" சொல்லுங்க, ப்ரியா!"
" இன்றைக்கு இந்தியாவை ஆள்கிற அரசியல் கட்சி, வரப்போகும் தேர்தலில் ஜெயிக்குமா, தோற்குமா? எத்தனை சீட்டுகள் அதற்கு கிடைக்கும்?"
" அடப்பாவிங்களா!"
" நான் சற்று துடுக்காகவே, அவர்களிடம் பதிலுக்கு, இந்தக் கேள்விக்கும் நான் மனு போட்டிருக்கும் வேலைக்கும் என்ன தொடர்பு? எனக் கேட்டேன்....."
" சரியாத்தான் கேட்டீங்க, ப்ரியா!"
" அதற்கு அவர்கள் சொன்ன பதிலை கேளுங்கள், சுகுணா! இந்த மாதிரி இக்கட்டான எதிர்மறையான சூழ்நிலைகளிலே நீ எப்படி சமாளிப்பாய் என தெரிந்துகொள்ளவே கேட்டோம், ஏன்னா, உன்னை ரிசப்ஷனிஸ்ட்டா போட்டால், நீ எப்படி சமாளிப்பாய் என அறியத்தான்! நீ கோபம் கொள்கிறாய், அதனால் தகுதியில்லை, நீ போகலாம் என்று விரட்டினார்கள்...." எனச் சொல்லிவிட்டு ப்ரியா வயிறு குலுங்க சிரித்தாள்.
" ப்ரியா! உங்களாலே எப்படி தோல்வியைக் கண்டு துவளாமல், சிரிக்க முடிகிறது?"
" அதுவா! சற்றுமுன் சொன்னேனே, எதிர்பார்ப்புகளே கூடாது, வருவதை எதுவானாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும்...."
" அதெப்படி?"
" சரி, வேறென்ன செய்வாய்? துயரப்படுவாய், கோபம் அடைவாய், சாபம் தருவாய், உன் மனதை நீயே வீணாக புண்ணாக்கிக் கொள்வாய், என்ன பயன்? யதார்த்தமாக நினைத்து வாழ்வதே சிறந்தது!"
அதற்குள், ப்ரியாவை நேர்காணலுக்கு அழைத்ததால், அவள் எழுந்து சென்றாள்.
வள்ளி வருத்தத்துடன் தலை குனிந்து அந்த வீட்டிலிருந்து வெளியே வந்தபோது, அந்த வீட்டின் செக்யூரிடி நெருங்கி வந்து பேசினான்.
" வள்ளி! உன்னை, பக்கத்து வீட்டு பத்மாவதியம்மா பார்க்கணும்னு சொன்னாங்க! வேலை விஷயமா இருக்கும்னு நினைக்கிறேன்....போய் பார்!"
வள்ளி யாரையும் பார்த்துப் பேசுகிற மூடில் இல்லாத காரணத்தால், தன் வீடு நோக்கி நடந்தாள்.
அதற்குள், பக்கத்து வீட்டு பத்மாவதியே, கைதட்டி, வள்ளியை அழைத்ததால், வள்ளி வேறு வழியின்றி, பக்கத்து வீட்டுக்கு சென்றாள்.
" உள்ளே வா!"