(Reading time: 10 - 19 minutes)
Puncture

படித்துக்காட்டினீங்க, அவர் என்ன சொல்லியிருக்கிறார்? இந்தமாதிரி நேரங்களில், 1.பதட்டப்படாதே, 2. உடனே முடிவு எடுக்கணும்னு அவசரப்படாதே, 3. நிதானமாக யோசி! 4. உன் ஆன்மாவுடன் பேசு, 5. முடிவை அதனிடம் விடு, 6. சரி, தவறு என்பதெல்லாம் அவரவர் பார்வையை பொறுத்தது, 7. பிறக்கும்போது எதையும் கொண்டுவரவில்லை, இறக்கும்போதும் எதையும் கொண்டு போகப்போவதில்லை, அதனால் எல்லாம் இறைவன் நமக்கு தந்த பரிசு, தருவதும், எடுத்துக்கொள்வதும் அவன் விளையாட்டு, 8. எதுவும் நிரந்தரமல்ல, 9. 'போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் எல்லாம் அந்தக் கண்ணனுக்கே' என்ற கண்ணதாசனின் பாட்டை மறவாதே, 10. சாதாரண விஷயங்களை சிக்கலான பிரச்னையாக்குவது, மனதே! அறிவுபூர்வமாக அணுகு!

 இப்படியெல்லாம் படித்துவிட்டு மறுநாளே மறந்துவிட்டீர்களே, சரி சரி, நீங்களே நிதானமாக பதட்டமில்லாமல் விஷயத்தை பிரித்துப் பாருங்க!

  1. கிடைத்த ரகசிய தகவல் சரியா, தவறா என்பதை நாளை காலை இஞ்ச்டேப் வைத்து நீங்களே நம்ம மகனுடன் மனைக்குப்போய் அளந்து பாருங்க, சர்வே நம்பரையும் ப்ளூ ப்ரிண்டையும் எடுத்துக்கொண்டு போங்க.
  2. ஒருவேளை நாமே தவறு செய்திருந்தாலும், உடனே கலவரப்பட்டு, தவறான முடிவு எடுக்காமல், தவறை எப்படி நிவர்த்திக்கலாம் என்று யோசிங்க!
  3. எந்தப் பிரச்னைக்கும் ஒரு தீர்வு உண்டு என நம்புங்கள்!
  4. ரொம்ப முக்கியமான ஒரு விஷயம்! எந்த முடிவை செயல்படுத்த காரியத்தில் இறங்குவதற்கு முன்பும், அந்த முடிவு தவறென பின்னர் தெரியவந்தால், செய்தவற்றை மாற்றமுடியுமா என யோசியுங்கள்!

 உதாரணமா, நீங்க வெளியிலிருந்து வீட்டுக்குள் வரும்போது செய்திருந்தீங்களே ஒரு முடிவு, அதை செயல்படுத்தியபிறகு, முடிவு தவறானது எனத் தெரிந்தால், மாற்றியிருக்க முடியுமா?

 என் உள்மனது சொல்கிறது, நமக்கு வந்த ரகசிய தகவலின்படி நாம் தவறான மனையிலே வீட்டை கட்டிவிட்டோம் என்பதே நாளை காலை நீங்களும் நம்ம மகனும் போய் செக் பண்ணும்போது, அப்படியொரு தவறு நிகழவேயில்லை என்ற உண்மை தெரிந்துவிடும்!

 நிம்மதியாகத் தூங்குவோம், இன்றிரவு, நால்வரும் சேர்ந்து! சரியா?"

 மற்ற மூவரும் உடனடியாக அதை ஏற்றுக்கொண்டு 'ஜெ' போட்டனர்!

 குமாரசாமியின் மனைவியின் உள்மனது சொன்னது, நூற்றுக்கு நூறு சரிதான் என்பது மறுநாள் காலை தெரிந்தபோது, மரணத்தின் வாயிலிலிருந்து தப்பித்த பெரிய நிம்மதி மகிழ்ச்சியாக மலர்ந்தது! 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.