(Reading time: 21 - 41 minutes)
காகித மாளிகை
காகித மாளிகை

Flexi Classics தொடர்கதை - காகித மாளிகை - 17 - (முப்பாள ரங்கநாயகம்ம) (தமிழில் - பா. பாலசுப்பிரமணியன்)

"ன் தேவெங்களெத் தீக்கறவங்க, உனக்கு வேண்டிய தெல்லாம் வாங்கித் தா்றவங்க வேறெ இருந்தா புருஷனெங்கற முண்டத்தெ மதிச்சி நடக்கணும்னு என்ன இருக்குது? முண்டே!"

எனக்கு தூக்கிவாரிப் போட்டது. எவ்வளவு கேவலமாகத் திட்டுகிறார்! அதுவும் முழுக்க முழுக்க என்மேல் கோபம். இனி நான் வரமால் இருக்கட்டுமா...? "கொஞ் சம் உடம்பெ சாக்கரதேயா வெச்சிக்கிட்டு திரிஞ்சிவான்னு, உன் டாக்டா் பெரிதனத்தெ வெளியே காட்ட வாணாம்னு எத்தனெ தடவெ உனக்குச் சொல்றது? எப்பொ உனக்குத் தெரியப் போவுது? உன் கண்ணு என்ன குருடாப் போயிட்டுதா? இல்லை சோம்பேறித்தனம் அதிகமாயிட்டுதா? உனக்குக் குடும்பப் பெண்ணுக்கு இருக்கவேண்டிய லட்சணம் ஏதாவது இருக்குதா? உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு நான் என்ன சுகப்பட்றேன்? முதல்லே உனக்குக் கல்யாணம் என்னத்துக்குப் பண்ணானோ அது உங்க அப்பனுக்குத்தான் தெரியணும்."

கோபத்தில் கீழ் உதடு பற்களின் அடையே நசுங்கிக் கொண்டிருந்தது.

இந்தக் காலத்திலே ஒரு மட்டமான மனிதன் கூடத் தன் மனைவியைத் திட்டக் கூசும் முறையில் அவார் திட்டிக்கொண் டிருந்தார் "உனக்குச் சரியான வயசுலெ கல்யாணம் பண்ணியிருந்தா நாலு புள்ளங்களெப் பெத்திருப்பே, கழதெ மாதிாி வளத்து என் தலெயிலெ கட்டிட்டாங்க. நானொரு குருட்டு முண்டம். இல்லேன்னா உன்னெப் போய் கல்யாணம் பண்ணுவேனா? என் கா்மம் வந்து விடிஞ்சிது. அவ்வளவுதான்! பொம்பளெ முண்டேன்னு யோசிக்க யோசிக்க தலெமேலே ஏா்றே. நாலு ஓதெ குடுத்து தெருவுலெ இழுத்துத் தள்னா உங்க அப்பன் குறுக்கே வா்றனா உங்க அண்ணன் வா்றானா......"

'போக்கிரிப் பயலே!' என் உடல் பதறிக்கொண்டிருந்தது. கைமுட்டிகள் தாமாவே இறுகத் தொடங்கின. பற்கள் நற நறவென்று நசங்கிக்கொண்டிருந்தன. 'ரௌடி ராஸ்கல்! அந்த உதெங்க என்னவோ இப்ப உனக்குக் குடுத்தாக்கா உங்க அப்பன் எவன் குறுக்கெவர்றானோ நான் பாக்கறேன்.' இரயில் வண்டிப் புகைபோல மூச்சு வந்துகொண்டிருந்தது. கால்கள் முன் னோக்கி இழுத்துச் சென்றன. ஒரு நிமிஷத்தில்.............. 'நில்லு........' கூச்சலிட்டது இதயம்.

' கோவப்படாதே........' எச்சரித்தது மீண்டும்.......

ஆமாம்-- பெருமூச்சு விட்டேன். அவசரப்பட்டு அவரோடு சண்டை போடுவதால் பயன் இல்லை. என் கோபதாபங்களுக்கு இது சமயம் அல்ல. பானுவை இப்பொழுது வெளியே அழைத்துச் சென்று ஒன்றும் செய்ய முடியாத நிலையிலிருக்கிறேன். இந்தச் சிறை அவளுக்குத் தப்பாது.

என்னை நானே தடுத்து அடக்கிக்கொண்டேன். ஒரு நிமிஷம் நின்றிருந்தேன். போய்விடலாம் எந்று தோன்றியது. ஆனால் பானு எவ்வளவு வேதனைப் படுகிறாளோ! ஒரு முறை ஆறுதல்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.