(Reading time: 15 - 29 minutes)

அமைச்சனாகி விட்டேன் அரசர் ஆணையிட்டு விட்டார். நாளை முதல் இந்தக் காட்டுக்கு நான் ஓர் அமைச்சன்' என்று சொல்லிப் பெருமைப் பட்டுக் கொண்டது.

  

முதலில் அந்த முயல்கள் அதன் பேச்சை நம்ப வில்லை. ஆனால் அது நடந்த செய்திகளை யெல்லாம் தொகுத்துக் கூறிய பொழுது, அந்த முயல்கள் எல்லாம் நம்பின. இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடு வதற்காக அந்தக் குகையின் எதிரில் அன்று நிலா விருந்து நடத்தின.

  

முயல் மறு நாள் காலை அரசவைக்குச் சென்று அமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொண்டது.

  

அரசவை வேலையெல்லாம் முடிந்து கலையப் போகிற நேரம் ஒரு பூனைக் குட்டி ஓடி வந்தது. "அரசே , பக்கத்துக் காட்டுக்குப் போயிருந்தேன். அந்தக் காட்டரசன் நம் காட்டின் மீது படையெடுக்கத் திட்டமிட்டிருக்கிறான். அங்கே இதே பேச்சாய் இருக் கிறது. படை திரட்டுகிறார்கள். எப்போது பாய்ந்து வருகிறார்கள் என்பது தெரியவில்லை , எதற்கும் நாம் அணியமாக இருக்க வேண்டும்'' என்று சொல்லி விட்டுச் சென்றது.

  

உடனே அவையில் இருந்த எல்லா விலங்குகளையும் போகச் சொல்லிவிட்டு அரசனும், அமைச்சர்களும் மட்டும் கமுக்கமாக இருந்து ஆலோசனை நடத்தினார்கள்.

  

படையெடுப்பை எப்படிச் சமாளிப்பது என்று ஒவ்வொரு அமைச்சனும் தம் தம் கருத்தை எடுத்துச் சொன்னார்கள்.

  

அமைச்சர் வேலனார் என்ற யானை , "அரசே, எதிரிகளின் காட்டில் இருப்பவை அனைத்தும் வலு வில்லாத சிறு விலங்குகளே. அவைகளை நம் காட்டு எல்லைக்குள்ளேயே வர விடாமல் தடுப்பதற்கு மிக எளிய வழி ஒன்று இருக்கிறது. நம் காட்டில் மொத்தம் முந்நூறு யானைகள் உள்ளன. இந்த முந்நூறு யானைகளையும் அடுத்த காட்டின் எல்லையிலேயே வரிசையாக

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.