(Reading time: 15 - 29 minutes)

  

பொதுவாகச் சிங்கங்கள் பகலில் தான் உறங்குவது வழக்கம். இரவில் அவை மிகச் சுறுசுறுப்பாக இருக்கும். ஆனால் அந்தக் கிழட்டுச் சிங்கமோ அந்த இரவு நேரத் திலும் குறட்டை விட்டுக் கொண்டிருந்தது வியப்பாய் இருந்தது.

  

முயல் அதன் முன்னே போய்ச் சற்று தொலைவில் நின்று கொண்டு மன்னவா, மன்னவா'' என்று அழைத்தது. மன்னவன் காதில் அந்தச் சின்னவன் குரல் எட்டவில்லை . முயல் தன் காலடியில் கிடந்த ஒரு சின்னக் கல்லை எடுத்து அந்தக் கிழட்டுச் சிங்கத்தின் மீது வீசியெறிந்தது. சிறிது புரண்டு படுத்த அந்தச் சிங்கம் "சோதிடர் வந்து விட்டாரா?'' என்று கூறிக்கொண்டே கண் விழித்தது.

  

எதிரில் ஒரு முயல் நிற்பதைப் பார்த்ததும் அதற்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.

  

"கடவுளின் தூதரே, நலம் தானா? சிவபெருமான் பார்வதி தேவி எல்லாரும் நலம்தானா?'' என்று கேட்டது.

  

முயலுக்கு ஒரு ஐயம் தோன்றியது. இத்த கிழட்டுச் சிங்கம் உண்மையில் அரசர் தானா? இல்லை அரைப் பைத்தியமா என்று நினைத்தது. இருந்தாலும், அது அரசனாகத்தான் இருக்க வேண்டும் என்று முடிவு கட்டிக் கொண்டு அதனுடன் பேசத் தொடங்கியது.

  

"அரசே, என்னைக் கண்டவுடன் தாங்கள் இவ்வளவு மகிழ்ச்சி யடையக் காரணம் என்ன? தெரிந்து கொள்ளலாமா?'' என்று கேட்டது.

  

சிவபெருமான் தூதரே, உங்களைப் பார்த்ததால் என் கவலை எல்லாம் தீர்ந்து விட்டது. இரண்டு நாட்களுக்கு முன் என் இனத்தவர்கள் ஒரு மானிடக் கிழவனை இங்கு பிடித்து வந்தார்கள். அவன் யார் என்று விசாரித்தபோது பட்டணத்து ஆலமரத்தடியில் சோதிடம் சொல்பவன் என்று தெரிந்தது. என் ஜாதகத்தைப் பார்த்து விட்டு இந்த வாரத்திற்குள் போர் தொடங்கினால்

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.