(Reading time: 15 - 29 minutes)

தாக்கினால் அரைமணி நேரத்தில் ஒன்று கூட மிஞ்சாமல் போய்விடும்.

  

யாரோ வழியில் அகப்பட்ட சோதிடன் தான் உயிர் பிழைத்துப் போவதற்காகச் சொல்லிய பொய்யு ரையை நம்பிக் கொண்டு தாங்கள் போராடப் புறப் படுவது பேதைமையாகும்.

  

"இந்த வழியாக வந்த நான் நம் அரசரைப் பார்த்து வாழ்த்துப் பெற்றுச் செல்லலாம் என்று உள்ளே வந்தேன். தாங்களோ பாதுகாப்பே இல்லாமல் தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள். சரியான வலுவில்லாமல் பகையைத் தேடிக் கொள்வது நமக்கே தீமையாக முடியும்.

  

பக்கத்துக் காட்டில் உள்ளவர்கள் போரைப் பற்றியே நினைக்காமல் இருக்கும் போது நீங்கள் ஓர் போரை உண்டாக்கி வீணாகப் பல உயிர்களை இழக்க முடிவு செய்திருப்பது சரியல்ல.

  

"தாங்கள் விரும்பினால், நான் பக்கத்துக்காட்டு அரசனுடன் தங்களுக்கு நட்பு ஏற்படச் செய்கிறேன். இருவரும் நண்பர்களாகவும் ஒற்றுமையாகவும் இருந்து எங்களையெல்லாம் காப்பாற்ற வேண்டுகிறேன்.''

  

முயலைச் சிவபெருமான் தூதரென்றே நினைத்துக் கொண்டிருந்த கிழட்டுச் சிங்கம் அதன் சொல்லுக்கு மதிப்பு அளித்தது.

  

"தூதரே உங்கள் பேச்சில் உண்மை இருக்கிறது. உங்கள் கருத்துப் படியே நான் நடக்க விரும்புகிறேன். அடுத்த காட்டு அரசனுக்கு என்னை நண்பனாக்கு வதை நான் வரவேற்கிறேன்'' என்று கிழட்டுச்சிங்கம் கூறியது.

  

அடுத்த நாள் மாலையில் ஓர் ஆலமரத்தடிக்கு வந்திருக்கும் படியும் அந்த மரத்தடிக்கு அடுத்த காட்டு அரசனை அழைத்து வருவதாகவும் சொல்லி விட்டு முயல் அங்கிருந்து கிளம்பியது.

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.