(Reading time: 8 - 15 minutes)
Muthu Sippi
Muthu Sippi

Flexi Classics தொடர்கதை - முத்துச் சிப்பி (இரண்டாம் பாகம்) - 27 - சரோஜா ராமமூர்த்தி

2.27. முக்கியமான விஷயம்

  

டாக்டர் ஸ்ரீதரன் காமாட்சியின் வீட்டுக்குத் தன் மகளுடன் சென்று வந்த பிறகு, வக்கீல் வேதாந்தத்தின் மனம் அமைதியாக இல்லை. ஸ்ரீதரனின் மிடுக்கான தோற்றம், அன்பு நிறைந்த பேச்சு, திறமையாவும் அவர் மனத்தைக் கவர்ந்தன. இவ்வளவு நற்குணங்கள் பொருந்திய ஆண்பிள்ளை, மறுமணம் செய்து கொள்ளாமல் இருப்பது அவருக்கு விந்தையாக இருந்தது. தொழில் முலாயில் பல வருஷங்களாக தம்முடைய மகளும், ஸ்ரீதரனும் பாதி வருவதை அவர் அறிவார். ஆகவே அவர் மனதில் ஒரு விசித்திர எண்ணம் வேர் விட்டு ஊன்றி முளைக்கத் தோண்றியது. எப்படியாவது ஸ்ரீதரனை தனிமையில் சந்தித்து, தாது மகளை மறுமணம் செய்து கொள்ளும்படி கேட்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார். தம்முடைய தீர்மானம் சரியா, தவறா. அதன்படி காமாட்சியும், ஸ்ரீதரனும் நடந்து கொள்வார்களா என்பதையெல்லாம் அவர்

  

யோசித்துப் பார்க்கவில்லை.

  

ஒரு தினம் பிற்பகல் சுமார் ஒரு மணிக்கு வேதாந்தம் ஸ்ரீதரனின் வீட்டுக்குப் போனார். பகல் சாப்பாட்டை முடித்துக்கொண்டு ஸ்ரீதரன் முன் கூடத்தில் சாய்வு நாற்காலியில் சாய்ந்து ஏதோ ஒரு வைத்தியப் புஸ்தகத்தைப் படித்துக் கொணடிருந்தார். புதிதாக வந்த சமையற்காரர் பகல் பொழுதை கழிப்பதற்காக வெளியே போய் விட்டார். சுவாமிநாதனுக்கு வீட்டில் வேலை ஒன்றும் கிடையாது. அதிகமாக நடமாட்டம் வைத்துக் கொள்ளக் கூடாது என்பது டாக்டரின் உத்தரவு. பொழுது தேய்கிறதோ அல்லது வளர்கிறதோ அவர் மட்டும் அந்த இரண்டாங்கட்டு பெஞ்சியில் படுத்துக் கிடக்க வேண்டும். எதிரே திறந்தவெளி. அங்கே வாழைப் புதர்கள் மண்டிக் கிடந்தன. சற்றுத் தள்ளி ஒரு பெரிய வேப்பமரம் குளிர்ந்த காற்றை வீசிக் கொண்டு நின்றது. தோட்டக்கார ராமையா, மண்வெட்டியால் பாத்திகள் வெட்டும் ஓசை மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது.

  

மாடியில் ராதா தன் அறைக்குள் அரைத் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தாள். அவள் மனத்துள் பிருமாண்ட மான கல்கத்தா நகரம் தோன்றியது. அதன் தெருக்களில் மூர்த்தி அலைவது தெரிந்தது. அவன் பக்கத்தில் ஒரு வங்காளிப் பெண் விசுக் விசுக் கென்று நடை போட்டுக் கொண்டு வந்தாள். மூக்கும் விழியுமாக கொடியைப் போலத் துவண்டு அவள் நடந்து வருவது

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.