(Reading time: 27 - 54 minutes)

சிறிது நேரத்திற்குள் சமாளித்துக் கொண்டவள் அவனை விட்டு மெல்ல விலகவும் விளக்குகள் எறியவும் சரியாக இருக்க பாடலின் அர்த்தம் புரியாவிடினும் அதில் அனைவருமே லயித்துப் போயிருந்தனர்.

“நான் ப்ஃரெஷ் செய்துட்டு வரேன்” அபூர்வா செல்லவும்

“இந்த பாட்டு உனக்கும் நியாபகம் இருக்கா சந்தோஷ்” சித்தார்த் கேட்டான்.

“அங்கிள் பாடி ஒன்ஸ் கேட்ருக்கேன்.” சந்தோஷ்  சொல்ல

“மாமா அபிய மடில தூக்கி வச்சு பாடுவார். நான் நிலா பேபிய தூக்கி வச்சு அவர மாதிரியே இமிடேட் பண்ணுவேன்” சித்தார்த் உணர்ச்சி வசப்பட்டு பேசிக் கொண்டிருந்தான்.

அதற்குள் அபூர்வா அங்கே வருவதைக் கண்டு,” சித்து அபி வர்றா” என சந்தோஷ் சித்தார்த் காதுக்கருகே சென்று சொல்லவும்,

“என்ன ரகசியம் பேசிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும். ஆமா நீ என்ன இன்னிக்கு  இவன புதுசா மாப்பிள்ளைன்னு கூப்பிட்டுகிட்டு இருந்த” அபூர்வா இடுப்பில் கை வைத்து கேட்கவும் அவள் ஐந்து வயதில் இடுப்பில் கை வைத்துக் கொண்டு “வாட் சித்து” என்று கேட்டது நண்பர்கள் இருவருக்குமே நியாபகம் வந்து சிரித்தனர். அதை அவர்கள் சொல்லவும் அவளும் சிரித்தாள்.

“நீரஜ் நாங்க கிளம்புறோம். சோனு நீயும் கிளம்பு டைம் ஆச்சு நீரஜ் பார்த்துப்பான்” சித்தார்த் சொல்லவும் நீரஜ் சித்தார்த்திடம் தொழில் முறை விஷயங்கள் பேசி சில பைல்களை கொடுத்தான்.

“டேய் காலையிலேயே வந்திரு. இல்லைனா தடா போட சொல்லிருவேன்” சித்தார்த் சந்தோஷை மிரட்டி வழி அனுப்பி வைத்து தனது ஆடியை கிளப்பினான்.

“இன்னிக்கு ஏன் சித்து அந்த பாட்டு பாடின” அமைதியாக வந்தவள் திடீரென சித்தார்த்தைப் பார்த்து கேட்டாள்.

“தெரில பில்லி. பாடனும் போல இருந்துச்சு”

சித்தார்த் வெறிச்சோடி இருந்த சாலையில் காரை செலுத்திக் கொண்டிருக்க வானத்து நிலவு இவர்கள் காரை பின் தொடர்ந்து ஓடி வந்துக் கொண்டே இருந்தது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "பாயும் மழை நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

ள்ளிரவு பொழுது ஆகிவிட்டதால் விரைவில் வீடு வந்து சேர்ந்தனர்.

தன்னிடம் இருந்த சாவி கொண்டு வீட்டை திறந்தவள்,” சித்து நான் சேஞ் செய்து கொண்டு வரேன். மொட்டை மாடிக்குப் போவோமா...திரும்ப பாடுறியா நீ எனக்கு கேக்கணும் போல இருக்கு” அவள் கேட்கவும் சரி என்றவன் தனது அறைக்கு விரைந்தான்.

பௌர்ணமி முடிந்து இரு தினங்களே ஆகியிருந்த அந்த முழு நிலவு சித்தார்த் அபூர்வா அமர்ந்திருந்த மொட்டை மாடியை அடைந்து தனது தூதினை அவளிடம் சொல்ல காத்துக் கொண்டிருந்ததோ...

சித்தார்த் பாடலை பாட ஆரம்பிக்கவும் மெல்ல எழுந்து அந்த வான் நிலவை பார்த்தபடியே கைப்பிடி சுவரை பிடித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தாள் அபூர்வா..

மார்பில் ஊறும் உயிரே

சித்தார்த் பாடவும் அந்த நிலவில் விஜயகுமாரின் தாடியுடன் கூடிய அப்போதைய முகம் தெரியவும் ஒரு கணம் திடுக்கிட்ட அபூர்வா

“டாடி” என்று அந்த இருளின் நிசப்தத்தை கிழித்துக் கொண்டு நிலவில் தெரிந்த தந்தையை நோக்கி இரு கரம் நீட்டி தாவி பிடிக்க எத்தனித்தாள்.

திகைத்த சித்தார்த் ஒரே தாவலில் சென்று ஒரு கரம் நீட்டி அவளைப் பிடிக்க முற்பட்டான்.

“.பூ.....” அவன் அவளை அழைத்தது காற்றில் கலந்து சென்றது.

தொடரும்

Episode # 08

Episode # 10

{kunena_discuss:1080}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.