(Reading time: 7 - 14 minutes)
காகித மாளிகை
காகித மாளிகை

சாமான்களெ இங்கெ அங்கே மாத்திக்கிட்டிருந்தா கஷ்டமா இருக்குமில்லே? நீங்க சௌக்கியமா? பத்து மணிவரெக்கும் என்ன வேலெங்க? இதுவரெக்கும் பொம்பளெங்க தனியா இருக்கவேண்டியதுதானா?" என்றேன்.

"ஏன்? உங்க தங்கெ தைரியசாலி இல்லே! குளிச்சிட்டு வர்றேன்!" என்று சொல்லிக் கொண்டே புழக்கடைப் பக்கம் சென்றார்.

சாப்பிட்டு முடித்ததும் தூக்கம் அழுத்திக்கொண்டு வந்தது. 'பானு சுகமா இருக்கறா, அதுபோதும்!' என்று எண்ணிக்கொண்டே தூக்கத்தில் நழுவிவிட்டேன்.

வாரத்திற்கு ஒரு முறையாவது எதையாவது வாங்கிக் கொண்டு சென்று பானுவையும் மருமகனையும் பார்த்து விட்டு, ஒவ்வொரு முறை சாப்பிட்டுவிட்டுப் போவது வழக்கமாகி விட்டது. எப்போதோ ஒரு முறையே தவிர மாமாவைப் பார்ப்பது அரிதாக இருந்தது. அவர் வீட்டில் இருக்கும் காலம் மிகக் குறைவு. பானு தனியாக ஏதாவது படித்துக் கொண்டோ, தைத்துக் கொண்டோ, மகனுடன் விளையாடிக் கொண்டோ இருப்பாள். என்னைப் பார்த்ததும் போன உயிர் மீண்டு வந்தாற்போல் கைகளைப் பிடித்துக் கொண்டு ஆசையோடு பேசுவாள். "அப்பப்பா! இந்தத் தனிமையை எப்படித் தாங்கிக்கிறே பானூ?" என்றால் "என்ன செய்யச் சொல்றே?" என்றாள் வேதனையுடன்.

ரண்டு மூன்று மாதங்களில் நான் கிரகித்தது என்ன வென்றால் பானு அமைதி யில்லாமல் அவதிப்படுகிறாள்; துன்பத்துள் முழுகிக்கொண்டே இருக்கிறாள்; இன்பத்திற்குத் தூரமானவள் போலச் சுமையுடன் நாட்களைக் கடத்திக்கொண்டிருக்கிறாள். இடி விழுந்தவன் போல் அதிர்ச்சி யடைந்தேன். பானு அமைதி யில்லாமல் அவதிப்படுவதா? துக்கத்துக்குள் முழுகிப் போவதா?

காரணம்? எவ்வளவு சிந்தித்தாலும் ஒன்றும் புரியவில்லை. பானு மட்டும் மிகவும் மாறிவிட்டாள். ஏனோதானோ என்று அலட்சியமாக, எதைப் பற்றியும் அக்கறை இல்லாமல் நடந்து வருகிறாள். மாமா ஏதோ கேட்கிறார். எடுத்துக் கொடுக்கிறாள். இல்லை என்றால் சுருக்கமாகப் பதில் சொல்கிறாள்-- அவ்வளவு தான். கணவன் மனைவியர் இருவரும் சேர்ந்து அன்போடு அதிகமாக உரையாடுவது என்பது அருமை. மழலை மொழி பேசிக்கொண்டு வீடு முழுவதும் பம்பரம் போலச் சுற்றிவரும் மகனை இருவரும் சேர்ந்து விளையாட்டுக் காட்டுவது ஆகட்டும், அவனைக் குறித்துப் பெருமையாகப் பேசிக்கொள்வது ஆகட்டும் நான் பார்க்க வில்லை -- இன்னும் சொல்லப்போனால் மகனைத் தந்தை எப்பொழுதேனும்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.