(Reading time: 16 - 31 minutes)

சாகிற வரையிலும், ஒருவரை ஒருவர் விட்டுப் பிரியமாட்டோம், இல்லையா ரேகா?"

 அவள் ஓடிவந்து அவனை கட்டித் தழுவி முத்தமிட்டாள்.

 அவர்களைப் போல, நானும் எனக்கு சரியெனத் தோன்றிய முடிவை எடுத்தேன். அவர்களிடம் மேற்கொண்டு பேசுவது பயன் தராது என புரிந்துவிட்டது.

 ஆனால், ஒரு விஷயத்தில் பிடிவாதமாக இருந்தேன்.

 எனக்கு நேர்ந்த கதி, என் மகளுக்கு ஏற்படக் கூடாது!

 அவளுக்கு சில நாட்களில் பதினெட்டு வயது முடிந்ததும், அவளை, எனது சாதியிலேயே நல்ல பையனாகப் பார்த்து, பெற்றோரின் சம்மதமுடன் திருமணம் செய்ய நினைத்ததற்கு மாறாக, என்மகள் ரேகா அதே நாளில் தன் இஷ்டப்படி முடிவெடுத்து செயலில் இறங்கப்போகிறாள் என்பது தெரிந்துவிட்டது.

 அவளை தடுப்பதற்கு என வேறுவழி தெரியவில்லை!

 ஐயா! இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும், எத்தனை பெரியார்கள் வந்து பிரசாரம் செய்தாலும், சாதிவெறி ஒழியப் போவதில்லை, பணத்தின் பலம் குறையப் போவதில்லை!

 ஐயா! ஒரு விஷயத்தை கவனிச்சீங்களா? ரேகா செத்தே போய்ட்டா! நான் போயிண்டிருக்கேன், பல நாட்கள் ஆயிடுத்து, நான் இங்கே கிடக்கிறேன், இதுவரையிலும் ஒரு முறையாவது, என்மீது லைலா-மஜ்னு காதல், உயிரையே கொடுப்பேன்னு சொன்ன காதல், கூடப் படுத்து மகளையும் பெற்ற காதல், பல வருஷங்கள் தம்பதிகளா ஊரை சுற்றிய காதல்னு என்னை ஏமாற்றிய அந்த கார்த்தி, ஒரு முறைகூட வந்து என்னை எட்டிக்கூட பார்க்கலையா! நெருப்பைவிட, இந்த நினைப்புத்தான்யா என்னை சித்திரவதை செய்யுது!

 பாவம்! இளங்குருத்துகள், காதல், கீதல்னு பேத்திண்டு தங்கள் வாழ்வையும் உயிரையும் பலி கொடுக்கின்றன! எல்லாம் சதைக்காகவும் மனசுக்காகவும் சில நாட்களுக்கு ஆடுகிற விளையாட்டு! பிரமை! சில நாட்களில் மறையும் மாயை!

 சாதி, காதல் இரண்டும் நம்ம இளம் தலைமுறையை நச்சுப் பாம்பா கொன்னு திங்கிற விஷம்யா!

 இதை எப்படியாவது தடுக்கவேண்டும்!

 இந்தச் செய்தியை தயவுசெய்து, நாடு முழுவதும், பரப்புங்கள்!

 என் கடமை முடிந்துவிட்டது. என் முடிவை நான் தேடிக்கொள்வதை எவராலும் தடுக்க முடியாது!

இதுவே நம் கடைசி சந்திப்பு!" 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.