வாழ்ந்திருக்க வேண்டாமா? நீ கொடுத்த தைரியத்தில், நான் என் குடும்பத்தை, உறவினரை பகைத்துக்கொண்டு, உன்னுடன் ஓடிவந்துவிட்டேன், வேறு ஊருக்கு! நீயோ, என்னை கைவிட்டு, இறந்துவிட்டாய்.
இந்தப் பதினைந்து ஆண்டுகள் நான் அனுபவித்த சித்திரவதைகள் நீ எனக்கு தந்த பரிசா? காதலுக்கு கடவுள் தந்த தண்டனையா? கலப்புத் திருமணம் செய்துகொண்டதற்கு வெகுமதியா?
ராசா! இனியாவது நானும் நம் மகளும் நல்லபடியாக வாழ கடவுளிடம் சிபாரிசு செய்வாயா?........"
அதற்குமேல் பேச முடியாமல், கண்ணீரில் கரைந்தாள்!
அந்த தனியார் வங்கி கட்டிடத்துக்குள், நேர்காணலுக்காக உள்ளே நுழைந்ததுமே, சுகுணா தனக்கு வங்கி வேலை கிடைத்துவிட்டதாகவே நம்பினாள்.
நேர்காணலுக்கு காத்திருந்தவர்களின் கும்பலை பார்த்ததும், சுகுணா மலைத்து நின்றாள். மனதில் நிரம்பி வழிந்த நம்பிக்கையெல்லாம் ஆவியாகி கரைந்து போய்விட்டது!
வந்திருந்தவர்களில் தன் வயதொத்த பெண்ணின் அருகில் அமர்ந்து சுகுணா பேச்சுக் கொடுத்தாள்.
" குட் மார்னிங்! ஆல் தி பெஸ்ட்! என் பெயர், சுகுணா!"
" நீ என்ன பைத்தியமா? நான் உன் பெயரை கேட்டேனா? உன் வாழ்த்துக்களுக்காக தவம் கிடந்தேனா? ச்சே! என் மூடையே கெடுத்துட்டியே!" என்று அந்தப் பெண் சட்டென எழுந்து, வேறு இடத்தில் சென்று அமர்ந்தாள்.
அதிர்ச்சியில் சுகுணா உறைந்து போனாள். கண்களில் நீர் தளும்பியது!
'நான் பணிவுடன்தானே அவளிடம் பேசினேன், அவள் ஏன் இப்படி தூக்கி எறிந்து பேசி இடம் பெயர்ந்து என்மீது வெறுப்பை உமிழ்ந்தாள்? கடவுளே! இந்த உலகில் நானும் ஒருத்தியாக காலெடுத்து வைக்கும் முதல் நாளின் முதல் அனுபவமே கன்னத்தில் அறைந்ததுபோல் உள்ளதே! அம்மா! இப்படிப்பட்ட உலகில் நீ என்னை வளர்த்து ஆளாக்க பதினைந்து ஆண்டுகள் என்னென்ன அவமானங்களை சந்தித்தாயோ! உனக்கு நான் கோவில் கட்டி கும்பிட்டாலும் தகும்!'
சுகுணா இப்படி இங்கே தனக்குள் புலம்பிய அதே நேரத்தில், அவள் தாய் தான் சமையல் வேலை செய்த வீட்டுக்குள் பணிவுடன் நுழைந்தாள்.
" வள்ளி! அங்கேயே நில்! இனி நீ தேவையில்லை, இந்தா உனக்குச் சேரவேண்டிய சம்பளம்! இடத்தை காலி பண்ணு!"
" ஏம்மா திடீர்னு என்னை வேண்டாம்னு நிறுத்தறீங்க? நான் ஏதாவது தப்பு செய்தேனா?"