(Reading time: 9 - 17 minutes)
காகித மாளிகை
காகித மாளிகை

Flexi Classics தொடர்கதை - காகித மாளிகை - 04 - (முப்பாள ரங்கநாயகம்ம) (தமிழில் - பா. பாலசுப்பிரமணியன்)

லியாண நாள் மாலை பிள்ளை வீட்டார் வந்து விடுதியில் இறங்கியிருக்கிறார்கள் என்ற செய்தி கேட்டதும், பந்தலுக்குப் பூமாலை கட்டிக்கொண்டிருந்த நான் அப்படி அப்படியே விட்டுவிட்டு, கீழே குதித்து ஓடினேன். அந்த மூஉலக அழகனை, உலகப் புகழ் வீரனை இனியும் பார்க்கவில்லை என்றால் உயிர் நிற்காது. விடுதியில் அனைவரும் கண்டபடித் திரிந்து கொண்டிருந்தனர். மணமகனான அரசகுமாரனுக்காகத் தேடிக்கொண்டு புறப்பட்டேன்! அப்பொழுதுதான் அந்த அறையிலிருந்து ஐந்தாறு 'சூட்' போட்டவர்கள் சத்தமாகப் பேசிக்கொண்டே வெளியே வந்தனர். அவர்களெல்லாம் அரசகுமாரனின் தோழர்கள் போலும்! அறையில் அடி எடுத்து வைத்தேன். அவர் துணி மாற்றி உடுத்திக்கொண்டு தனியாக உட்கார்ந்திருந்தார். கிளாஸ்கோ மல்வேட்டி, வெள்ளைச் சட்டையும் உடுத்தி இருந்தார். இருக்கும் இரண்டு கண்களையும் அகலத் திறந்து உற்றுப் பார்த்து என்னை நானே அறிமுகப்படுத்திக் கொண்டேன் - "வணக்கம்!"

"வணக்கம்! வாங்க."

"நான் பானுமதியின் அண்ணன். பெயர் கேசவ ராவ். உங்கெளெப் பாக்கணும்னு......."

"உக்காருங்க!"

நான் வேறொரு நாற்காலியில் உட்கார்ந்தேன். அவர் சிகரெட் கொடுக்க வந்தார்.

"நோ, தாங்க்ஸ்! பழக்கம் இல்லே" என்று சிரித்தேன்.

"இந்த நாட்கள்ளே ஆச்சரியந்தான்!" அவர் சிகரெட் பற்றவைத்துக் கால்மேல் கால் போட்டுக்கொண்டு பின் பக்கம் சாய்ந்து கம்பீரமாகப் புகை விட்டுக் கொண்டிருந்தார். சிவப்பாக ஒல்லியாக அழகாகவே இருந்தார். முடி ஒன்றும் சுருட்டையாக இல்லை. அகன்ற நெற்றியே தவிர உறுதியான மார்பகம் இல்லை. புஜாங்கம், சல்லடம் ஒன்றும் இல்லை. மொத்தத்தில் அழகானவர். பானுவுக்கு ஏற்றவர். தங்கு தடையில்லாமல் பேசவில்லை. மணமகன் என்ற கம்பீரத்தைக் கொஞ்சம் காட்டுகிறார் போலும். "உங்களைப் பாக்கணும்னு எவ்வளவோ நினெச்சிக்கிட்டிருந்தேன். தங்கையெக் கேட்டதுக்கு 'மூஉலக அழகன் உலகப்புகழ் வீரன்'னு சொன்னா."

"ஜனரஞ்சகமான சினிமாப் படங்க நிறெய பாக்கறாப் போல இருக்குது. இப்போ நீங்க என்ன நினெக்கிறீங்க?" என்றார் சிரித்துக்கொண்டு.

"கொண்ணுட்டீங்களே! நான் பொம்பளெ இல்லே இல்லியா! எதெ நினெச்சாலும் சொல்லிட்றதுக்கு" என்றேன். அப்படி எங்கள் உரையாடல் மகிழ்ச்சியுடன் நடைபெற்றது. அவர் அறிவாற்றலுடன் நுட்பமாகவும் பேசினார். ஓர் அரைமணி நேரம் உட்கார்ந்திருந்து வந்துவிட்டேன். மணமகளாக உட்கார்ந்திருந்த பானுவிடம் வந்து எல்லாவற்றையும்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.