(Reading time: 8 - 15 minutes)
Muthu Sippi
Muthu Sippi

வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தின் பேரில், "டாக்டர்! நான் கூறியதில் தவறு இருக்கலாம். எனக்குப் பிறகு காமாட்சியின் தனிமையைப் பற்றி நினைத்துத் தான் நான் இந்த முடிவுக்கு வந்தேன். அவள் தனியாக இந்த உலகத்தில் தன் வாழ்க்கையை எப்படி நடத்துவாள் என்கிற வேதனை தாங்காமல் உங்களை வந்து இப்படிக் கேட்கிறேன். அந்த வேதனை என்னை அல்லும் பகலும் நிம்மதியை இழக்கச் செய்து அவதிக்கு ஆளாக்கி விட்டிருக்கிறது. அதிலிருந்து மீண்டு. சாகும் நாடகளிலாவது நிம்மதியுடன் போக வேண்டும் என்ற ஆவலினால் உங்களைத் தேடி வந்தேன்" என்றார் வேதாந்தம் படபடக்கும் குரலில்.

  

வயோதிகத்தினால் ஆட்டம் கண்டிருந்த அவர் உடல் மேலும் நடுங்கியது. நிலை கொள்ளாமல் தவித்தார்.

  

ஸ்ரீதரன் புன்முறுவலுடன் வேதாந்தத்தின் கரங்களைப் பற்றிக் கொண்டார். பிறகு நிதானமாக, ”பதட்டமடையாதீர்கள். நீங்கள் கூறியதில் எதுவுமே தவறில்லை. காமாட்சி தனியாக இந்த உலகத்தில் இருக்கிறாள் என்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். படித்துப் பட்டம் பெற்று அறிவும் திறமையும் ஒருங்கே அமைந்தவள் உங்கள் மகள். அவளுடைய தொழில் ஒன்றே அவளுக்குத் துணையாக இருக்கிறது. அப்படி அவள் ஒன்றும் சிறு பிராயத்தவள் இல்லை. காமாட்சிக்கு வயது முப்பது இருக்காதா?" என்று கேட் டார்.

  

ஆமாம்" என்கிற பாவனையில் தலையை அசைத்தார் வேதாந்தம்.

  

"தன்னுடைய மறுமணத்தைப் பற்றி அவள் ஏற்கெனவே ஒரு முடிவுக்கு வந்திருப்பாளே, இவ்வளவு நாட்கள் அதில் விருப்பம் செலுத்தாமல் இருக்கும் போதே அவளுடைய மனம் உங்களுக்கு விளங்கி இருக்க வேண்டுமே...."

  

வேதாந்தத்துக்கு அவர் மகளின் குணச்சிறப்புகளைப் பற்றி பிறத்தியார் கூற வேண்டி இருந்தது. வரும்போது அவருடன் கூட இருந்த அதைரியம், அவநம்பிக்கை . பலஹீனம் யாவும் பறந்து போய்விட்டன. ஒருவிதமான அசட்டுச் சிரிப்புடன் அவர் ஸ்ரீதரனிடமிருந்து விடை பெற்றுக்கொண்டு காரில் போய் உட்கார்ந்தார்.

   

--------------

தொடரும்...

Go to Muthu sippi - Part 2 story main page

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.