(Reading time: 10 - 19 minutes)
Puncture

வச்சிருக்கோம், ஊரிலே எல்லோரையும் அழைச்சிருக்கோம், அவங்க முன்பு, வடிவேலு சொன்னது சரிதான்னு தெரிந்தால், அவங்க எல்லாரும் வாய்விட்டு சிரிக்கமாட்டாங்களா, நமக்கு அவமானமாயிருக்காதா? அதை தாங்கிக்கிற சக்தி எனக்கில்லேம்மா! ......."

 " மறுபடியும் மறுபடியும் அவசரப்பட்டு யோசிக்காமலே, மளமளன்னு, முடிவுக்கு வந்துடறே! ஒருவேளை நீ பயப்படறாமாதிரி, நாம் தப்பு செய்ததாகவே வைச்சுப்போம், அதை சரிபண்ணிட்டாப்போச்சு....."

 " அதற்குள்ளே, வடிவேலு கோர்ட்டுக்குப் போய், ஸ்டே வாங்கி, விழாவை நிறுத்திடுவானே........"

 " கோர்ட்டுக்கு அவன் எப்போ போகமுடியும்? நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை, கோர்ட்டு லீவு! திங்கட்கிழமை கோர்ட்டு பத்துமணிக்கு மேலேதான் திறக்கும், அதன்பிறகு எத்தனையோ கேஸ்களுக்கு நடுவே வடிவேலுவின் பெடிஷனை கோர்ட்டு விசாரிக்கும்போது மாலை மணி நாலுகூட ஆகலாம், அதற்குள்ளே நம்ம விழா நடந்து முடிந்து நாம் திரும்பியிருப்போம், நாலுபேர் முன்பாக விழா நின்று நாம் தலைகுனிந்து நிற்போம் என்கிற உன் பயத்துக்கு அர்த்தமேயில்லை..........."

 குமாரசாமிக்கு இந்த விளக்கத்தைக் கேட்டபிறகு, புதிய தெம்பு பிறந்தது!

 குமாரசாமியின் மனைவி தன் மௌனத்தைக் கலைத்தாள்.

 " ஏங்க! நாம பெற்ற பிள்ளைங்களே நமக்கு தைரியம் சொல்கிறமாதிரி, கோழையாக இருக்கீங்க? தற்கொலையைப்பற்றி பேசறீங்க? நம்மைப் பார்த்து வளரும் பிள்ளைங்க, எதிர்காலத்திலே அவங்க வாழ்விலே இந்தமாதிரி சூழ்நிலைகளிலே எப்படி நடந்துக்கணும் என்பதற்கு நல்ல வழிகாட்டவேண்டிய நீங்க, எடுத்தேன்-கவிழ்த்தேன்னு முடிவு எடுக்கிறீங்க?

 அவமானத்துக்கு பயந்துதானே இந்த தவறான முடிவு எடுத்தீங்க, சரி, உங்க முடிவு நாங்களும் ஏற்றுக்கொண்டு, குடும்பமே சேர்ந்தாற்போல, கைலாசத்துக்கு டிக்கெட் வாங்கினா மட்டும், அவமானம் போயிடுமா? இந்த ஊரிலே கொஞ்சம் பேருக்கு மட்டுமே தெரிந்த விஷயம், நியூஸ்பேப்பரிலே, டி.வி.யிலே வந்தால், உலகத்துக்கே தெரிந்தால், அவமானம் குறையுமா, கூடுமா, இல்லாம போயிடுமா?

 என்னை நிமிர்ந்து பாருங்க! இந்த மாதிரி சூழ்நிலை, நம்ம வாழ்க்கையிலே இதுதான் முதல் முறையா? இதற்குமுன்பு நடக்கவில்லையா? ஒன்றா, இரண்டா? வந்தவை அனைத்தும், சில நாட்களில், வந்தவழியே போய்விடவில்லையா?

'இதுவும் கடந்து போகும்' என்கிற புத்தருடைய போதனையை மறந்துட்டீங்களா?

 நீங்கதானே நேற்று எனக்கு சில்ஸீ வெப்சைடிலே வந்த ராம்.ராமகிருஷ்ணனின் கட்டுரையை

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.