(Reading time: 8 - 16 minutes)
Sunset

தீர்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை போய்விட்டது.

 சேரிசனங்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையே வாயச்சண்டை முற்றி வெட்டு, குத்து நடக்காமல் இருக்கவேண்டுமே என மாரியம்மனை வேண்டிக்கொண்டே, வெளியே வந்தார்.

 வெளியே அவர் கண்ணில் பட்ட காட்சி, அவரின் அடிவயிற்றில், நெருப்பை பற்றவைத்தது!

 ஆம், சேரிசனங்கள் அனைவரும் அங்கே ஓரமாக காத்துக் கொண்டிருந்தனர்! 

 தேவரைக் கண்டதும், தூரத்தில் நின்றபடியே அவர்கள், "ஐயா! கும்பிடறோமுங்க!" என்றது!

 தேவருக்கு, அவர்கள் தன்னிடம் என்ன பேசப்போகிறார்களோ என்ற கவலை! எங்களுக்கும் தண்ணிக்கு ஏதாவது வழி செய்யுங்கன்னு கேட்டால், என்ன பதில் சொல்வது?

 அது மட்டுமல்ல, உடனடியாக அவர்கள் பொதுக் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுப்பதை நிறுத்திக் கொள்ளவேண்டும் என எப்படி சொல்வது? 

 மனிதாபிமானமே இல்லாமல், அவர்களை எக்கேடோ கெட்டுப்போ என சொல்லமுடியுமா? அவர்கள் யார்? அவர்கள் வயலில் இறங்கி நாள் முழுவதும் உழைத்ததினால்தானே, மற்றவர்கள் வயிறார உண்ணமுடிகிறது, அவர்கள் கிராமத்திலிருந்து வெளியேறி விட்டால், வயலில் இறங்கி யார் உழுவது?

 இப்படி சிந்தித்துக் கொண்டிருந்தவரை, தடுத்து நிறுத்தியது, மூத்த சேரிவாசியின் குரல்!

 " ஐயா! ஒரு விண்ணப்பங்க!" என்று நெருங்கிவந்த சேரிசனங்க அனைவரும் தேவரின் காலில் விழுந்து எழுந்தனர்.

 " ஐயா! உங்க வீடுகளில் உள்ள கிணறுகள் வற்றிப்போய், நீங்க எல்லாரும் தண்ணிக்கு கஷ்டப்படறதா கேள்விப்படறோமுங்க! எங்களை வாழவைக்கிற நீங்க கஷ்டப்படறபோது, எங்களாலே எப்படி நிம்மதியா இருக்க முடியுங்க? அதனாலே, நாங்க கூடிப் பேசி ஒரு முடிவுக்கு வந்திருக்கோங்க! அந்த முடிவை நீங்க எல்லாரும் பெரிய மனசு பண்ணி ஏத்துக்கிணுங்க!.. ......"

 தேவர், தலை நிமிர்ந்து, பார்வையிலேயே 'சொல்லு' என்றார்.

 " நாங்க இப்ப தண்ணி எடுக்கிற கிணறு உங்களுக்கு சொந்தமானதுங்க! நீங்கதான் பெரிய மனசு வைச்சு, எங்க உபயோகத்துக்கு அதை கொடுத்தீங்க! இப்ப உங்களுக்கே, தண்ணி கஷ்டம் வந்திருக்கும்போது, நாங்க அதை வேடிக்கை பார்க்க முடியுங்களா? நாங்க கீழ்சாதிக்காரங்களா இருந்தாலும், உங்க உப்பை தின்னு வளர்ந்த உடம்புங்க! மனசாட்சி இருக்குங்க! 

 இந்த நிமிஷத்திலிருந்து, நாங்க யாரும், இந்த பொதுக்கிணற்றுப் பக்கமே தலைவைத்து படுக்க மாட்டோங்க! இது மாரியாத்தா மேல சத்தியங்க! 

 நீங்க எல்லாம் தெரிஞ்சவங்க! கிணற்றை எப்படி சுத்தம் செய்யணுமோ, அப்படியே உடனடியா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.