(Reading time: 19 - 38 minutes)
காகித மாளிகை
காகித மாளிகை

ஏமாற்றத்தோட திரும்பி வந்தாங்க. இனி மாமாவின் மனோவியாதிக்கு மருந்தில்லெ, வைத்தியமில்லெ. நாட்கள் போயிட் டிருந்தது. நிலெமெ ரொம்ப மோசமாயிட் டிருந்தது. தூக்கமும் சாப்பாடும் இல்லாமெ அத்தெ செஞ்ச சேவெ வீணாப் போயிட் டிருந்தது. மாமா யமன் முகத்தலெ, சாவின் வாசப்படியிலெ நினெவில்லாமெ விழுந்து கிடந்தாரு. சோக தேவதெ போல உக்காந் திருந்த அத்தெ என்னவோ திடீர்னு நினெவு வந்தாப்பொல எழுந்தாங்க. கடவுளெ தியானம் பண்ணிக்கிட்டெ மாமாவின் படுக்கெ சுத்திப் பிரதட்சணம் பண்ணாங்க. " பிரபோ! ஸ்ரீ ராமா! என் ஆயுசெ என் புருஷனுக்குக் கொடுத்துட்டு இந்த ஏழெயெ உன் கிட்டெ அழெச்சுக்கோ அப்பா! சுமங்கலியா இந்த ஜன்மத்துக்கு முடிவு வரணும் ராமா! இதுதான் என் கோரிக்கெ! ன்னு பிரார்த்தனெ பண்ணிக்கிட்டாங்க.

பக்தர்களெ வேற விதத்தலெ சந்தோஷப் படுத்த முடியாம தன்கிட்டெ அழெச்சுக்கத் தயாரா இருக்கறார் போல இருக்குது அந்தக் கடவுள்! புனிதத்தின் உருவமான அத்தெயோட பிரார்த்தனெ பலிச்சிது. மாமாக்கு உடம்பு குணமாச்சி. அத்தெ நோயிலெ விழுந்தாங்க. அப்பொ பாட்டி நிறெஞ்ச கர்பத்தோட இருந்தாங்க. மகளோட நோய் சங்கதி தெரிஞ்சி தாங்க முடியாத துக்கத்தோட வந்தாங்க. வைத்தியம் பண்ணலாம்னு போனா அத்தெ தடுத்துட்டாங்க. ' அம்மா! என் புருஷன் ஆரோக்கியத்துக்காக என் பிராணனெ தானம் பண்ணிட்டேன். இந்த வேண்டுதல் நிறெவேறாமெ நான் உயிரோ டிருக்கணும்னு நினெச்சா அது பெரிய குத்த மில்லியா? என்னெ மறந்துடு அம்மா! நான் கடவுள் கிட்டெ போறேம்மா!' அத்தெயின் நோய் தீவிரமான நாளே தாத்தா கோபத்தெ மறந்து பிடிவாதத்தெ விட்டு, மருமகன் வீட்லெ கால்வெச்சாரு. அத்தெயின் மறுப்புக் கெதிரா வைத்தியம் பாத்தார்.

இன்னொரு துர்ப்பாக்கியம்!அத்தெ தூரமானா. உடம்பு மேலெ நெல்லு போட்டா பொறியற அந்தக் காய்ச்சல்லே மருமகளுக்குத் தலெக்கு ஊத்தி ஆகணும்னு பலவந்தப் படுத்தினா மாமியார். மனித உருவத்து ராட்சசி! நன்றி மறந்த ஜன்மம்! பாட்டி எவ்வளவு அழுதும் காதுலெ போட்டுக்கலெ. ஆசாரத்துக்கு எதிரான வேலெங்க ஒண்ணுகூட தன் வீட்லெ நடக்க கூடாதுன்னு சொன்னா. தாத்தா சட்டுன்னு எழுந்து வண்டி தயார் பண்றதுக்கு வெளியே போனாரு. அதுக்குள்ளே அந்த ராட்சசி பெரிய பாத்தரத்தலெ தண்ணி கொண்டுவந்து மருமக மேலெ ஊத்திட்டா.

அன்னக்கி ராத்ரி அத்தெக்கு நினெவு தப்ப்பிட்டது. சூரியன் உதயமானான். அத்தெ மறெஞ்சி போயிட்டாங்க. அழகுராணி, தாய்மெயின் உருவம், சுமங்கலியா உயிரெ விட்டுட்டா. நிறெஞ்ச கர்ப்பிணியான பாட்டி அந்தத் தாய்மெச் சோகத்தெ எப்படித் தாங்கிக்கிட்டாங்களோ, ஏன் புழெச்சி இருந்தாங்களோ அவங்களுக்கே புரியல்லெ.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.