(Reading time: 9 - 18 minutes)
Muthu Sippi
Muthu Sippi

அவகாசம் இருக்காது. மகள் பள்ளிக்கூடத்தில் பரிசுகள் வாங்கிக் கெட்டிக்காரியாக விளங்கினாலும் பெருமைப்பட அவன் கொடுத்து வைத்தவனல்ல. இக்காரணங்களே கோமதியை ஒரு நிரந்தர நோயாளி ஆக்கிவிட்டன. வெளியார் அந்தத் தம்பதியைப் பற்றிப் பெருமையாகத்தான் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு தடவை பெங்களூர் போய்விட்டு வந்த நாகராஜன் புடவை ஒன்று வாங்கி வந்தான். உடல் தெரியும்படி அவ்வளவு மெல்லியதாக இருந்தது அப்புடவை. உடலெங்கும் ஜரிகைப் பூக்கள் வைத்து தைக்கப்பட்டிருந்தது. ”இந்தப் புடவையை உடுத்திக் கொண்டு என்னோடு என் நண்பர் வீட்டுக் கல்யாணத்துக்கு வா" என்று அழைத்தான் நாகராஜன்.

  

புடவையைப் பார்த்தவுடன் கோமதியின் மனத்தில் ஓர் அருவருப்பு ஏற்பட்டது. அவள் அதுவரையில் அம் மாதிரி உடுத்திக் கொண்டதில்லை. கணவன் சொல்கிறாரே என்று மனைவி எதை வேண்டுமானாலும் செய்து விட முடியுமா? நன்மை தீமையை ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருவது தான் சிறந்தது.

  

கோமதி அதை உடுத்திக் கொண்டு வர மறுத்தாள். அத்தி பூத்தாற் போல் தன்னை உடன் வரும்படி அழைக்கும் கணவனின் அன்பை உதறுகிறோமே என்று கோமதி மனம் வருந்தினாள். இருந்தாலும் சுய கௌரவத்தை இழக்க, அவள் விரும்பவில்லை . அன்று அவனுடன் அவள் கல்யாணத்துக்குப் போகவில்லை.

  

நாகராஜன் மனைவியைப் பற்றி வேறு விதமாக நினைத்துக் கொண்டான். அவள் ஒரு ஜடம் என்பது அவன் அபிப்பிராயம். அதன் பிற, அவளை அவன் வெளியே அழைத்துச் செல்லவேயில்லை.

  

அன்று பகல் சாப்பாட்டிற்கு அப்புறம் கோமதி டிராமா டிக்கெட்டுக்களை எடுத்துக் கொண்டு நாகராஜனின் அறைக்குள் துழைந்தாள். ஈமலும் மின்சார விசிறியின் கீழ் உட்கார்ந்திருக்கும் அவர் அருகில் தயங்கியபடி நின்றாள் , பிறகு தைரியத்தை வரவழித்துக் கொண்டு ”இன்றைக்கு டிராமாவுக்குப் போகலாமா வருகிறீர்களா?" என்று கேட்டாள்.

  

நாகராஜன் சிறிது நேரம் 'பைல்'களைப் புரட்டிக் கொண்டிருந்தான். பிறகு கோமதியை நிமிர்ந்து பார்த்து "என்ன கேட்டாய்?" என்று விசாரித்தான்.

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.