(Reading time: 15 - 29 minutes)

அடுத்து நந்தியார் என்ற அமைச்சர் காட்டெருது தன் கருத்தைச் சொல்லியது.

  

"மன்னர் பிரான் அவர்களே, நரியார் சொன்ன ஆலோசனை வரவேற்கத் தக்கதே. ஆனால் நாம் உளவு பார்த்து மறுபடியும் ஆலோசனை செய்து நட வடிக்கை எடுப்பதற்குச் சிறிது காலம் செல்லும். அதற்குள் எதிரி படையெடுத்து வந்து விட்டால் அதைச் சமாளிப்பதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். ஆகவே உடனடியாக நம் காட்டில் உள்ள வலிவு மிக்க விலங்குகள் அனைத்தையும் திரட்டிப் போர்ப்பயிற்சி அளிக்க வேண்டும். எதிரி எந்த நேரத் தில் நுழைந்தாலும் விரட்டியடிக்க நாம் விழிப்போடு இருக்க வேண்டும்."

  

நான்கு அமைச்சர்களும் கூறிய கருத்துக்களைக் கவனமாகக் கேட்டுக் கொண்டிந்த சிங்கமா மன்னர், ஒரு சிறிய உறுமலுடன் நிமிர்ந்து உட்கார்ந்தார்.

  

"எங்கே அந்தக் குட்டிப் பயல்?'' என்று கேட்டுக் கொண்டே சின்ன முயல் எங்கே இருக்கிறது என்று திரும்பித் திரும்பிப் பார்த்தார்.

  

"அரசே, இதோ இருக்கிறேன் என்று கூறிக் கொண்டே முன்னால் தாவி வந்தது முயல்.

  

"நான்கு அமைச்சர்களும் தங்கள் கருத்தைச் சொல்லி விட்டார்கள். நீ என்ன சொல்லுகிறாய்; என்று அலட்சியமாகக் கேட்டது சிங்கம்.

  

"மன்னர் பெருமானே, போர் இல்லாத காலத்திலேயே உணவுக்காகவென்றும் மனிதர்கள் வேட்டை யாடுவதாலும் நம்முடைய விலங்கு இனங்கள் நாள் தோறும் குறைந்து கொண்டே வருகின்றன. இந்த நிலையில் போர் ஒன்று தோன்றுமானால் இரண்டு பக்கத்திலும் ஏராளமான விலங்குகள் தேவை யில்லாமல் கொல்லப்படும்; இந்தப் போரைத் தவிர்த்து நம் விலங்கு இனங்கள் பூண்டோடு அழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது தங்களைப்போன்ற மேலான அரசர்களின் கடமையாகும்.

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.