(Reading time: 16 - 31 minutes)

இருக்கும்.

 மிகவும் அந்நியோன்யமான குடும்பம். அவர்கள் மிக்க மகிழ்ச்சியுடனும் அமைதியாகவும் வாழ்ந்து வந்தனர்.

 குடும்பத் தலைவன் ஒரு தனியார் கம்பெனியில் உயர்பதவி வகித்தார். அந்தப் பெண்ணை கான்வெண்டில் படிக்க வைத்தார்.

 வார விடுமுறை நாட்களில், மூவரும் கடற்கரை, சினிமா, சங்கீத கச்சேரி, நாடகம் என ஆனந்தமாக பொழுதைக் கழிப்பார்கள்.

 யார் கண்பட்டதோ, அந்தக் குடும்பத்தில் திடீரென ஒரு மாறுதல் தெரிந்தது!

 வார விடுமுறை நாட்களில், மூவருமாக வெளியே செல்வது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து நின்றுபோனது.

 குடும்பத் தலைவன் ஆபீஸிலிருந்து வீடு திரும்புவதும் தாமதமானது மட்டுமின்றி, அவனிடமிருந்து அப்போது மது அருந்திய நாற்றமும் தடுமாறி நடக்கும் நிலையும் தெரிந்தது!

 வீட்டுக்கதவு தாளிட்டிருந்தாலும், கணவன் மனைவியும் உரக்க தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டது, வெளியில் எல்லோருக்கும் காதில் விழுந்தது!

 முதலில், பக்கத்து வீடுகளில் வசித்தவர்கள், வீட்டு வேலைக்காரியிடம் துருவித் துருவி விசாரித்ததில், கணவனுக்கு ஆபீஸில் வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டு, அவன் மனைவியிடம் விவாகரத்துக்கு சம்மதம் தரும்படி வற்புறுத்தி தினமும் துன்புறுத்தியதாகவும் தெரிந்தது.

 அதெப்படி இருக்கமுடியும்? மிகவும் நெருக்கமாகவும் மகிழ்வுடனும் வாழ்ந்துவந்த தம்பதிகளிடையே இப்படி ஒரு பிரச்னை வந்திருக்க முடியும்? என்ற வினாவுக்கு சரியான விடை கிடைக்காத காரணத்தால், ஆவலை அடக்கிக் கொள்ள முடியாமல், ஒருநாள் பதினைந்து வயதான அவர்களின் மகளை தனியே மடக்கி நிறுத்திவைத்து, சாமர்த்தியமாக விசாரித்ததில் தெரிந்தது, இதுதான்!

 கணவன் மனைவியிடம் விவாகரத்து கேட்டு துன்புறுத்துகிறான், மனைவிக்கு தன்னை பிடிக்காமல் போகவேண்டும் என்பதற்காக, வேண்டுமென்றே புதிதாக குடிப்பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பதாகவும், தெரிய வந்தது! தம்பதிகளுக்கிடையே மனத்தாங்கல் ஏற்பட்டதின் காரணம், அந்தப் பதினைந்து வயதுப் பெண்ணுக்கு தெரியவில்லை!

 அதுமட்டும் தெரிந்துவிட்டால், முழு விவரங்களும் வெளிவந்து தம்பதிகளின் மனமாறுதலுக்கு உண்மையான காரணம் அறிந்து கொள்ள முடியும் என்பதால், நாலைந்து பேர் சேர்ந்து ஒருநாள், மகள் பள்ளிக்கு சென்றிருந்தபோது, அந்த வீட்டுக்கு சென்று குடும்பத் தலைவியை

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.