(Reading time: 15 - 30 minutes)
Couple

 " தப்பு நடந்துவிடக் கூடாதுன்னுதான், உன்னை வேலைக்கு வரவேண்டாம்னு நிறுத்தறேன்.........."

 " என்னம்மா சொல்றீங்க?"

 " இதோ பார்! இந்த வீடியோவை! நீ நேற்று என் புருஷனோட நடுத்தெருவிலே மணிக்கணக்கா சிரித்துப் பேசி மயக்கறதை! த்தூ! இதெல்லாம் ஒரு பிழைப்பா? குடியை கெடுக்கற வேலை! அப்பவே எங்க அம்மா உன்னை வேலைக்கு வைக்கவேண்டாம்னு தடுத்தாங்க, நான்தான் உன்மேலே இரக்கப்பட்டு உள்ளே அனுமதித்தேன், இப்ப அதற்கு கைமாறா, நீ என்னை இந்த வீட்டிலிருந்து வெளியேற்றிவிட்டு நீ நிரந்தரமா உள்ளே வந்து அமர்ந்துடுவே போல தெரியுது! தயவுசெய்து, இனி என் புருஷனை எப்போ எங்கே பார்த்தாலும் பேசக்கூடாது, சிரித்து வழியக்கூடாது, வசியப்படுத்த நினைக்கக்கூடாது, போ வெளியே!"

 " அம்மா! நான் போவதற்கு முன்பு ஒரு விஷயத்தை சொல்லிவிட்டுப் போகிறேன், நேற்று என்ன நடந்ததுன்னா......"

 " நீ எதுவுமே சொல்லவேண்டாம். வெளியே போ!"

 அந்த நேரத்தில், உள்ளேயிருந்து அங்கு வந்த வீட்டுத் தலைவர், தன் மனைவியை கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார். அந்தம்மா, வலி பொறுக்கமுடியாமல், கன்னத்தில் கைவைத்தவாறே, " பார்த்தியா, எதுவும் தப்பா நடந்துவிடக்கூடாதுன்னு பயந்துண்டு, உன்னை வேலைக்கு வரவேண்டாம்னு சொன்னதற்கே, என் வீட்டுக்கார ர், என்னை என் வாழ்க்கையிலேயே முதல் முறையா கைநீட்டி அடித்துவிட்டார்! ஏன்? உன்மீதுள்ள பரிவு! ப்ளீஸ், வள்ளி! இங்கிருந்து போய்விடு!"

 " ஜானவி! நீ தப்பா புரிஞ்சிக்கிட்டு, ஒரு ஏழையின்மீது வீணா களங்கம் கற்பிக்கிறே! நான்தான் நேற்று தெருவிலே அவள் போகும்போது, அவளை நிறுத்திவைத்து பேசினேன், அதை என்னை பிடிக்காத எவனோ, வீடியோ எடுத்து, உனக்கு அனுப்பி, குடும்பத்திலே கலகத்தை உண்டுபண்ணிட்டான், எதையுமே தீர விசாரிக்காமல், ஒரு ஏழையின்மீது களங்கம் சுமத்தக்கூடாது! மகா பாபம்! இந்த வீட்டிலே வள்ளி நான்கு வருஷமா வேலை செய்கிறாள், இதுவரையில் அவளைப்பற்றி ஏதாவது புகார் உண்டா? சொல்லு, ஜானவி! அதைவிட முக்கியமா, என்னை சம்பந்தப்படுத்தி அவளை களங்கப்படுத்துவதற்குமுன், என்னிடம் விசாரித்தாயா என்ன நடந்ததுன்னு, .......?"

 " வள்ளி! பார்த்தியா? உனக்காக வரிந்து கட்டிக்கொண்டு, ஒரு பெரிய வக்கீலைப் போல, என்னிடம் குறுக்குக் கேள்வி கேட்கிறதை! வள்ளி! இந்த நிமிடமே நீ ஒரு முடிவை சொல்லு,

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.