(Reading time: 16 - 31 minutes)

காட்டாமல், இயந்திர கதியில், நேரே போய் வீட்டின் கதவுகளை திறந்து வைத்துவிட்டு, பெண்ணின்மீது கொட்டிய பாட்டில் திரவத்தை தன்மீதும் கொட்டிக்கொண்டு உடனடியாக தீக்குச்சியை பற்றவைத்து தன் உடலின் மீது வைத்துக் கொண்டாள்.

 ஜ்வாலையின் கொதிப்பு தாங்கமுடியாமல் இருந்தாலும், தாய் வாய்விட்டு ஓலமிடாமல், உடலை மட்டும் நெளித்து குனிந்து வளைத்து தீயுடன் போராடி கீழே விழுந்தாள்!

 பெண்ணின் அலறலையும் கதறலையும் கேட்ட அக்கம் பக்கத்தினர், ஓடிவந்து வீட்டுக்குள் நுழைந்து அங்கு இருவரும் தீயில் வெந்து கருகுவதைப் பார்த்து அலறி ஆம்புலன்ஸ் வரவழைத்து இருவரையும் மருத்துவ மனைக்கு தூக்கிச் சென்றனர்!

 போலீஸுக்கும் தகவல் தெரிவித்தனர்!

 மருத்துவ மனையில், அந்த நள்ளிரவில் தூக்க கலக்கத்திலிருந்த டாக்டர்களும் நர்ஸ்களும் இருவருக்கும் சிகிச்சை செய்வதற்குள், பெண்ணின் உயிர் பிரிந்துவிட்டது!

 தாயின் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது!

 அவள் தலையெழுத்து, பொதுமக்களிடமிருந்தும் போலீஸ்காரனிடமிருந்தும் வாங்கி கட்டிக்கொள்ள வேண்டிய வசைகளையும் சீண்டல்களையும் அவமானங்களையும் எதிர்கொள்ள, பத்து நாட்கள் தீவிர சிகிச்சைக்குப்பின், உயிர் பிழைத்தாள்!

 எந்த தாயுமே இத்தனை கொடூரமாக நடந்துகொள்ள மாட்டாளே, வித்தியாசமாக இந்த தாய் மட்டும் ஏன் இப்படி நடந்துகொண்டாள் என்பதை அறிய, எனக்கிருந்த ஆவலில், நான் போலீஸின் அனுமதியுடன், மருத்துவ மனையில் அவளைப் பார்த்து விசாரித்தேன்.

 " ஐயா! தங்களுடைய ஆவல் எனக்குப் புரிகிறது. ஆனால், தற்போதுள்ள என் உடல்நிலையில் விவரமாக தங்களிடம் எடுத்துரைக்க இயலவில்லை. இன்னும் சில நாட்களாகலாம்.

 அதற்குள், எனக்கொரு உதவி செய்யுங்கள்! என் வீட்டின் அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களிடம் பேசி, எங்கள் இருவரைப் பற்றி அவர்கள் சொல்வதை விளக்கமாக கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்! என்னிடமும் நீங்கள் விசாரணையில் தெரிந்து கொண்டதை தெரிவியுங்கள்! செய்வீர்களா?"

 " நிச்சயமாக!"

அவள் கூற்றிலிருந்த நியாயத்தை உணர்ந்து, நான் அவள் வீட்டுக்கு சென்று அக்கம்பக்கத்தில் உள்ளோரிடம் பேச்சு கொடுத்தேன்.

 அவர்களிடமிருந்து தெரிந்தது இதுதான்:

 பத்து ஆண்டுகளுக்கு முன், அந்த வீட்டில் தாயும் மகளும் குடியேறியபோது, அந்தப் பெண்ணின் தந்தையும் உடனிருந்தார். அப்போது, அந்தப் பெண்ணுக்கு சுமார் ஏழு வயது

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.