(Reading time: 19 - 38 minutes)
காகித மாளிகை
காகித மாளிகை

அந்த அம்மாவோட குறிப்பெப் புரிஞ்சிகிட்ட பாட்டி ஏதோ தட்சணெ கொடுக்கறேன்னு சொல்லி வாக்கு குடுத்து மருமகனெ அழெச் சிட்டு வந்தா. பண்டிகெ நாள் மருமகளெயும் மகளெயும் சேத்து வெக்கற்துக்கே இந்த முயற்சியெல்லாம்-- ஆனா மாமா விருந்து சாப்ட்டுட்டு வெத்தலெ பாக்கோட இருந்த ரூபாங்களெ ஜேபியிலெ போட்டுக்கிட்டு புறப்பட்டுப் போயிட்டாராம். பாட்டி துக்கப்பட்டுக்கிட் டிருந்தா அத்தெ ஆறுதல் சொன்னாங்களாம். 'அம்மா! ஏன் அவ்வளவு வேதனெ படற? நமக்குப் புராணக் கதெங்க தெரிஞ்சதுதானே? சீதா தேவியெ விலக்கி வெச்ச ஸ்ரீ ராமச்சந்திரன் மறுபடியும் ஏத்துக்கலியா? காட்லே தமயந்தியெ விட்டுப் போன நளச் சக்கரவர்த்தி மறுபடியும் சேந்துக்கலியா? சாவித்ரியெத் தனிய விட்டுட்டு செத்துப்போன சத்தியவான் மறு படியும் உயிரோட வரல்லியா? கஷ்டப்பட்டவங்கெல்லாம் ஒண்ணுசேந்து சுகப்படலியா? தர்மத்துக்குத் தோல்வி வந்ததுன்னு எங்கேயாவது கேட்டிருக்கறமா? ஏம்மா, எல்லாம் தெரிஞ் சிருந்தும் வேதனெ படறே?'

அத்தெ அதே தைரியத்தோட எதிர்காலத்து மேலெ ஏதோ நம்பிக்கையோட நாலு வருஷம் குடுத்தனம் பண்ணாங்க. அந்தக் காலத்தலெ ஊர்லெ அத்தெயின் பொறுமெ, நல்ல குணங்க, அழகு இதையெல்லாம் புகழாதவங்களே கிடையாது.

மாமாவின் பிரியத்துக்குப் பாத்திரமான மோகனாங்கிக்கு அத்தெயின் அழகெ நேரிலே பாக்கணும்னும், அவங்க நல் குணத்தெப் பரிட்செ பண்ணனும்னும் எண்ணம் வந்தது. மாமாவெ வம்புக் கிழுத்தா. ' உங்க அதிகாரம், உங்க படாடோபம், எல்லாம் எங்கிட்டெதான் நடக்கும்.! உங்க பெண்டாட்டி முன்னாலே என்னோட சேந்து நீங்க நிக்க முடிஞ்சா உங்க பெருமெ தெரியும், நடக்குமா?' ன்னு பரிகாசம் பண்ணிகிட்டெ தூண்டிவிட்டாளாம். அப்பொ மாமா மோகனாங்கியெ ஓரக் கண்ணாலே பாத்துகிட்டே ரொம்ப லேசா, கர்வத்தோட சிரிச்சிருப்பாரோ என்னமோ!

அந்த மறுநாளே மாமா மோகனாங்கியெ, பிரயாணத்துக்கு ஏற்பாடு செஞ்சி வீசட்டுக்குக் கூட்டி வந்தார். பல்லக்கெ விட்டு இறங்கன உடனெ அத்தெ கையாலெ மோகனாங்கி காலெக் கழுவ வெச்சாரு. அது அபூர்வமான விஷயம்! சாமான்யமான பெண் கேட்டுச் சகித்துக் கொள்ள முடியாத விஷயம்! ஆனா அத்தெ அந்த வேலை யெப் புன்சிரிப்போட செஞ்சாங்க! மோகனாங்கி பாதத்திலே யிருந்து ஈரத்தெ ஒத்தி எடுத்தாங்க! கையெப் புடிச்சி அழெச்சிட்டுப் போய் கட்டில் மேலெ உக்கார வெச்சாங்க! விதவிதமான பலகாரத்தட்டுங்க, பால் கிளாசுங்க எடுத்துக் குடுத்து வேலெக்காரி மாதிரி பக்கத்தலெ நின்னாங்க! மோகனாங்கி கடிச்சதெ மாமாதிங்கற்து, மாமா குடிச்ச மிச்சத்தெ மோகனாங்கி குடிக்கற்து, ரெண்டு பேரும் சந்தோஷமா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.