(Reading time: 20 - 39 minutes)
Panithuli - Saroja Ramamoorthy
Panithuli - Saroja Ramamoorthy

பட்டினம் வந்த பிறகு அம்மாவின் குணமும் அநேகமாக மாறி இருந்தது காமுவுக்கு ஆச்சரியமாக இருந்தது. முன்னைப் போல் எடுத்ததற் கெல்லாம் முணுமுணுக்காமல் விசாலாட்சி, தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தாள். கிராமத்தைப்போல் வெளியில் நாள் தவறாமல் அப்பளக் கச்சேரிக்கு அவள் போவதற்கு இங்கே இடம் எதுவும் இல்லை.

   

   

'அம்மா! இந்த ரவிக்கை நன்றாக இருக்கிறதா சொல்லுங்கள்?" என்று காமு தன் கையிலிருந்த ரவிக்கையைத் தாயிடம் காண்பித்தாள்.

   

"நன்றாக இருக்கிறது. 'உன் சிவப்பு உடம்புக்கு எடுப்பாக நன்றாக இருக்கும்" என்று கூறி, மகளின் சிவந்த மேனியை ஆசையுடன் பார்த்தாள் விசாலாட்சி.

   

"இதன் விலை என்ன தெரியுமா? கஜம் ஏழு ரூபாயாக் கும்! நமக்கு ஒரு ரூபாய் கொடுத்துத் துணி வாங்கவே. கஷ்டமாக இருக்கிறதே" என்று மனம் விட்டுப் பேசிய காமு, "இது யாருக்காகத் தைத்திருக்கிறேன் சொல், பார்க்கலாம்" என்று கேட்டாள்.

   

"யாருக்காகத் தைத்தால் எனக்கு என்ன? நீ போட்டுக் கொண்டு நான் பார்த்து மகிழப் போகிறேனா என்ன? சாதாரண சீட்டியும், வாயிலும் தான் நீ கொடுத்து வைத்தது. நீ படித்து உத்தியோகம் பண்ணி சம்பாதித்து இந்த மா திரி விலை உசந்த துணிகளை உடுத்திக் கொள்ளும்போது நான் இருக்கமாட்டேன் காமு! எனக்கு என்னவோ வர வர உடம்பு தள்ளவில்லை. உன் அப்பாவின் உடம்பு பட்டினம் வந்த பிறகு தேறி விட்டது. என் உடம்புதான் பலவீனமாகி விட்டது!" என்று கூறினாள் விசாலாட்சி.

   

உண்மையும் அதுவே தான். விசாலாட்சியின் உடம்பு மெலிந்து தான் போயிருந்தது. திரண்டு உருண்டிருந்த தோள்கள் மெலிந்து, முழங்கை வரையில் ரவிக்கை தொள தொளவென்று தொங்கியது. முகம் களையிழந்து வெளுத் திருந்தது. பட்டினம் வந்து இரண்டு மாதங்களுக்கெல்லாம் விசாலாட்சி பத்து வயது அதிகமாகத்தோற்றம் அளித்தாள். 'காமுவுக்குக் கல்யாணமாகவில்லையே' என்கிற கவலை அவளையும் அறியாமல் அவள் உடலையும், மனத்தையும் அரிக்கத் தொடங்கி இருந்தது."பெண்கள் படிக்கிறார்களாம். சுயமாகச் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.