அதற்குள் சுகுணாவுக்கு அழைப்பு வரவே, ப்ரியா அவளை வாழ்த்துச் சொல்லி உள்ளே அனுப்பினாள்.
" சுகுணா! உங்க குடும்பத்தைப் பற்றி சொல்லுங்க!"
" என் தந்தை பதினைந்து ஆண்டுகள் முன்பு ஒரு விபத்திலே இறந்தபிறகு என் தாய் என்னை வளர்த்து வருகிறாள்......."
" உறவினர்கள்.....?"
" என் தாய் கலப்புத் திருமணம் செய்துகொண்டதால், உறவினர்கள் எங்களை ஒதுக்கிவிட்டார்கள்......"
" மை காட்! இந்தக் காலத்தில்கூடவா இப்படி? சரி விடுங்க, உங்களை எங்க பிசினஸ் மேனேஜருக்கு பி.ஏ.வா அமர்த்தலாம்னு நினைக்கிறோம், அந்த வேலையிலே அடிக்கடி வெளியூர் போகவேண்டியிருக்கும், மாசத்திலே இருபது நாட்கள், உங்கம்மா இங்கே தனியா இருக்கணும், நீங்க வெளியூரிலே ஓட்டலிலே மேனேஜருடன் தங்கணும், இதெல்லாம் உங்களாலே முடியுமா?"
" உங்களுக்கே தெரியுது, அந்த வேலை எனக்கு பொருந்தாதுன்னு, வேற வேலை, இந்த ஊரிலேயே பத்திலிருந்து ஐந்துமணி வரை பார்க்கிற சாதாரண வேலை எனக்கு கொடுங்களேன், ப்ளீஸ்!"
" சுகுணா! இந்த வங்கியிலே எல்லாரும் எல்லா வேலையும் செய்ய தயாராயிருக்கணும், இன்று இல்லாவிட்டாலும் நாளை, அல்லது அதற்கு மறுநாள் உங்களை அந்த வேலையில் அமர்த்த நேரிடலாம். உங்கம்மாவை கலந்து பேசி முடிவு சொல்லுங்க! உங்கம்மாவிடம் செல் போனிலே கேளுங்க!"
" அவசியமே இல்லை, என் அம்மா சம்மதித்தாலும், அம்மாவை தனியே விட்டுச் செல்ல எனக்கு விருப்பமில்லை, இந்த பதினைந்து ஆண்டுகள் அவள் என்னை வளர்த்து ஆளாக்க பட்ட கஷ்டங்கள் போதும்! சாதாரண குமாஸ்தா வேலை காலி இருந்தால், கொடுங்கள், உடனே வேலையில் சேருகிறேன், மிக்க நன்றி!"
சுகுணா நடந்ததை ப்ரியாவிடம் தெரிவித்ததும், அவள் வயிறு குலுங்க சிரித்துவிட்டு சொன்னாள்.
" அந்த நாலு பேரும் அனுபவஸ்தர்கள், அவர்களுக்கு தெரியாதா, எதைச் சொன்னால், மனுப்போட்டவர்கள் அவர்களாகவே வெளியேறிவிடுவார்கள்னு, சரி, வா! போகலாம்"
" ப்ரியா! நீங்க என்னுடன் வந்து என் தாயிடம் பேசி அவங்களை சமாதானப்படுத்துங்க,