காரணமில்லாமல் மாமியாரின் கோபத்துக்கு ஆளாகும் போதெல்லாம் சம்பகம் மௌனமாக இருந்து விடுவது வழக்கம். துக்கம் தாளாது அவள் எதிரில் அழ ஆரம்பித்து விட்டால் இன்னும் பல கொடுஞ் சொற்களைக் கேட்க நேரிடும் என்று, அவள் துக்கத்தை மனத்துடன் அழுத்திக் கொண்டு விடுவாள். தன்னந் தனியாகப் பேச்சுத் துணை யின்றி இருக்கும் இரவு நேரங்களில் தான் அவள் தன்னுடைய நிலையை நினைத்து அழுவாள். வானத்தில் பவனி வரும் சந்திரனும், சுடர் விடும் தாரகைகளும் அவளுடைய மனத் துயரத்தைக் கண்டிருக்கின்றன. பக்கத்தில் தூங்கும் ஆறு
வயசுப் பெண் பானு திடீரென்று விழித்துக் கொண்டு, தாயின் கண்களில் குளமாகத் தேங்கிக் கிடக்கும் கண்ணீ ரைப் பார்த்து ஒன்றும் புரியாமல் திகைப்பாள். மனத் துயரைத் மறைக்கும் சக்தி—சகிப்புத் தன்மை சம்பகத்துக்கு எப்படியோ ஏற்பட்டு விட்டது.
கட கடவென்று உருளும் குழவியின் சத்தத்தை மீறிக் கொண்டு மறுபடியும் மீனாட்சி அம்மாள் ஆரம்பித்தாள். ''ஆமாம், சங்கரன் ஊருக்குப் போனானே, அவனுடன் நீயும் கொஞ்ச நாள் உன் பிறந்த வீட்டுக்குப் போய் விட்டு வருவது தானே? வருஷக் கணக்காக உனக்கும் உன் குழந்தைக்கும் செய்ய இங்கே கொட்டிக் கிடக்கிறதா?"
என்னதான் பொறுமையுடன் சகித்துக் கொண்டாலும் அதற்கும் ஒரு எல்லை இருக்கிறதல்லவா? பொழுது விடிந்து பொழுது பேர்வதற்குள் நாலைந்து முறைகளாவது தினம், "உனக்குத் தண்டச் சோறு போடுகிறேன்" என்று மீனாட்சி குத்திக் காட்டாமல் இருப்பதில்லை. சர்மா சம்பாதித் திருக்கும் சொத்தில் சம்பகத்தின் கணவனுக்கும் பங்கு உண்டு என்பதை மறந்து மீனாட்சி பேசிக் கொண்டிருந் தாள். சம்பகத்தின் கல்யாணத்துக்காக அவள் பிறந்த வீட்டார் அவர்கள். சக்திக்கு மீறியே செலவழித்தார்கள். பாத்திரங்களும், பண்டங்களும், விலை உயர்ந்த நகை களுமாகச் செய்து போட்டார்கள். ஒட்டியாணம் இல்லாமல் நாட்டுப் பெண் தன் வீட்டுப் படி ஏறக்கூடாது என்று மீனாட்சி தடை விதித்தாள். சம்பகத்தின் தகப்பனா கையில் இருந்த ரூபாயுடன் கடன் வாங்கி இருபது பவுனுக்கு ஒட்டியாணம் செய்து போட்டுப் பெண்ணை மாமியார் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். மருமகன் அயல் நாட்டில் வேறு பெண் ணுடன் தங்கி விட்டான் என்கிற செய்தியைக் கேட்டு மனம் இடிந்து போனவர், அப்புறம் எழுந்திருக்கவே இல்லை. அவருக்குப் பிறகு, தங்கையின் மாமியார் வீட்டார் மீது ஏற்பட்டிருந்த