மேகலையால் மேற்கொண்டு பேச முடியவில்லை. கீழே விழுந்து கிடந்தாள். வாயில் ரத்தம். துப்பாக்கிக்காரரின் பூட்ஸ்கால் இன்னும் காலைத் தூக்கிய நிலையிலேயே தாண்டவத்திற்குத் தயாராகியபோது, அவரது வாய் வார்த்தைகளால் சுட்டன.
“என்னடா நெனச்சே பொட்டப்பயலே... வெள்ளைக் கார்ல கஞ்சா கடத்தினா விட்டுடுவோமா. ஒவ்வொரு பொட்ட வீடா சோதனை போடுங்கப்பா. எத்தனை கிலோடா கொண்டு வந்தே... ஒன்ன பாலோ செய்துக்கிட்டுத்தான் இருக்கோம்: காலையிலேயே வந்து இந்த பச்சையம்மாகிட்டே காதுல மந்திரம் போடுறியா...”
சப்-இன்ஸ்பெக்டர் ஓங்கிய காலை, மேகலையின் முகத்துக்கெதிராய் கொண்டு போகப்போனபோது...
“டேய் போலீஸ் பொறுக்கி... ஒன் வீட்லயும் பொட்டை விழும்டா, கூசாம பொய் சொல்றியே. இதுக்கே நீயும் ஒரு பொட்டையாப் போவே... எங்கே என் ராசாத்தி மேல கால் வை பார்க்கலாம்...”
சப்-இன்ஸ்பெக்டர் அசந்தார். தன்னை ஒரு பொட்டப்பயல் - அதுவும் பச்சையம்மா, அப்படிக் கேட்டதில் அதிர்ந்து போன அந்தத் துப்பாக்கி, குருவக்காவை ஆறுதலாகப் பார்த்தது. அவளும் ஆவேசப்பட்டாள்.
“இப்படித் தராதரம் தெரியாமக் குதிக்கீங்களே... நீங்க உருப்படுவீங்களா. போன மாசம் மாமுல் கட்டுனோம். இந்த மாசம் இன்னும் கட்டலன்னு இப்படியா குதிக்கது. பிச்சக்காச நேராய் கேளேய்யா!”
குருவக்காவும் கீழே விழுந்தாள். ஆனால் மேகலை எழுந்தாள். இதற்குள், பித்து பிடித்து நின்ற, நீலிமா, சப்-இன்ஸ்பெக்டர் கையைப் பிடித்து இழுத்தாள். லட்சுமி ‘என்னைச் சுடுடா’ என்று முந்தானையைக் கீழே போட்டு விட்டு, மார்பைக் காட்டினாள். அதே சமயம், ஆறு போலீஸ்காரர்களும் அந்த அலிக் குடிசைகளை சிதைத்து சின்னா பின்னம் செய்து கொண்டிருந்தார்கள். பல மொட்டையாயின. சில கட்டையாயின. மண் பானைகள் சில்லு