(Reading time: 10 - 19 minutes)
Puncture

 " அம்மா! நீ எங்க ரெண்டுபேரையும் வளர்த்ததுபோல, அப்பாவின் தாய், எங்க பாட்டி, அப்பாவை வளர்க்கவில்லை! பார்! தொட்டாற்சுருங்கிபோல, யாரோ ஏதோ ரகசியமா தகவல் சொன்னான் என்பதை நம்பி, கொஞ்சம்கூட யோசிக்காமலே, எவ்வளவு பெரிய தப்பான முடிவுக்கு வந்துட்டார், பாரேன்!..............."

 குமாரசாமி அதிர்ந்துபோய் கண்களை துடைத்துக்கொண்டு மகனை நிமிர்ந்து பார்த்தார்.

 " என்னடா சொல்றே?"

 " அப்பா! நான்கூட சொல்லவேண்டாம், என்னைவிட இரண்டு மூன்று வயது இளையவள், என் தங்கை, சொல்வாள், கேள்!"

 குமாரசாமி மகளின் முகத்தைப் பார்த்தார்.

 மகள் மீரா, பெயருக்கேற்றமாதிரி, ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுப்பவள்!

 " அப்பா! யாராவது ஏதாவது சொன்னால், அதை தீர விசாரிக்காமல், சரி பார்க்காமல், அப்படியே நம்பி ஒரு மிகப் பெரிய தவறை செய்வதற்கு இருந்தே, நல்லவேளை எங்க ஞாபகம் வந்து எங்களையும் கூட அழைத்துப்போகணுங்கிற பாசத்திலே, வீட்டுக்கு வந்து எங்களிடம் தெரிவித்ததினாலே, பிழைத்தோம்! அப்பா! ரகசியமா வந்த தகவல் சரிதானான்னு யோசித்தாயோ, நீ தப்பு பண்ணியதாக பொய் சொல்லியிருக்கலாமில்லையா? விசாரிக்கவோ, நீயே மனைக்குப்போய் தகவலை சரிபார்க்கணும்னு ஏன் உனக்கு தோன்றவேயில்லை? ..........."

 " மீரா! எனக்கு தகவல் தந்தவன், என் நம்பிக்கைக்குரிய நெருங்கிய நண்பன், வாசு! அவன் பொய் சொல்லமாட்டான், ........"

 " சரி, அவர் என்ன சொன்னார்?"

 " வடிவேலு, தன் மனையிலேயே கட்டிடம் கட்டுகிற பிளானோட, பில்டரை அழைத்துவந்து பார்த்தானாம், அப்பத்தான், தெரிந்ததாம், அவன் மனையிலே நம்ம வீடு கட்டியிருக்கிறது! சர்வே நம்பர் வைத்து, இஞ்ச்டேப் வைத்து அளந்து பார்த்தபோது, சந்தேகம் உறுதியாச்சாம். அந்த இடத்திலேயே நாலுபேருக்கு கேட்கும்படியா உரக்க கன்னாபின்னான்னு சத்தம் போட்டானாம், இதெ எப்படி நம்பாமலிருப்பது?"

 " நாமும்தானே, கட்டுவதற்கு முன்பு, சர்வே நம்பர் படி, இஞ்ச்டேப் வைச்சு அளந்து பார்த்து, ஆரம்பித்தோம். இரண்டு பேரிலே, யார் தவறு செய்தார் என்பதை பாதிக்கப்பட்ட நாம நேரிடையா மனைக்குப் போய் செக் பண்ணவேண்டாமா?"

 " அதற்கெல்லாம் நேரமேது, மீரா? இன்று இப்போ சனிக்கிழமை இரவு ஒன்பதுமணி! நாளை ஞாயிற்றுக்கிழமை! திங்கட்கிழமை காலையிலே எட்டு மணிக்கு விழா முகூர்த்தம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.