(Reading time: 27 - 54 minutes)

நீ வேற பொண்ண லவ் பண்ணா என்ன விட்டு போயிருவியா. என்னையே லவ் பண்ணா என்கூடவே இருப்ப தானே”

“பில்லி இங்க பாரு. முதல்ல கண்ண துடை” அவள் கண்களை அவனே துடைத்து விட்டான்.

“நான் ரிஷிகேஷ் போய் கத்துகிட்டு வந்ததெல்லாம் உன்கிட்ட சொல்லனும்னு நினச்சேன். அதை நான் சொன்னாலே உனக்கு பதில் சொன்ன மாதிரி”

“என்ன சித்து” அவனை நோக்கி திரும்பி அமர்ந்தாள்.

“உனக்கு தெரியுமா பில்லி, எல்லா ஜீவராசிகளில் மனுஷன ஏன் உயர்வு அப்படின்னு சொல்றோம்”

“ஏன்னா மனுஷனுக்கு தான் சிந்திக்கும் திறன் உண்டு”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

வத்சலாவின் "வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

“ரைட். ஆனா மனுஷன் அந்த சிந்தனைய ஒரு வட்டத்துக்குள் சுருக்கி வச்சுட்டா அதுனால என்ன பயன்...சப்போஸ் சூரியன் இருக்கு சூரியன ஒரு சொம்பு குள்ள அடச்சு வச்சுட்டோம்ன்னு வை..என்ன யூஸ் சொல்லு”

“ஒரு பயனுமே இல்ல... சூரியன் பூமி முழுசுக்கும் தேவை.அப்போ தா லைப் கேன் பங்ஷன்”

அபூர்வா சித்தார்த்தோடு இணைந்து விவாதித்தாள்.

“அதே போல தான் நம்ம சிந்தனைகளும் ஒரு வட்டத்திலே அடங்கி இல்லாம விரிந்து இருக்கணும்”

“பறவைகள் விலங்குகள் மற்ற ஜீவ ராசிகள் சாப்பிடுவது தூங்குவது தன்னோட இனத்தை பெருக்குவது  ஸெல்ப் ப்ரொடெக்ஷன் இதை  மட்டும் செய்யும். இதைத் தாண்டி இயற்கையோட சில சேஞ்சஸ் சென்ஸ் பண்ணும். அதுவும் ஸெல்ப் டிபென்ஸ்க்கு தான் ”

“ஆனா ஹுமன் இஸ் சூபிரியர் க்ரியேடிவ்” அபூர்வா சொல்லவும்

“அது தான் பில்லி. ஹுமன் கிட்ட நிறைய பவர்ஸ் இருக்கு. நாம நம்மளோட இன்னர் பவர்ஸ் ரியலைஸ் பண்றதே இல்ல”

“ஹுமன் பிரைன் இஸ் சோ யுநீக் அப்படிதானே சித்து”

“ஆமா...நம்ம கிட்ட இருக்க அந்த கிப்ட் அதான் நம்ம சிந்தனைத் திறனை நாம நல்ல விஷயத்துக்கு பயன்படுத்தணும் பில்லி. உன்னோட அம்பிஷன் நினைவு இருக்கு தானே. இப்படி சித்து லவ் பண்றியா இல்லையான்னு மூணு நாள் சுருண்டு போய் அழுதுட்டு இருந்தா அதெல்லாம் எப்படி அசீவ் செய்வ”

“அது சரி தான் சித்து. ஆனாலும் நீ இன்னும் நான் கேட்டதுக்கு பதில் சொல்லவே இல்ல”

“லவ்ன்னா என்ன பில்லி. அன்பு. அது இந்த உலகத்தில் எல்லா உயிர் மேலேயும் நமக்கு இருக்கணும்னு திருக்குறள்ல படிச்சிருக்கோம்ல”

“அது எனக்கு தெரியும் சித்து. ஆனா ஒரு பொண்ணும் பையனும் லவ் பண்றது வேற தானே”

“பில்லி பொண்ணு பையன் இதை பயாலாஜி அண்ட் சைகாலஜி தாண்டி நாம எல்லோருமே எனர்ஜி பண்டல்ஸ்ன்னு பாரு ”

“ஹ்ம்ம்”

“என்ன ஹ்ம்ம்”

“மேன் இஸ் பொடன்ஷியல் எனர்ஜி வுமன் இஸ் கைனடிக் எனர்ஜி”

“புரியுது தானே. பெண் தான் அல்டிமேட் எனர்ஜி பார்ம். அதுனால தான் சக்தின்னு காட்டஸ் வர்ஷிப் பண்றோம். ஒரு பெண்ணால தான் ஆண் அப்படின்ற ஸ்டாட்டிக் பார்ம டிரைவிங் ஃபோர்ஸா செலுத்த முடியும். அதே சமயம் பெண்ணோட ஷக்திய சரியா சேனளைஸ் செய்வது ஆண். இல்லைனா அந்த அபண்டன்ட் எனெர்ஜி பயனில்லாம போய்டும்”

“அர்தநாரீஸ்வரர்”

“யெஸ்.அது ஒரு கான்சப்ட் பில்லி. ஆண் பெண் இருவரும் சரிசமமா இணைந்தா தான் தி வேர்ல்ட் கேன் கீப் கோயிங்”

“பில்லி நான் இன்னிக்கு சித்துவா உன் முன்னாடி இருக்கேன்னா அது உன்னால தான். நீ என் கூட பிசிகல்லி இருந்தாலும் இல்லைனாலும் என்னோட டிரைவிங் போர்ஸ் என்னோட ஷக்தி நீ தான்”

“யூ ஆர்  பில்லர் ஆஃப் ஸ்டெரந்த் பார் மீ சித்து”

“சரி இப்போ உன்னோட சந்தேகத்துக்கு வருவோம். கோபியர் எல்லாம் கிருஷ்ணர் மேல பிரியமா இருந்தப்போ ராதைக்குப் பொறாமை வந்துச்சே..அப்போ கிருஷ்ணர் என்ன சொன்னார்”

“அவர் ராதாவா மாறிட்டார். நான் தான் நீ. நீ தான் நான். என் மேல பிரியம் வச்சா அது உன் மேல பிரியம் வச்சது போலன்னு சொன்னார்”

“சித்து தான் அபி. அபி தான் சித்து. என் மேல யாராச்சும் பிரியம் வச்சா அது அபி மேல பிரியம் வைக்கிற மாதிரி தானே” அவள் மூக்கைப் பிடித்து ஆட்டினான்.

“இப்போ சொல்லு  என்ன லவ் பண்றியா சித்துன்னு நீ கேட்டா என்ன அர்த்தம்”

“நான் என்னையவே லவ் பன்றேனான்னு கேக்குற மாதிரி”

“நமக்கு இன்னும் நிறைய டைம் இருக்கு பில்லி. நாம ஸ்கூல் கூட படிச்சு முடிக்கல இன்னும். ஃபியுச்சர்ல  உனக்கோ எனக்கோ  யாரையாச்சும் பிடிச்சு போகலாம். நாம அவங்கள கல்யாணம்  பண்ணிக்கலாம். இல்ல நமக்குள்ளேயே அந்த ஈர்ப்பு வரலாம். அது அப்போ வரும் போது வி வில் பேஸ் இட்.”

“இப்போதைக்கு நாம நல்லா படிச்சு நம்ம அம்பிஷன் அசீவ் செய்யணும். அதுக்கு எப்போவும் போல நீயும் நானும் ஒருத்தர்க்கு ஒருத்தர் பலமா இருக்கணும். எனக்கு நீ எப்போவும் என்னோட செல்ல பில்லி தான். என்னோட காட்டஸ் ஏஞ்சல். என்னோட ஷக்தி”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.