(Reading time: 17 - 33 minutes)
Vata malli
Vata malli

  

இதெல்லாம் எங்க அதிகாரத்துக்கு அப்பாற்பட்ட விஷயம்... நடந்ததைச் சொல்லுங்க.”

  

ஏ.ஸி.லார்... ஒங்களுக்கு சொல்லாட்டாலும் பிரஸுக்கு சொன்னதாய் நெனச்சு சும்மா இருங்க... இந்தாம்மா, ஒங்களப் பத்திச் சொல்லுங்க.”

  

மேகலை, போலீஸ்காரர்களைப் பொருட்படுத்தாது செய்தியாளர்களிடம் தன்னைப் பற்றிச் சுருக்கமாகவும், அங்கே நடந்தவற்றை விவரமாகவும் சொன்னாள். அலிஸ்டெண்ட் கமிஷனர் புன்னகைத்துப் பேசினார்.

  

இந்தாப்பா... எல்லாப் போலீஸும் வெளியில போங்க. நாளைக்கு என்ன ஆபீஸ்ல பாரும்மா... இதுதான் என் கார்டு...”

  

போகாதக்கா... அடி அடின்னு அடிப்பாங்க.எனக்கு கிடைச்சது மாதிரியே கிடைக்கும்.”

  

ஒரு லுங்கிப் பெண், அசல் பெண் தோற்றக் குரலில் பேசியபோது எல்லோரும் சிரித்தார்கள். அப்புறம் சிரித்தது தப்பு என்பது போல் வாயை மூடினார்கள். ஆங்காங்கே சூழ்ந்து நின்ற கும்பல்கள் இப்போது கூட்டங்களாகி, குழைந்து நின்றன. ஏ.சி.யும் பிரஸ்மென்னும் ‘ஆழமாகப்’ பேசிக்கொண்டார்கள்.

  

வாங்களேன். உங்கள நானே டிராப் செய்யுறேன். மூணு ஜீப் இருக்குது...”

  

வேண்டாம் சார்... ஸ்கூட்டர் இருக்குது. பஸ் ஸ்டாண்டும் பக்கத்துல இருக்குது.”

  

என்ன பண்றது... நான் இல்லாட்டால் துப்பாக்கிப் பிரயோகம் அளவுக்குப் போயிருக்கும். சேதி கேட்டு ஓடி வாறேன். சி.எம். செக்யூரிட்டுக்குப் போகணும்...”

  

நீங்க போங்க ஸார்...”

  

பார்த்துப் போடுங்க...”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.