(Reading time: 20 - 39 minutes)
Panithuli - Saroja Ramamoorthy
Panithuli - Saroja Ramamoorthy

'புஸ்' ஸென்று பெருமூச்சு விட்டாள்.

   

"ஏண்டா! நானும் தான் பார்க்கிறேன்; வீட்டில் யாரையும் மதிக்கிறதில்லையே அவள்? இந்த மாதிரி இருந்தால் நன்றாக இருக்கிறதா? நாலு பேர் பார்த்தால் என்ன சொல்ல மாட்டார்கள்?" என்று அடுக்கிக் கொண்டே போனாள் ருக்மிணி

   

தாயும், மகளும் மாறி மாறி யாரைப் பற்றிப் பேசு கிறார்கள் என்பது புரியாமல் சங்கரன் திகைத்துப் போனான்.

   

வாயைத் திறக்கிறானா பாரடி! இவன் கொடுக்கிற இடம் தானே இத்தனைக்கும் காரணம்!" என்று மீனாட்சி ஆத்திரத்துடன் கூறினாள்.

   

அதற்குள் பானு அங்கு வந்து சேர்ந்தாள். "சித்தப்பா! சித்தி பாட்டியை ‘எக்ஸிபிஷ'னுக்குக் கூட்டிக் கொண்டு போகவில்லை என்றுபாட்டிக்கும் அத்தைக்கும் ஒரே கோபம்" என்று சங்கரனின் சங்கடமான நிலையை ஒருவாறு தீர்த்து வைத்தாள் அவள்.

   

“எனக்கு 'எக்ஸிபிஷ'னும் வேண்டாம், ஒண்ணும் வேண்டாம். நீயே கேளடா நியாத்தை! பொழுது விடிந்து பொழுது போனால் ‘அங்கே போகிறேன், இங்கே போகிறேன்' என்று கிளம்பி விடுகிறாள் உன் பெண்டாட்டி! கிளம்புகிற வரைக்கும் யாரிடமும் சொல்லுகிறதில்லை. இன்றைக்கும் புறப்படும்போது சொன்னேன், அவனிட மாவது ஒரு வார்த்தை சொல்லி விட்டுப் போகக்கூடாதா என்று. அதற்கு நான் கர்னாடகமாம். நீ படித்தவனாம். அவள் எங்கு போனாலும் ஒன்றும் சொல்ல மாட்டாயாம்.''

   

நெஞ்சழுத்தமும் அகம்பாவமும் நிறைந்த மீனாட்சியின் கண்கள் கலங்கின. சங்கரன் ஒருமுறை நீலாவை மனதார வாழ்த்தினான்! பரமசாதுவாக இருக்கும் சம்பகத்தைத் தன் தாய் படுத்தும் பாட்டிற்கு இப்படி வாயாடியாக ஒரு மருமகள் இருக்க வேண்டியது தான்! இருந்தாலும், மாமியார் என்று ஒரு மதிப்பு வேண்டாமா? ஆயிரம் பெற்றாலும் அடக்கம் வேண்டாமா?

   

"நாளையிலிருந்து அவள் ஜோலிக்கு நான் போக மாட்டேன். தெரிந்ததா? அடக்கிக் குடித்தனப் பாங்குக்கு நீ கொண்டு வருவாயோ, இல்லை, நீயே அவளுக்கு அடங்கி நடப்பாயோ?'' என்று 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.