(Reading time: 19 - 38 minutes)
காகித மாளிகை
காகித மாளிகை

ஆவானோ யோசனெ பண்ணு----கண்ணீருக்கும் கொஞ்சம் மதிப்பு குடுத்து நீ உயிரோட இருக்கணும். யாருக்காகவும் இல்லே, உனக்காகவும் இல்லே, உன் குழந்தெக்காக! நீ விரும்பும் முன்னேற்றத்துக்காக! உன்னெப் போலவங்க எல்லாத்தெயும் பொறுத்துக்கிட்டு உயிரோடு இருந்து சில குழந்தெங்களெ வளத்தாத்தானே என்னக்காவது இந்த அநியாயம் மறெஞ்சி போகும்? இதுவே உன் குறிக்கோளா வெச்சுக்கோ பானூ! எப்பவும் இப்படிப் பைத்தியக்காரத் தனமா நினெக்காதே."

"இல்லே அண்ணா! எவ்வளவு துக்க மானாலும் சகிச்சிக்கிட்டு என் பாபுவெ நான் என் கையாலே வளத்துப் பெரியவ னாக்கறேன்." என்று சொல்லி பானு மகன் முகத்தைக் கன்னத்தோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள்.

பானு எத்தகைய நிலைமை வந்தாலும்உயிரோடு இருப்பாள். மகன்மேல் பானுவுக்குச் சொல்ல முடியாத பாசம்! ஒவ்வொரு தாயும் ஒவ்வொரு குழந்தையிடம் அவ்வளவு ஆழ்ந்த அன்பு செலுத்துவாள் என்பது உண்மை யல்லாமல் இருக்கலாம்----பானு மகனைத் தாய் இதயத்தோடு மட்டுமல்ல, வரப்போகும் தலைமுறைகளுக்கு வழிகாட்டிக்கொண்டு நடத்தி வைக்கும் ஓர் இலட்சிய மனிதனை உருவாக்க வேண்டும் என்னும் பெண் இதயத்தோடு சிறப்பாக விரும்புகிறாள். அவ்வளவு பெரிய உறுதியை உண்டாக்கிக்கொண்ட பானு என்றைக்கும் எந்தத் தவறான வேலையும் செய்யமாட்டாள்.அதுதான் என் நம்பிக்கை!

ஒரு வகையில் சிந்தித்தால் பானு மனநோய்க்கு ஆளாகி இருக்கிறாள் என்பது புலனாகிறது. ஒரே கோணத்தில் சிந்தனை செய்கிறாள். நூற்றுக்கு நூறு பங்கு நியாயம் ----அநியாயம்- இரண்டே இருக்கவேண்டும் என்கிறாள். ஆனால் அந்தச் சிந்தனைகள் சிதறிப்போனால், அந்த முடிவுகள் வீணாகிவிட்டால், மனமுடைந்து போவாள். தைரியத்தை இழந்து விடுவாள். தீவிரமான கருத்துகளை உருவாக்கிக் கொள்வாள். சூழ்நிலைகள் எதிர்ப்பானால் தாங்கிக்கொள்ள முடியாமல் போவது பலவீனம் அல்லவா? இல்லை என்கிறாள். மனிதத் தன்மை உறுதியாக இருக்கவேண்டும். எத்தகைய சூழ்நிலைகளும் வரட்டும்...மனிதத் தன்மைக்கு குறைவு வந்தால் அனுபவித்துக்கொண்டு வாழக்கூடாது. அத்துடன் முடிவு தேடிக் கொண்டு மனிதத் தன்மையைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். பானு சூழ்நிலைகளுக்குத் தலை குனிய முடியாத துர்ப்பாக்கியசாலி! பானு எனக்கு ஒரு பிரச்சனை ஆகி விட்டாள். அது எப்படித் தீர்வடையப் போகிறதோ, என் சிந்தனைக்கு ஒன்றும் எட்டுவதாக இல்லை. ஏதோ சிந்தித்துக்கொண்டிருந்த பொழுது ஒரு முறை தோன்றியது, பானுவுக்கு மகிழ்ச்சியைக்கொடுக்காத அந்தக் குடும்பத்திலிருந்து கொண்டுவந்து ஏதாவது ஒரு துறைப் பயிற்சியைக் கற்றுக்கொள்ளச் செய்தால்? எங்கேயாவது வேலையில் சேர்த்தால்? மாறாத மனிதருக்காக எவ்வளவு காலம் வாழ்க்கையைப் பாழாக்கிக்கொள்வது?

இன்னும் நான்கு மாதங்கள் பொறுமையாக இருந்தால் என் படிப்பு முடிவடையும். வேலை கிடைக்கும். அப்பொழுது பானு எதற்கு விருப்பம் தெரிவிக்கிறாளோ அதைச் செய்யமுடியும். அந்த எண்ணம் எனக்கு மிகவும் மன அமைதியைக் கொடுத்தது.

தொடரும்

Go to Kaagitha maaligai story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.