Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 16 - 31 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
Pin It

சிறுகதை - இறுதி சந்திப்பு! - ரவை

ந்தச் செய்தியை படித்ததிலிருந்து மனசே சரியில்லை!

 உலகிலேயே அனைவரும் ஏகோபித்து ஒருமனதாக ஏற்கும் உண்மை:

 தாய் என்பவள் பெற்ற பிள்ளைகளிடத்தில் நிறைவான, தூய்மையான, அபரிமிதமான அன்பை செலுத்துபவள்! பிள்ளைகளுக்கு அவளே தெய்வம்!

 உண்மையா இல்லையா?

 அப்படிப்பட்ட தாய்க்குலத்தில், எப்படி இவள் மட்டும் வித்தியாசமாக, இல்லை, மிக கொடூரமாக, நடந்துகொண்டாள்?

 நினைத்துப் பார்க்கவே, குலை நடுங்குகிறது!

 நீங்களே அந்தக் காட்சியை பாருங்கள்!

 பதினெட்டு வயது நிரம்ப, இன்னும் மூன்றே நாட்கள் மீதமுள்ள கன்னிப் பெண்!

 அந்த வீட்டில் அவளும் அவள் தாயும் மட்டுமே வசிக்கின்றனர்.

 தாயின் பாதுகாப்பில் உள்ளதால், தனக்கு எந்த தீங்கும் நேராது என்ற பூரண நம்பிக்கையுடன், நிம்மதியாக ஆழ்ந்து உறங்குகிறாள்.

 நள்ளிரவு! என்ன இன்பமான கனவு கண்டாளோ, அந்தக் கன்னிப்பெண்! அவள் முகத்தில் புன்னகை!

 இந்தக் காட்சியை கண்ட அவள் தாய், வழக்கமாக, அவளருகில் படுத்து, அவளை கட்டியணைத்து கன்னத்தில் முத்தமிட்டு, கொஞ்சி மகிழ்வாள் இல்லையா?

 இந்தக் காட்சியிலேயும் அதைத் தானே நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?

 மாறாக, அங்கு நடந்ததை கவனியுங்கள்!

 தாய் படுக்கையிலிருந்து எழுந்து விளக்கை ஏற்றுகிறாள், உள்ளே சென்று கையில் ஒரு பாட்டிலையும், இன்னொரு கையில் தீப்பெட்டியையும் எடுத்து வந்து, சிறிதும் தயங்காமல், நேரே அந்த பெண் அருகே சென்று, அவள் உடல்மீது, கையிலிருந்த பாட்டிலில் இருந்த திரவத்தை கவிழ்த்துவிட்டு, சிறிதும் இடைவெளியின்றி, தீக்குச்சியை ஏற்றி, பெண்ணின்மீது போடுகிறாள்.

 அலறிக்கொண்டு, 'ஐயோ! அம்மா!' என கதறிக்கொண்டு, அந்தப் பெண் எழ முயற்சிக்கிறாள், முடியவில்லை. ஒரு வினாடியில், தீ உடல் முழுதும் பரவி, அவளை எரித்து சாம்பலாகிவிட்டது.

 கவனியுங்கள்! அந்தக் கடைசி நேரத்திலும், அந்தப் பெண், தன்னைப் பெற்ற தாயைத்தான் காப்பாற்ற அழைக்கிறாள்..........

 ஆனால், அந்த கொடூரமான தாய் சிறிதுகூட, அலறித் துடிக்கும் பெண்ணின்மீது இரக்கம்

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4  5  6  7  8  9 
 •  Next 
 •  End 

About the Author

RaVai

RaVai's Popular stories in Chillzee KiMo

 • Avan kaathil vizhumAvan kaathil vizhum
 • Nee en amma illaiyaaNee en amma illaiyaa
 • Anbin aazhamAnbin aazham
 • AzhaguAzhagu
 • Gangai oru MangaiGangai oru Mangai
 • Naan oru thavarum seiyyalaNaan oru thavarum seiyyala
 • Paaravaiyai thiruthuPaaravaiyai thiruthu
 • VithiyasamaanavanVithiyasamaanavan

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: சிறுகதை - இறுதி சந்திப்பு! - ரவைJebamalar... 2019-12-15 10:29
Different story sir.. Kathal pasam ithelam nirantgaramilai சூழ்நிலைகளுக்கு தக்க மனிதனின் மனம் மாறி விடும் என தெளிவாக விளக்குகிறது. தன் மனம் படும் பாட்டை தன் மகளும் பெற கூடாது என போராடும் தாயின் மனதை உணர்ந்து கொள்ள முடிகிறது. வயது அனுபவம் பக்குவம் இல்லாத மகளின் முடிவு தவறு என்று அறிந்தவர் தானும் இன்னும் பக்குவம் இல்லாதவர் என்பதை அவருடைய முடிவு மூலம் வெளிப்படுத்தி விட்டார். சோகமான முடிவு. கடைசி நேரத்திலும் தன்னுடையவன் தன்னை காண வரவில்லை ஏக்கம் கொண்ட தாய், கடைசி வரை தாய் தன்னை காப்பாற்றுவார் என்று உதவிக்கேட்ட மகளை நினைக்க தவறி விட்டாரே.. கார்த்தி பண ஆசையால் சுயநலவாதியாக மாறினது எவ்வளவு உண்மையோ அது போல் ரேனுகாவும் பாசம் காதல் என்று சுயநலவாதியாக மாறி விட்டார் என்பதே உண்மை.. வாழ கற்றுக் கொடுக்க வேண்டிய கடமையை மறந்து வாழ்க்கையின் யதார்த்த நிலையை புரிய வைக்கமால் வாழ்க்கையை அழித்து விட்டது வேதனையை தருகிறது. கதை படிக்கும் ஒவ்வொருவரும் உண்மையை புரிந்து கொள்ளட்டும்
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - இறுதி சந்திப்பு! - ரவைரவை 2019-12-15 11:13
அன்புள்ள ஜெபா! இதுதான், இதுதான் கதை தரும் செய்தி! சாதிவெறி, பணத்திமிர் ஒழுக்கப்படவேண்டியதற்குப் பதிலாக, தவிர்க்கமுடியாத ஒன்றாக ஏற்கப்படக்கூடாது! அந்த தீய சக்திகளை, பல தலைமுறைகளானாலும் போராடி வென்றாகவேண்டும்! கதையை படித்தவர்களின் மனதில் இந்த வைராக்கியமா பிறக்கவேண்டும்! தங்கள் விமரிசனத்துக்கு மிக்க நன்றி!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - இறுதி சந்திப்பு! - ரவைmadhumathi9 2019-12-15 07:15
:clap:nalla kathai sir (y) oru thaayin paarvai veru thaan. :yes: veliyil matravargalukku nadakkum vishayangalaiye nam pillaigalukku idhupola nadakka koodaathu endru ninaikkum thaai thanakku nadakkum vishayaththi eppadi manathai baathikkum ena purinthu kolla mudigirathu.but eduththa mudivai enna solla :Q: :GL:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - இறுதி சந்திப்பு! - ரவைரவை 2019-12-15 09:21
மதும்மா! தாங்கள், பாதிக்கப்பட்ட தாயின் நிலையிலிருந்து அவள் முடிவை பார்த்துள்ளதுதான், இக்கதை தங்களை சென்றடைந்துள்ளதின் வெற்றி! நமக்கு உள்ள மனப் பக்குவத்தில் அவள் அப்போது இல்லை; தன்னை தன் முன்னாள் கணவன் தூக்கி எறிந்துவிட்ட கோபாக்னி அவளை உணர்ச்சிப் பிழம்பாக்கி, தன் மகளுக்கும் அப்படி நேரக்கூடாது என உறுதியாக நினைக்கிறாள்! சாதி வெறியும், பெண் இனத்தை ஆண் இனம் அலட்சியமாக தூக்கி எறியும் குணமும், பணத் திமிரும் உள்ளவரை காதல் எனும் மென்மையான உணர்ச்சி ஆதரிக்கப்படுவதில்லை! தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - இறுதி சந்திப்பு! - ரவைAdharvJo 2019-12-14 21:11
Good attempt uncle!! Not sure if this is some news article....indha mathiri dumb ppl neriya irukanga :yes: so probabilities are there, however I would say this decision of renuka is utter foolishness steam could understand her pain of dejection...irundhalum....I really have no comment on this cruel step of renuka….namba nattil indha mathiri ethanaiyo betrayals nadakadhu than adhukun ellarum ippadi oru extreme steps eduka mudiyuma adhuvum here it is a vague situation. Did that mom really have some concern on her daughter????
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - இறுதி சந்திப்பு! - ரவைரவை 2019-12-14 21:57
ஆம், அதர்வா! வந்த செய்திதான், இக்கதையின் பின்னணி! நாம் செய்கிற தவறுகளுக்கு எப்படியெல்லாம் காரணம் கற்பித்துக் கொள்கிறோம் என்பதை நினைவுறுத்தும் கதை இது! தங்களை சிந்திக்கவைத்த கதை என நினைக்கையில், மகிழ்ச்சியாய் உள்ளது. மிக்க நன்றி.
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - இறுதி சந்திப்பு! - ரவைsasi 2019-12-14 19:56
கதை அருமையாக இருந்தது. ஒரு தாயின் பயம் தன் மகளுக்கு செய்த செயல் இவை கொஞ்சம் கஷ்டத்தை தருகிறது. காதல் திருமணம் செய்தவர்கள் டைவர்ஸ் போகிறார்கள் ஓகே பெற்றோர் பார்த்து வைத்த திருமணமும் கூட முறிந்துவிடுகிறதே ஐயா சிலர் பிள்ளைகளுக்காக டைவர்ஸ் வாங்காமல் காலம் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள் யார் வீட்டில்தான் பிரச்சனையில்லை குறையில்லை சாதி மதம் ஜாதகம் பார்த்து பெற்றவர்கள் செய்த திருமணங்களில் சிலது கூட தோல்வியில் முடிவடைகிறது. இதில் இந்த கதையின் தாய் சிறிது யோசித்திருக்கலாம் மகளிடம் இன்னும் விளக்கமா பேசியிருக்கலாம் கொலை செய்யும் அளவு யோசிப்பார் என நான் எதிர்பார்க்கவில்லை சாரி சார் எனக்கு இக்கதையினால் தவறான நீதி மட்டுமே தென்படுகிறது தவறாக சொல்லியிருந்தால் மன்னிக்கவும்
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - இறுதி சந்திப்பு! - ரவைரவை 2019-12-14 21:52
Sasimma! நீங்க சரியாகத்தான் சொல்லியிருக்கீங்க! ஒரு நிகழ்ச்சியை சம்பந்தப்பட்ட நபர்கள் பார்க்கிற பார்வையே வேறு, தள்ளி நின்று நிகழ்ச்சி முடிந்தபின், அதை அலசிப் பார்ப்பவர்களின் பார்வையே வேறு! வாழ்க்கையில் உணர்ச்சிவசப்பட்டு பல நேரங்களில் தவறான முடிவு எடுக்கிறார், என்பதை நினைவுறுத்தும் கதை இது!
Reply | Reply with quote | Quote

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
MMVU

NeeNaan

KNY

KTKOP

PVOVN2

PMM

IOKK2

VTV

IOK

NIN

EEKS

KET

KKP

POK

EMS

NSS

NSS

KiMo

NSS

VIVA

VAMA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top