(Reading time: 6 - 11 minutes)
Muthu Sippi
Muthu Sippi

அவன் சிந்தனை செய்வதாகவே பவானி நினைத்தாள்.

  

தலையைக் குனிந்து நிற்கும் தங்கையையும், அவள் கையிலிருந்த 'பாலிஸி' யையும் மாறி மாறிப் பார்த்த வண்ணம் நாகராஜன் ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந் தான். பிறகு ஏதோ நினைத்துக் கொண்டவன் போல், ”ஆமாம், நீ இதை வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறாய்?" என்று கேட்டான்.

  

பவானி பரிதாபமாகச் சிரித்தாள்.

  

"என்னைப் போய்க் கேட்கிறாயே அண்ணா? உனக்கு எப்படித் தோன்றுகிறதோ அப்படிச் செய்யேன். நான் என்னத்தைக் கண்டேன் உலகத்தில்?" என்று பதிலளித்தாள்.

  

"ஹும்... சரி. 'பாலிஸி'யைப் பற்றிக் கம்பெனிக்கு எழுதி பணத்துக்கு ஏற்பாடு செய்தாக வேண்டும். நீ என்ன செய்யப் போகிறாய்?" என்று கேட்டான்.

  

பவானிக்கு முதல் கேள்விக்கு விடை கூறுவதற்குக் கஷ்டமாக இல்லை. ஆனால், இரண்டாவது கேள்விக்குப் பதில் அளிக்கத் தயக்கமாக இருந்தது. நிலத்திலே கோடுகள் வரைந்து கொண்டு உட்கார்ந்திருந்தாள் அவள். அவள் மனதில் எவ்வளவோ எண்ணங்கள் எழுந்தன. சென்னை கோடம்பாக்கத்தில் இருக்கும் அண்ணாவின் பிரம்மாண்டமான இல்லம். பணத்தின் பெருமையிலும் வாழ்க்கையின் நிறைவிலும் பூரித்து இருக்கும் மன்னி கோமதி, அவர்கள் வீட்டுக் கார், வேலையாட்கள். குழந்தை சுமதி. எல்லோரும் அவள் மனக்கண் முன்பு ஆடி அசைந்து தோன்றினர். அந்த வீட்டில் இவள் யாராக மதிக்கப்படுவாள்?

  

நாகராஜனின் அருமைத் தங்கையாகவா? மஞ்சளும் குங்குமுமாக இருந்த போது அளித்த மதிப்பை மன்னி கோமதி இப்பொழுதும் இவளுக்கு அளிப்பாளா? யார் கண்டது?

  

ஐந்தாறு வருஷங்களுக்கு முன்பு ஒரு தடவை பவானி ஆமையன் வீட்டுக்குப் போயிருந்தாள். கல்யாணமாகிப் புக்ககத்தில் போய் ஆறு மாசங்கள் குடித்தனம் பண்ணி

  

விட்டு வருகிறவள். மனசிலே எத்தனையோ ஆசைகள், விருப்பங்கள், வெறுப்புகள், உணர்ச்சிகள் நிறைந்து இருந்தன. யாரிடமாவது தன் வயசுக்கு ஒத்த பெண்ணி படம்

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.