(Reading time: 8 - 16 minutes)
Muthu Sippi
Muthu Sippi

அன்று என் மனைவி வந்திருக்கிறாள் இந்த வீட்டுக்கு!"

  

அப்படியெல்லாம் உங்களை நான் தவறாகப் புரிந்து கொள்ளவில்லை. மனசைச் சங்கடப்படுத்தும் விஷயமாக இருக்கவே எனக்கு வருத்தமாக இருக்கிறது. டாக்டர் வந்ததும் அவரிடம் கூறி ஏதாவது ஏற்பாடு செய்கிறேன்" என்றார் சுவாமிநாதன். வேதாந்தம் மனத்தில் இருந்த பாரம் நீங்கப்பட்டவராகக் கிளம்பிச் சென்றார்.

  

சுவாமிநாதன் அந்த வீட்டுச் சமையற்காரர் மட்டும் அல்ல. அந்தக் குடும்பத்தினரின் நம்பிக்கைக்குப் பாத்தரமான ஒரு நண்பர் அவர். வீட்டிலே பெண் துணை இல்லாமல் இருக்கையில் தாயும் தந்தையுமாக இருந்து. இரண்டு பெண் குழந்தைகளை வளர்த்து வருகிறவர். 'கல்லூரியில் சிறு சம்பவம் நடந்தாலும். தன்னிடம் ஒன்றுவிடாமல் கூறும் ராதாதான் எப்படி மாறிவிட் டாள். ஒவ்வொன்றையும் மறைக்க அவளுக்குச் சாமர்த் தியம் வந்து விட்டது. இப்படி மறைத்து வைத்துப் பாழும் பெண் ஏதாவது ஆபத்தில், மானக்கேட்டில் சிக்கிக் கொண்டுவிட்டால் என்ன பண்ணுவது? டாக்டர் பூதானின் நற்பெயரும், அவன் புகழும் என்னாவது? ராதாவின் வாழ்க்கை தான் என்ன ஆகும்?" என்று (வேதனை துடிக்க நினைத்துக் கொண்டே உட்கார்ந்திருந்தார் அவர்.

  

வெளியே சென்றிருந்த டாக்டர் வீட்டுக்கு வந்ததும் சுவாமி நாதன் உற்சாகம் இல்லாமலேயே அவருக்கு உணவு பரிமாறினார். தினம் டிஸ் பென்ஸரி'க்கு வரும் நோயாளிகளைப் பற்றியும் மற்ற விஷயங்களையும் விசாரித்து உற்சாகத்துடன் பேசும் சுவாமிநாதன், மௌனமாக எதிலுமே அக்கறை இல்லாதவரைப்போல இருப்பதைப் பார்த்து ஸ்ரீதரன், "ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறீர்கள்?" என்று விசாரித்தார்.

  

சுவாமிநாதன் வேதாந்தம் வந்து போனதை அறிவித்தார். பிறகு அவர் ராதாவைப் பற்றிச் சொல்லியதையும் நாசூக்காகக் குறிப்பிட்டார். ”இப்படியே நாம் இருந்து விட்டால் ராதாவின் கதி எப்படி ஆதமோ" என்று வருத்தம் தொனிக்க அவர் கூறியபோது ஸ்ரீதரனே சுவாமிநாதன் ராதாவிடம் கொண்டிருந்த அன்பின் ஆழத்தை நினைத்து ஆச்சரியம் அடைந்தார். அந்த ஆச்சரியம் சடுதியில் மறைந்து விட்டது. தான் இவ்வளவு காலம் வரையில் ராதாவின் கல்யாண விஷயத்தில் அக்கறை செலுத்தாது இருந்த தவறை உணர்த்து ராதாவையே அவள் விரும்பும் பிள்ளையைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ள அவளைத் தேடிச் சென்றார்.

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.