(Reading time: 8 - 16 minutes)
Sunset

கழித்து தயக்கத்துடன் பேசினார்.

 " முனியம்மாவை கோவிச்சுக்காதீங்க! அவங்க, நாமெல்லாம் உடனடியா பிரச்னைக்கு தீர்வு கேட்டதனாலே, அவங்களுக்கு தெரிந்த யோசனையை சொன்னாங்க, அது உங்களுக்குப் பிடிக்கலேன்னா, வேற நல்ல யோசனை சொல்லுங்க!"

 நேரம் ஓடிக்கொண்டிருந்தது! ஒருவரும் பேசவில்லை!

 பூசாரி எழுந்தார். எல்லோரும் அவர் என்ன சொல்லப் போகிறாரென ஆவலுடன் நோக்கினர்.

 " என்னை தப்பா நினைக்கலேன்னா, மாரியாத்தாவை தினமும் பல வருஷமா பூஜிக்கிற மனசோட, ஒரு வழி சொல்றேன், சரியான்னு யோசித்து முடிவெடுங்க! சொல்லட்டுமா?"

 " சொல்லுங்க!"

 " பொதுக் கிணற்றை இத்தனை வருஷமா சேரிசனங்க உபயோகப்படுத்தின தீட்டு கழிய, மாரியாத்தாவுக்கு விசேஷமா பூசை போட்டு வேண்டிக்கிட்டு, சுத்தம் செய்தபிறகு, நாம் உபயோகப்படுத்துவோம்! ........"

 " பிறகு, சேரிசனங்க தண்ணிக்கு என்ன செய்வாங்க?"

 பூசாரி பதில் சொல்லுமுன்பே, லட்சுமணசாமி முதலியார் பேசினார்:

 " எல்லாரும் நல்லா கேட்டுங்க! பொதுக்கிணறு நம்ம செலவிலே, நம்ம கோவிலுக்குப் பயன்படுவதற்காக கட்டப்பட்டது. 

 அதை நாம் பெரிய மனசு பண்ணி, சேரிசனங்க உபயோகத்துக்கு அனுமதித்தோம். இப்ப, நமக்கே தேவைப்படும்போது, பொதுக்கிணற்றை நாம் திருப்பி எடுத்துக் கொள்வதிலே தவறேயில்லை. சேரிசனங்க தண்ணிக்கு என்ன பண்ணுவாங்கன்னு நாம கவலைப்பட தேவையில்லே, நம்ம பிரச்னையை நாம் தீர்த்துக்கொள்கிற மாதிரி, அவங்க பிரச்னையை அவங்க தீர்த்துக்கட்டும். .........."

 எல்லோரும் பிரச்னைக்கு தீர்வு கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில், எழுந்தபோது, முனியம்மா குரலை எழுப்பினாள்.

 " நம்மை நம்பி வாழறவங்களுக்கு, நம்மை வயல்லே வேலை செய்கிறவங்களுக்கு அடிப்படை வசதி செய்து கொடுக்கவேண்டியது, நம்ம பொறுப்பு!"

 " ஏய் கிழவி! எல்லாம் எங்களுக்குத் தெரியும், வாயை மூடிக்கிட்டு வீடு போய் சேரு, ஒழுங்கா! பெரிசா பேச வந்துட்டா, பொறுப்பு, செருப்புன்னு........"

 கூட்டத் தலைவர் தேவரால் கலைந்துவிட்ட கூட்டத்தை நிறுத்த முடியவில்லை.

 அவருடைய கவலையெல்லாம், சேரிசனங்களிடம் சமாதானமாகப் பேசி அவர்களின் முழு சம்மதம் பெறவேண்டும், கூட்டத்தில் சிலர் பேசியதைக் கேட்டபிறகு, சுமுகமாகப் பேசித்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.