பார்க்கறேன். (வருகிறான்.)
முண்: எங்கேடா ரூவா?
மகி: எங்கிருந்து வரப்போகிறது?
கமலே : அடே முண்டா என்ன விசேசம்? சொகமா இக்கிறாயா?
முண் : இந்தச் சமயத்துலே நீ எங்கிட்டுறா வந்தே? இந்தக் களுதே 10-ரூவா தரனும். ஏம்மாத்தராண்டா.
கமலே : அதுக்கா இம்புட்டு பெறமாதம்!
முண் : (கமலேசனுடைய அங்கவஸ்திரத்தைப் பிடிங்கிப் பிரித்து) ஆகா! பலே! பாருங்கையா ஆயிரம் கண்ணோடையாளே! இந்த அளவான துணியைப் போட்ட இந்த பெபுரவுக்கு
10-ரூவா பெரமாதம் இல்லையாம்.
கமலே : போடாமுட்டாளே! நான் எத்தினியோ பத்து ரூபாயே ஒரு கண நேரத்துலே சூதாடித் தோத்திருப்பேண்டா முண்டே! மனிசன் பணத்தே என்னாத்துக்குடா மூட்டையாக் கட்டி வைக்கிறது? பணத்தைத் திங்க முடியுமாடா? கொலபாதவண்டா! நீ 10-ரூவாக்காவ இந்த மனிசனேப்போட்டு இப்புடித் தானாடா நசுக்கறது! ஒனக்கு நெஞ்சுலே எரக்கமில்லியடா?
முண் : அடே! நீ பெரபு தாண்டா! ஒன்னெத் தெரியுண்டா இதாண்டா வளி; நீ போய்த்து வாடா.
கமலே : அடே! இவனெச் சொம்மாப் போட்டு ஒவித்திரம் பண்ணாதே! நான் ஒண்ணு சொல்றேன். அந்த மாதிரி கேளு! இன்னும் 10-ரூவா இவனுக்கு கடனாக்குடு. அதை வச்சு ஆடி ஒன் கடனைத் தீத்துடுவான்.
முண் : எப்பிடிடா?