(Reading time: 27 - 54 minutes)

நீ என்னோட சித்து. எப்போவும் எனக்காக யோசிச்சு எல்லாத்தையும் செய்ற என்னோட சித்து”

“லவ்ன்னு ஒரு வோர்ட்ல நாம நம்மளோட அன்பை சுருக்கிக்க வேணாம் பில்லி. ஒரு ஆண் பெண் உறவில் லவ் அப்படிங்கறத தாண்டி நிறைய இருக்கு. ஃபியூச்சர்ல நம்ம ரெண்டு பேருக்குமே காதல் அப்படின்ற உணர்வு தோணுச்சுனா அப்போ பார்த்துக்கலாம் சரியா ”

“எப்படி சித்து இதெல்லாம் உனக்கு தெரியுது. நீ ரொம்பவே இன்டலிஜென்ட்”

“லூசு. உனக்கும் எல்லாமே தெரியும். அந்த பூஜா மேகம் போல உன்னோட அறிவ மறச்சுட்டா. நீ பொறந்ததில் இருந்தே ஞானக் குழந்தைன்னு மாமா சொல்வாரே. நான் ரிஷிகேஷ்ல நிறைய  ஞானிகளை  மீட் பண்ணேன். நீ கேட்ட கேள்வி எல்லாம் அவங்கள கேட்டேன். அவங்க எனக்கு புரிய வச்சது தான் உனக்கு சொல்லிருக்கேன். இன்னும் நாம தெரிஞ்சுக்க வேண்டியது நிறைய இருக்கு. போக போக தெரிஞ்சுக்கலாம்”

“நான் ஞானக் குழந்தையா...ஐயே” அபூர்வா தெளிவாகி விட்டிருந்தாள்.

“அது கண்டிப்பா உண்மை தான் பில்லி. உன்னோட பவர் உனக்கே தெரியல. ஆனா எனக்கு தெரியும். யூ வில் டூ வொண்டர்ஸ்” அன்று அவன் கூறியதை காலம் ஆமோதித்தது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஆதித்யா சரணின் "சிவன்யா" - விறுவிறுப்பான திகில் தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

ந்தோஷிடம் எல்லாவற்றையும் கூறியவள் ,”இப்போ சொல்லு எனக்கு சித்து மேல பொசசிவ் ஜெலஸ் எல்லாம் எப்படி இருக்கும்” என்று கேட்டாள்.

சந்தோஷ் ஏதோ கேட்க வாய் எடுத்த நேரம் அங்கே அரங்கத்தில் நீரஜ் மைக்கை பிடித்து

“நவ் சித்தார்த் வில் சிங் எ சாங் பார் ஆல் ஆப் அஸ்” என்றான்.

“சித்து எப்போவுமே சூப்பரா பாடுவான். நல்ல வேளை உன்னை பாட கூப்பிடல” சந்தோஷ் அபூர்வா காலை வாரினான்.

அபூர்வா நடனம் நன்றாக ஆடுவாள் என்ற போதிலும் பாட்டு பாடினால் குழந்தைகள் ரைம்ஸ் சொல்வது போலவே தான் இருக்கும்.

“கொழுப்புடா உனக்கு. இரு நாளைக்கு வீட்டுக்கு வருவில்ல கச்சேரி வச்சிடறேன்”

“அம்மா தாயே உன்னை கை எடுத்துக் கும்பிடுறேன்” சந்தோஷ் அபூர்வாவிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே மைக் பிடித்த சித்தார்த் என்ன பாடல் பாட வேண்டும் என்று அனைவரையும் கேட்டான்.

அனைவரும் ஆளாளுக்கு ஒரு பாட்டு சொல்ல “ஒகே எ சாங் பார் யூ அண்ட் எ சாங் பார் மீ” என்றவன் கரோகி செட் செய்து விட்டு “லைட்ஸ் ஆப்” என்றான்.

Hum tere bin ab reh nahi sakte

Tere bina kya wajood mera

Tujhse juda gar ho jaayenge

Toh khud se hi ho jaayenge judaa

Kyunki tum hi ho

Ab tum hi ho

Zindagi ab tum hi ho

Chain bhi, mera dard bhi

Meri aashiqui ab tum hi ho

அவன் பாடி முடித்ததும் அனைவருமே அவன் குரல் இனிமையிலும் அவன் பாடிய விதத்திலும் மெய் மறந்து லயித்து தேனுண்ட வண்டினை போல மயங்கி போயிருந்தனர்.

சிறிது நேரம் கழித்து பலத்த கைதட்டல் ஒலிக்கவும் லைட்ஸ் ஆன் செய்யப்பட எல்லோரும் ஓடி வந்து சித்தார்த்தை அலேக்காக தூக்கி ஆர்ப்பரித்தனர்.

ஒன்ஸ் மோர் ஒன்ஸ் மோர் என அனைவரும் கேட்க

“இட்ஸ் அல்ரெடி டைம். நவ் எ சாங் பார் மீ அண்ட் மை காட்டஸ் ஏஞ்சல்” என மைக்கை அபூர்வா நோக்கி சித்தார்த் நீட்டவும் அனைவரும் அபூர்வாவை திரும்பி பார்த்தனர்.

“என்ன சித்து இது” என்று கண்களாலேயே அவள் கேட்க புன்னகைத்தவன் திரும்பவும் லைட்ஸ் ஆப் செய்து கரோகி தவழ விட அந்த ஆரம்ப இசையைக் கேட்டவள் அதிர்ந்தாள்.

அரை இருட்டிலும் அவளது முக பாவங்களை பார்த்துக் கொண்டே இருந்த சித்தார்த் அவளது அதிர்ச்சி, பின் நெகிழ்ச்சி, பின் பரிதவிப்பு அத்தனையையும் உணர்ந்தான்.

ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!

ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!

வாழ்வு தொடங்கும் இடம் நீதானே!

வாழ்வு தொடங்கும் இடம் நீதானே!

வானம் முடியுமிடம் நீதானே!

காற்றைப் போல நீ வந்தாயே!

சுவாசமாக நீ நின்றாயே!

ஒரு நிமிடம் இங்கே நிறுத்தி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் சித்தார்த். கண்களில் நீர் வழிய இமை மூடி இருந்தவள் அவன் பாடலை நிறுத்தியவுடன் விழி விரித்த நொடி

மார்பில் ஊறும் உயிரே” என்று அவன் பாடிக் கொண்டே மேடையில் இருந்து இறங்கி வந்து அவளிடம் சென்று அவளை மெல்ல அணைத்துக் கொண்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.