(Reading time: 8 - 15 minutes)
Muthu Sippi
Muthu Sippi

தனி அழகாக இருந்தது. ராதாவின் உள்ளும் புறமும் அனலாகத் தகித்தது . மறுபடியும் ஒரு காட்சி! கல்கத்தாவின் இரவு ’விடுதி' களில் மூர்த்தி மயங்கிக் கிடக்கும் காட்சி அது. ராதா தனக்குள் பேசிக் கொண்டான். பஞ்சமா பாதகங்களில் இரண்டைத் தன் கணவன் செய்து விட்டதாக அவள் மனம் புலம்ப ஆரம் பிக்கிறது. எப்படியும் அவனைக் கண்டு பிடித்து நல்வழிப் படுத்த வேண்டும் என்று மனம் துடிக்கிறது. அதற்கு வேண்டிய ஆற்றலும், துணிவும் தன்னிடம் இருக்கின்ற னவா என்று ராதா யோசிக்கிறாள். தூக்கத்தில்கூட ராதாவின் கண் இமை ஓரங்களிலிருந்து கண்ணீர் கசிகிறது.

  

ஸ்ரீதரன் கையிலிருந்த புஸ்தகத்தை மார்பின் மீது வைத்துக் கொண்டு அப்படியே அரைத் தூக்கத்தில் ஆழ்ந்து கிடந்தார். வேதாந்தம், காரை விட்டு இறங்கி உள்ளே சென்று டாக்டரின் எதிரில் கிடந்த நாற்காலியில் அமர்ந்தார். சட்டென்று விழித்துக் கொண்ட ஸ்ரீதரன். வேதாந்தத்தை வரவேற்று விட்டு, ”என்ன ஸார்! இப்படி நடு மத்தியான வேளையில் வந்திருக்கிறீர்கள்? வெயில் நேரத்தில் நீங்கள் வீட்டை விட்டு வெளியே வர மாட்டீர்களே?" என்று கேட்டார்.

  

வேதாந்தம் அசட்டுச் சிரிப்பு சிரித்தார். அவர் ஒன்றும் கூறாமல் இருக்கவே மறுபடியும் ஸ்ரீதரன் “என்ன ஸார்! பேசமாட்டேன் என்கிறீர்கள்? வந்த விஷயம் என்ன? சொல்லுங்கள்" என்று வற்புறுத்தினார்.

  

வேதாந்தம் தம் வழுக்கைத் தலையைத் தடவிக் கொண்டார். ”ஒன்றுமில்லை டாக்டர்... மிகவும் முக்கியமான விஷயமாக உங்களைப் பார்த்துப் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டு வந்தேன்....” என்று இழுத்தார். ஸ்ரீதரன் தம் இருக்கையில் எழுந்து உட்கார்ந்தார். ”சரி சொல்லுங்கள். இங்கே என்னையும், உங்களையும் தவிர வேறு யாரும் இல்லை" என்று கூறினார். வேதாந்தம் வீட்டை விட்டுக் கிளம்பும்போது

  

ஏதோ ஓர் அசட்டுத் தைரியத்துடன் கிளம்பினார். தனக்குப் பிறகு காமாட்சியின் தனி வாழ்க்கை. எப்படி யெல்லாமோ வாழ வேண்டிய பெண் மணமிழந்து தனி மரமாக நிற்கும் அவலக்கோலம் யாவும் அவர் மனத்தை நெகிழச் செய்து அவரை ஓர் அவசர முடிவுக்கு அழைத்துச் சென்றது. ஸ்ரீதரனின் வீட்டினுள் நுழைந்தவுடன் அவருக்குத் தாம் தீர்மானித்துக் கொண்டு வந்த விஷயத்திலேயே சந்தேகம் ஏற்பட்டது. ”காமாட்சிக்குக் கிட்டத்தட்ட முப்பது வயது ஆகிறதே அவள் என்ன சின்னக் குழந்தையா, அவளைக் கேட்காமல் நாம் எந்த

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.