(Reading time: 27 - 54 minutes)

ப்போ வேற இருந்தாலும் இப்போவும் அதே மாதிரி இருக்க முடியுதா உன்னால”

“ஏன் அப்போ இப்போ என்ன வித்தியாசம்”

“புரியாத மாதிரி கேக்காத அபி. நான் கேக்குறது உனக்கு புரியுது”

“எனக்கு புரியுது சந்தோஷ். நீ என்ன நினைக்கிற அப்படின்னு நல்லாவே புரியுது. இதுக்கு நான் பதில் சொல்றத விட சித்து என்ன பதில் சொன்னான்னு உனக்கு சொல்றேன்”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

அன்னா ஸ்வீட்டியின் "அதில் நாயகன் பேர் எழுது..." - காதல் கலந்த சரித்திர + குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

ப்போது பதினொன்றாம் வகுப்பு கோடை விடுமுறை சமயம். சித்தார்த் ரிஷிகேஷ் சென்றிருந்தான். அவனது யோகா குரு அவனை அழைத்துச் சென்றிருந்தார். அபூர்வா மெடிகல் என்ட்ரன்ஸ் கிளாஸ் போய் கொண்டிருந்தாள்.

ரிஷிகேஷ் ட்ரிப் முடித்து வந்தவனை அவனது வீட்டில் நிலா மட்டுமே வரவேற்றாள்.

“சித்து அண்ணா”

“நிலா பேபி” தனது செல்ல தங்கச்சி பாப்பாவை ஆசையாக அணைத்துக் கொண்டான் சித்தார்த். அவளுக்காக வாங்கி வந்த பரிசுப் பொருட்களை கொடுத்ததும் அவளுக்கு ஒரே ஆனந்தம். எப்போதும் எங்கேனும் சென்றால் மறக்காமல் ஏதேனும் நிலாவிற்கு வாங்கி வருவான் சித்தார்த்.

“சித்து நீ இப்படி அவளுக்கு செல்லம் குடுத்து குடுத்து கெடுக்கற சொல்லிட்டேன்” முறைப்புடன் எப்போதும் சொல்லும் அபூர்வா அங்கு இல்லாதது கண்டு துணுக்குற்றான்.

“அக்கா எங்கடா நிலா பேபி. கிளாஸ் போயிருக்காளா”

“இல்ல அண்ணா. அக்கா த்ரீ டேஸ்சா கிளாஸ் போகல. ரூம்குள்ளேயே இருக்கா. ஒழுங்கா சாப்பிடவும் மாட்டேன்குறா”

“ஏண்டா உடம்பு சரியில்லையா”

“நான் தொட்டு பார்த்தேனே ஜுரம் எல்லாம் இல்ல. அழுறா...அம்மாகிட்ட சொல்லாத சொன்னா ஆனா நான் சொல்லிட்டேன். அம்மாகிட்ட ஒன்னும் இல்லைன்னு சொல்லிட்டு ரகசியமா அழறா அண்ணா”

“அப்படியா... சரி வா வீட்டுக்கு போகலாம்”

நிலாவுடன் அபூர்வாவின் வீட்டிற்கு வந்த சித்தார்த் “அத்தை அபிக்கு என்ன உடம்புக்கு” என்று கேட்டபடியே தான் வந்தான்.

“சித்து கண்ணா. நீ வந்துட்டியா.. ட்ரிப் எல்லாம் எப்படி போச்சு”

“நல்ல எக்ஸ்பிரியன்ஸ் அத்தை. அபி எங்க அத்தை”

“அவ ரூம்ல இருக்கா...மூணு நாளா ஒரே டல்லா இருக்கா. கேட்டா ஒன்னுமில்லைன்னு சொல்றா. டாடியை மிஸ் பண்றியான்னு கேட்டாலும் இல்லைன்னு சொல்றா. எப்போவும் இப்படி இருக்க மாட்டா. ஒரு வேலை உன்ன தான் மிஸ் செய்திருப்பா போல” சித்தார்த்திடம் சொல்லிக் கொண்டே ரத்னாவதி

“அபி சித்து வந்திருக்கான் பாரு” என்று குரல் குடுத்தார்.

அப்போதும் அறையை விட்டு வெளியில் வரவில்லை அவள்.

“நானே போய் பார்க்குறேன் அத்தை” அனுமதி வாங்கிக் கொண்டு அறைக்குள் நுழைந்தான் சித்தார்த்.

கட்டிலில் முதுகு காட்டிக் கொண்டு ஒருக்களித்துப் படுத்திருந்தாள் அபூர்வா.

“பில்லி” சித்தார்த் அறை வாசலில் இருந்தபடியே அழைக்கவும் எழுந்து அமர்ந்து முழங்கால் மடித்து கவிழ்ந்து கொண்டாள்.

ஏதோ சரியில்லை என்று அவளைப் பார்த்ததுமே தெரிந்து கொண்டான் சித்தார்த். உடன் வந்த நிலாவிடம்

“நிலா பேபி அண்ணாவுக்கு அம்மாகிட்ட சொல்லி காபி போட்டு கொண்டு வரியா” எனவும்

“சரி அண்ணா...அக்கா உனக்கு வேணுமா” நிலா தன் தமக்கையிடம் கேட்க அபூர்வா வேண்டாம் என்று தலையை மட்டும் ஆட்டினாள்.

அவள் அருகில் சென்றவன் அவள் தலையை மெல்ல வருடிக் கொடுக்கவும் விசும்ப ஆரம்பித்தாள்.

“என்னடா பில்லி. நீயா அழுதுட்டு இருக்க.. சின்ன வயசில் அபி அழுதா டாடிக்கு வலிக்கும்னு சொல்லுவியே. எதுக்குமே அழாம தைரியமா இருப்பாளே என் பில்லி” அவன் கடைசியாக ‘என் பில்லி’ என்று சொல்லவும் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“உடம்பு சரியில்லையா பில்லி”

“ஹூம்கும்”

“மாமாவ மிஸ் பண்றியா”

ஆமாம் இல்லை என்று தலையை ஆட்டினாள். தன் தந்தையின் பணி குறித்து சிறு வயதிலேயே புரிதல் கொண்டவள். அதனால் தற்சமயம் கலக்கம் கொண்டிருப்பதன் காரணம் அதுவல்ல என்று அறிந்திருந்தான் சித்தார்த்.

அதற்குள் ரத்னாவதி காபி கொண்டு வரவே குடி என்று வற்புறுத்தி அபூர்வாவை குடிக்க வைத்தான் சித்தார்த்.

“வீட்டுகுள்ளேயே அடைஞ்சு இருக்கா. கிளாஸ் கூட போகல மூணு நாளாச்சு. கோயிலுக்கு போயிட்டு வரீங்களா” ரத்னாவதி சொல்லவும் சித்தார்த்க்கும் அதுவே சரியாக பட்டது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.