(Reading time: 15 - 29 minutes)

  

''அடுத்த காட்டு அரசர் ஏதோ ஒரு தவறான தூண்டுதலால் இந்தப் போரைத்தொடங்க எண்ணி யிருந்தால் அவரிடம் தக்க முறையில் பேசி அவருடைய எண்ணம் சரியல்ல என்று எடுத்துக் காட்டிப் போரை நிறுத்த வேண்டியதே முதலில் நாம் செய்ய வேண்டியதாகும். இதனால் நம் வீரத்திற்குக் குறை என்று நினைக்கக் கூடாது. இது நம் இனங்கள் வாழ்வு பெற நல்ல முறை என்று எண்ண வேண்டும்.

  

"அரசே, இந்தச் சிறியவனின் கருத்தை ஏற்று அதற்குரிய நடவடிக்கைகளைச் செய்ய வேண்டிக் கொள்கிறேன்.'' இதைக் கேட்ட சிங்கம், முயல் குட்டியே உன் கருத்து சரிதான். ஆனால் இதை நிறைவேற்றுவதில் தான் தொல்லை இருக்கிறது. அந்த மூட அரசன் நல்ல எண்ணத்தில் இதை ஏற்றுக் கொண்டால் எல்லாம் நல்ல படியாக முடியும். ஆனால் நாம் போருக்குப் பயந்த கோழைகள் என்றும், அதனால் தான் நாம் சமாதானம் பேச வருகிறோம் என்றும் அவன் நினைத்தால் அதைவிடக் கேவல மானது ஒன்றுமில்லை.

  

மன்னர் பெருமானே, தாங்கள் ஆணையிட்டால் நானே அடுத்த காட்டுக்குப் போய் அந்தக் காட்டா சனைச் சந்தித்து. சமாதானம் பேசிக் கொண்டு வரு கிறேன். இதனால் தங்கள் பெருமைக்குச் சிறிதும் களங்கம் ஏற்படாதபடி பார்த்துக் கொள்வேன். நம் விலங்கினத்தின் நன்மையை முன்னிட்டுத் தாங்கள் என் கருத்தை ஏற்று எனக்குக் கட்டளையிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்."

  

மற்ற அமைச்சர்களுக்கு முயல் சொன்ன கருத்துச் சரியாக தோன்றாவிட்டாலும், சிங்க அரசன் அதை ஊக்கப்படுத்திப் பேசியதால் அவை வாய் மூடிக் கொண்டிருந்தன. சிங்கம் சரி என்று நினைக்கிற ஒரு கருத்தை மறுத்துச் சொன்னால் அதற்குக் கோபம் வந்து விடும் என்று கருதியே அவை பேசாமல் இருந்தன.

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.