(Reading time: 27 - 54 minutes)

கேக் கட்டிங் முடிந்ததும் அங்கே ஓர் ஓரமாக சந்தோஷுடன் சென்று அமர்ந்து கொண்டாள் அபூர்வா.

“நீ போய் எல்லோரையும் கவனி சித்து” சித்தார்த் பொறுப்பான ஹோஸ்ட்டாக இருக்க வேண்டி அவனை அனுப்பி வைத்தாள்.

“எனக்கு இந்த பார்ட்டி எல்லாம் அவ்ளோ இன்டிரஸ்ட் இல்லை சந்தோஷ். எப்போவும் இப்படி ஒரு மூலையில் உக்கார்ந்து என்னோட ஐ பாட்ல ஏதாச்சும் படிச்சிட்டு இருப்பேன்”

“சித்காக தான் நீ வரன்னு அவன் சொல்லிருக்கான்” சந்தோஷ் சொல்லவும்

“நான் வரலைனா இவனும் ஏதாச்சும் சாக்கு போக்கு சொல்லி அவாய்ட் பண்ணிடுவான். இது நம்ம நிறுவனம்  பார்ட்டி. சோ அவன் இல்லாம நல்லா இருக்காதுல்ல” அவள் சந்தோஷையும் சேர்த்து “நம்ம நிறுவனம்” என்று கூறியதும்

“நீ மாறவே இல்ல அபி. சின்ன வயசில் எப்படி இருந்தியோ அப்படியே இருக்க” என்று வியந்தான் சந்தோஷ்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தமிழ் தென்றலின் "என் சிப்பிக்குள் நீ முத்து..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

“சரி நீ சொல்ல வந்தத முதல்ல சொல்லு” அபூர்வா சந்தோஷை தூண்டவே அவன் சொல்ல வருவதற்குள் அங்கு இரு ஜூஸ் கோப்பைகளுடன் வந்து சேர்ந்தான் சித்தார்த்.

“என்ன மாப்பிள்ள சொல்லிட்டியா” சந்தோஷைப் பார்த்து கண்ணடித்துக் கொண்டே அவனிடம் ஒரு கோப்பையை நீட்டியவன் மற்றொன்றை தான் பருகலானான்.

“அபிக்கு ஜூஸ்” சந்தோஷ் கேட்கவும் அபூர்வா வாய் விட்டு சிரித்தாள்.

“இது எனக்கு தான். ஐயா டேஸ்ட் பார்த்துட்டு குடுப்பார். இப்போ பார் வரிசையா இருக்க ஒவ்வொரு வகை ஜூசும் டேஸ்ட் பார்க்குறேன் பேர்வழின்னு என் தலையில் கட்டிட்டே இருப்பான்”

“ஆமா நீ ஒழுங்கா சாப்டா நான் ஏன் இப்படி செய்றேனாம்”

“எனக்கு இங்க இருக்க புட் ஐடம்ஸ் அவ்ளோ பிடிக்காது சந்தோஷ். வீட்ல அத்தை சமையலை ஒரு பிடி பிடிக்கிறேனா இல்லையானு கேளு”

“அதான் ஒரு கிலோ பால்கோவா மொத்தத்தையும் மொக்கினையே...அப்புறம் என்னத்த சாப்டியோ”

“இன்னமும் அப்படி தானா...முன்னே நீ டான்ஸ் முடிச்சு வந்ததும் அங்கிள் உனக்காக பால்கோவா வச்சுட்டு ரெடியா இருப்பார்ல. எங்களுக்கு ஒரு ஸ்பூன் மட்டும் குடுப்பியே. அங்கிள் எங்களுக்குன்னு வேற சாக்லேட்ஸ் வாங்கிட்டு வருவாரே” சந்தோஷ் சொல்லிக் கொண்டே போக அபூர்வா முகம் உடனேயே சோர்ந்து போயிற்று.

“பில்லி அங்க பாரேன் அந்த பிங்க் ட்ரஸ் பொண்ணு என்னையே லுக் விட்டுட்டு இருக்கா” சித்தார்த் உடனேயே அவளை திசை திருப்பி சந்தோஷ் பார்த்து கண்ணாலேயே சைகை செய்ய அவனும் புரிந்து கொண்டு பேச்சை மாற்றினான்.

“இங்க இருக்க எல்லா பொண்ணுங்களும் உன்னை தான் சைட் அடிச்சிட்டு இருக்காங்க” சந்தோஷ் சொல்லிவிட்டு ஐயோ என்று அபூர்வாவை பார்த்து உதட்டைக் கடித்துக் கொண்டான்.

“அது என்னவோ உண்மை தான். நீ பாரேன் டி ஜே ஸ்டார்ட் ஆகிருசுல்ல...இப்போ வரிசையா பொண்ணுங்க வந்து இவன ஆட கூப்பிடுவாங்க” அபூர்வா வெகு இயல்பாக சந்தோஷிடம் கூறவும் ஆச்சரியப்பட்டு போனான்.

அதற்குள் அபூர்வா ஜோசியம் சொன்னபடியே அவர்களை நோக்கி ஒரு பெண்கள் கூட்டமே வந்தது.

“சித். கேன் ஐ ஹாவ் எ டான்ஸ் வித் யூ” அவனிடம் கேட்க போ போ என்று அவனை அனுப்பி வைத்தாள் அபூர்வா.  

மிக நாகரீகமாகவே அங்கு அனைவரும் ஆடிக் கொண்டிருந்தனர்.

“சித்து பார்ட்டிக்கு என்று சில ரூல்ஸ் வச்சிருக்கான். என்ஜாய் செய்யணும் ஆனாலும் டீசென்டா லிமிட்டோட இருக்கணும்னு” சந்தோஷிடம் சொன்னாள் அபூர்வா.

இவர்கள் இவ்வாறு தமிழில் உரையாடிக் கொண்டிருந்த போது அருகில் இரு பெண்கள் வந்தமர்ந்தனர்.

“அவர் பாஸ் இஸ் சோ ஹன்சம்” ஒரு பெண் சொல்ல

“ஹி இஸ் சோ சார்மிங் அண்ட் வெரி இண்டேலிஜன்ட். பிரன்ட்லி டூ”

“வொர்க் ல ரொம்ப ஸ்ட்ரிக்டா”

“மண்டே இன்ட்ரோ செஷன் அட்டன்ட் செய்வில அப்போ உனக்கே புரியும்” ஹிந்தியில் அவ்விரு பெண்களும் உரையாடிக் கொண்டிருந்ததை அபூர்வா கேட்டு மனம் நிறைந்த பூரிப்பாய் புன்னகைத்தாள்.

“உனக்கு பொறாமையாவே இல்லையா அபி”

“ஏண்டா அப்படி கேக்குற”

“கொஞ்சமா பொசசிவ் கூட இல்லையா”

“ஹே சந்தோஷ் என்னாச்சு” அபூர்வா புருவங்கள் உயர்த்தி வியப்புடன் வினவினாள்.

“சித்துவ மத்த பொண்ணுங்களோட டான்ஸ் ஆடுன்னு அனுப்பி வைக்கிற. அவங்க அவன பத்தி ஹன்சம் அப்படி இப்படின்னு சொல்றாங்க ரசிச்சிட்டு இருக்க”

“என்ன சந்தோஷ் இன்னிக்கு நேத்தா இப்படி, அவன் பர்ஸ்ட் கிளாஸ் படிக்கிற போதில் இருந்தே தான் அவனுக்கு ஃபேன் கிளப் இருந்துச்சே”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.