் யார்”

"அது அபூர்வா தானே" தெரிந்தவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

"மாப்பிள...ஏண்டா அபிய பயமுறுத்துற" சந்தோஷின் வயிற்றில் குத்தியபடியே சிரித்தவன்

"எல்லோரும் வைட் செய்றாங்க பாரு...பார்ட்டி முடிஞ்சு பேசலாம் என்ன" அபூர்வாவை லேசாக அணைத்த படியே சொன்னவன் இருவரையும் மேடை அருகே அழைத்துச் சென்று அங்கே அமர வைத்து மைக்கை வாங்கிக் கொண்டு மேடைக்குச் சென்றான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "பைராகி" - முன்ஜென்மம் சொல்லும் கற்பனை வரலாற்று நாவல்...

படிக்க தவறாதீர்கள்..

ரளவு பெரிய ஹால் அது. வண்ண விளக்குகளாலும் செயற்கை மலர்களாலும் நேர்த்தியாக அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஒரு பக்கத்தில் உணவு ஐட்டங்கள் பப்பே முறையில் பரிமாற ஆயத்தங்கள் செய்யப்பட்டிருந்தன. இன்னொரு பக்கம் டி.ஜெ ஏற்பாடாகி இருந்தது. ஆங்காங்கே  வட்ட மேஜைகள் சுற்றி போடப்பட்டிருந்த நாற்காலிகளில் சிலர் அமர்ந்திருந்தனர். சிலர் கையில் ஜூஸ் கோப்பையைப் பற்றிபடியே நின்று கொண்டிருந்தனர்.

நடுவில் மேடை போல் இருந்த  இடத்தில் அனைவரையும் நோக்கி சித்தார்த் மைக் பிடித்து பேச ஆரம்பித்திருந்தான்.

"ஹாய் ப்ரண்ட்ஸ்" அவன் சொல்லவும் அங்கிருந்தோர் அனைவரும் "ஹாய்" என்று உற்சாகமாகினர்.

"எல்லோரும் ஆல்ரெடி பார்ட்டி மூடில் இருக்கீங்க. சோ நான் நிறைய சமயம் எடுத்துக் கொள்ளப்போவதில்லை"

"தேங்க்ஸ் டு ஆல் நம்ம முந்திய ப்ராஜெக்ட் வெற்றிகரமாக முடித்ததுக்கு. அண்ட் வெல்கம் நியூ டீம். நமது நிறுவனத்தில் வேலை செய்வது உங்களுக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் பணியில் மேம்பாட்டினையும் தரும் என நம்புகிறேன்"

"அண்ட் ப்ரண்ட்ஸ் உங்க எல்லோருக்கும் தெரிந்திருக்கும் இருந்தாலும் புதியவர்களுக்காக மீண்டும் ஒரு முறை நினைவு படுத்த விரும்புகிறேன்"

" திஸ் ஸ் எ ஸ்ட்ரிக்ட் நான்-லிக்கர் நான்-ஸ்மோக் பார்ட்டி.. பார்ட்டி சரியாக 11 க்கு முடிந்து விடும். அண்ட் பார்ட்டிக்கு வந்திருக்கும் லேடீஸ் பத்திரமா வீடு திரும்ப அரேன்ஜ்மன்ட்ஸ் இருக்கு. யூ கேன் யுடிலைஸ் இட்”

"சோ என்ஜாய் யுவர்செல்ப்...அண்ட் நம்ம வழக்கப்படி வி ஸ்டார்ட் வித் கேக் கட்டிங் செரிமோனி"

சரளமான ஆங்கிலத்தில் புன்னகையுடன் அவன் பேசி முடித்ததும் கூட்டத்தினர் அனைவரும் கை தட்டி ஆரவாரம் செய்தனர். என்ன ஒழுங்கா பேசினேனா என்பது போல அவன் அபூர்வாவை பார்த்து புருவம் உயர்த்தி கண்களாலே கேட்டான். அவளும் பெரிய புன்னகை ஒன்றை பதிலாக தந்தாள்.

சோனாலி நீரஜ் கேக்குடன் வரவும் எல்லோரையும் அருகில் வாருங்கள் அன்று கையசைத்து அழைத்தவன் அபூர்வாவை வா என்று அழைத்தான்.

சந்தோஷையும் உடன் அழைத்து மேடையின் மைய பகுதிக்கு வந்தவள் கையில் கத்தியை கொடுத்து

"நவ் அவர் பாஸ் அபூர்வா வில் டூ தி ஹானர்ஸ்" எனவும் அவனைப் பார்த்து சிரித்தபடியே அங்கிருந்தோரைப் பார்த்து ஒரு புன்னகையை மட்டும் உதிர்த்து கேக் கட் செய்தாள்.

கேக் வெட்டியதும் அவளுக்கு முதல் துண்டினை ஊட்டியவன் சந்தோஷ் சோனாலி நீரஜ் என அனைவருக்கும் ஊட்டி விட்டான்.

"இவங்க நம்ம பாஸா" புதிய டீம்மை சேர்ந்தவர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.

"ஆன் பேப்பர்ஸ் நம்ம நிறுவனத்தின் ஓனர் அபூர்வா தான்" தெரிந்தவர்கள் சொல்லிக் கொண்டிருந்தனர்.

“நீ குட் பாய் சித்து. காட் உனக்கு கிப்ட் குடுத்து விட்டார்”  நிலாவை அவன் கையில் என்று ஒப்படைத்தாளோ அன்றிலிருந்தே சித்தார்த் தன்னுடைய அனைத்தையும் தனது காட்டஸ் ஏஞ்சலுக்கே சமர்ப்பணம் செய்து கொண்டிருக்கிறான் என்பதை அங்கிருந்தோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.