(Reading time: 19 - 38 minutes)
காகித மாளிகை
காகித மாளிகை

பேசிக்கிட்டு, எச்செ கலந்துகிட்டு, சரச சல்லாபங்க பண்ணிக்கிட்டிருந்தா, அத்தெயின் முகத்தலெ ஒரு கவலெக் கோடாவது, கோவத்தின் அறிகுறியாவது, பிடிக்காததெப் பாக்கற உணர்ச்சியாவது கொஞ்சம்கூடத் தெரியவே யில்லே! அத்தெயெ ஓரக் கண்ணால் பாத்துகிட்டு ஒவ்வொரு நிமிஷமும் விஷப் பரிட்சை பண்ணிட்டிருந்த மோகனாங்கி அதிர்ச்சி யடைஞ்சா. மடிசாரெ வெச்சி கட்ன புடவெயோட, ரொம்ப அழகான சிரிச்ச முகத்தோட இந்த உலக விஷயங்களுக்கு மிகத் தொலைவாக நிற்கும் அத்தெயின் முன்னாலெ, மோகனாங்கி வெக்கப்பட்டுத் தலை குனிஞ்சா. தன்னெ ஒரு உலகப் பேரழகின்னு கர்வப் பட்டுட்டிருந்த மோகனாங்கி மானபங்கப்பட்டுத் தோத்துப் போயிட்டா. போவதற்கு முன்னாலெ அத்தெயின் வாழ்த்துக்களோட முழுசா மாறிப்போயிட்டா. துக்கம் நிறெஞ்ச இதயத்தோட மோகனாங்கி கையெடுத்து அத்தெய வணங்கிட்டுத் தன் வீட்டுக்குப் போயிட்டா. அன்னக்கே மோகனாங்கி காதலன் வர்றதெ வெறுத்துட்டா. அதோட மாறிய மனசோட குருடனுக்கு அறிவு விளக்கு காட்ட முயற்சி பண்ணினா. 'சுவாமி! சாட்சாத் லட்சுமி தேவிக்குப் புருஷனா யிருக்கும் நீங்க என் வீட்டு வாசப்படி ஏறி வர்றது தீராத அபசாரம். இனி என்னாலெ சகிச்சிக்க முடியாது. ரதி தேவியெ மனெவியா வீட்லெ வெச்சிக்கிட்டு, மேலுக்கு அலங்காரத்தோட கண்ணாடித் துண்டு அழகோட, மிக மட்டமான நிலெயிலெ வாழும் எங்க மேலெ வெச்சிருக்கும் இந்த வெறிக்கு அர்த்தமென்ன? அவங்க அழகு, அவங்க நல்ல குணம் என்னெக்கும் சாசுவத மில்லியா? நீங்க நாடித் தேடிவரும் இந்த உருவம் எந்த நிமிஷத்தலெஅழிஞ்சி போவுமோ, இந்த இனமெ எந்த நேரத்தலெ மறெஞ்சி போவுமோ யோசனெ பண்ணீங்களா? நடந்ததுக்கு வருத்தப் பட்டுப் பயனில்லெ. இனிமே அந்தப் பெண் தெய்வத்துக்கு அநியாயம் நடக்கக் கூடாது. நான் விபசாரி யானாலும் எனக்கு ஆத்ம திருப்தி வேணும். இனிமே என் வாழ்க் கையிலே அடியெடுத்து வெக்கக்கூடாது நீங்க. உங்களுக்கு ஞானோதயம் வந்து உங்க குத்தத்தெ உணர முடிஞ்சா, அந்தத் தேவதெ இந்தத் துர்ப்பாக்கியசாலியெ மன்னிக்க முடிஞ்சா ...' மோகனாங்கி தாரெ தாரெயாக் கண்ணீர் வடிச்சா. மாமா அதிர்ச்சி யடைந்து 'மோகினீ!'ன்னு கதறிகிட்டு கிட்டே போனா. அந்தம்மா சரசரன்னு படுக்கை அறெக்குள்ளே போய் கதவெ அடெச்சிக்கிட்டா. அப்புறம் மாமாவுக்காக அந்தக் கதவுங்க திறக்கவே யில்லெ. மாமா மனோவியாதியிலெ படுக்கையிலெ விழுந்தார். ஒரேயடியாப் புலம்பற்து, துக்கப்பட்றது, பைத்தியம் பிடிச்ச மாதிரி எழுந்து திரியறது முதலான லட்சணங்க வரவர அதிகமாயிட்டுது. மருந்துங்க ஒண்ணும் பலன் தரல்லெ.

மாமாவின் வேதனெ அத்தெக்குத் தெரியும். தானாகவே மோகனாங்கியின் வீட்டுக்குப் புறப்பட்டாங்க. ஆனா மோகனாங்கி அடுத்த நாள் ராத்ரியே ஊரெ விட்டுப் போயிட்டா. அத்தெ

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.