(Reading time: 10 - 20 minutes)

இரண்டு சிட்டுக் குருவிகளுக்கும் அந்தப் பெண்மணி அன்பு முத்தம் கொடுத்தாள்.

  

"குழந்தைகளே உங்களுக்கு என்ன் வேண்டும்?” என்று கேட்டாள் அந்தப் பெண் மணி.

  

அம்மா தாங்கள் யார்?” என்று ஆண் குருவி கேட்டது.

  

குழந்தைகளே, நான்தான் கடல் தேவதை. உங்களுக்கு என்ன வேண்டும், கேளுங்கள் நான் தருகிறேன்” என்றாள் அந்தப் பெண்மணி.

  

சிட்டுக் குருவிகள் அவளை நிமிர்ந்து பார்த்தன.

  

"தாயே! எங்களுக்கு எந்தக் குறையும் இல்லை நாங்கள் மனநிறைவோடு இருக்கிறோம். தங்களிடம் என்ன கேட்பதென்றே தெரியவில்லை" என்று கூறின.

  

"நல்ல குழந்தைகள்! இருந்தாலும் நான் உங்களுக்கு ஒரு நல்ல மொழி சொல்லு கிறேன். அதைக் கேட்டு நடங்கள். உங்கள் வாழ்வு என்றும் பயனுள்ளதாக இருக்கும். அதனால் மிக்க மகிழ்ச்சியைக் காண்பீர்கள்” என்று கூறினாள் கடல் தேவதை.

  

'சொல்லுங்கள் அம்மா!' என்று இரண்டு சிட்டுக் குருவிகளும் பணிவோடு கேட்டன.

  

"குழந்தைகளே, எல்லாரிடமும் அன்பு செலுத்துங்கள். நல்லவர்களுக்கு உதவி செய்யுங்கள்” என்று கூறினாள் கடல் தேவதை.

  

அப்படியே செய்கிறோம் அம்மா! உங்களை மறுபடி எங்கே பார்க்கலாம்?’ என்று சிட்டுக் குருவிகள் கேட்டன.

  

'குழந்தைகளே,நீங்கள் என்னைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தால், கடற்கரைக்குப் பறந்து வாருங்கள். கரையோரத்தில் நின்று கொண்டு 'அம்மா' என்று அழைத்தால் நான் ஓடோடி வருவேன்’ என்று கூறினாள் கடல் தேவதை. குருவிகள் தேவதையிடம், போய் வருகிறோம் என்று சொல்லிக் கொண்டு தங்கள் கூட்டுக்குத் திரும்பின.

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.