(Reading time: 16 - 31 minutes)

 இறுதியில் என்ன நடந்தது? சாதிவெறியர்கள் மாறவில்லை, இவன்தான் பணத்துக்காக, மனம் மாறி, என்னிடமிருந்து பிரிந்தான். இந்த உண்மைநிலையை நான் நன்கு புரிந்துகொண்டு மகளுடன் தன்னந் தனியாகவே இருக்கவும், மகளை பதினெட்டு வயது முடிந்தவுடனேயே நல்லவனாகப் பார்த்து திருமணம் செய்து கொடுத்து விடவும் வைராக்கியமாயிருந்தேன்.

 என் மகள் ரேகாவிடம் பக்குவமாக என் வைராக்கியத்தை தெரிவித்தேன்.

 ஒரு விஷயம், சொல்ல மறந்துவிட்டேனே, மகளுக்கு 'ரேகா' என ஏன் பெயர் வைத்தோம், தெரியுமா?

 என் பெயரின் தலை எழுத்து 'ரே', அவன் பெயர் கார்த்தி, தலை எழுத்து 'கா'! இரண்டையும் சேர்த்து 'ரேகா' என மகளுக்கு பெயர் வைத்தோம்......

 அப்படியெல்லாம் ஆசை ஆசையாக வளர்த்த மகளின் எதிர்காலம், என்னுடையது போல, பாதியிலேயே அணைந்துவிடாமலிருக்க என்னால் முடிந்ததை நான் செய்ய துடித்தபோது, அவள் ஒருநாள் என் தலையில் கல்லை தூக்கிப் போட்டாள்.

 " அம்மா! என்னுடன் படிக்கிற ஒரு பையன் என்னை உயிருக்கு உயிரா காதலிக்கிறாம்மா! உன்னை வந்து பார்க்கணும்னு ஆசைப்படறாம்மா! நாளைக்கு அவனை அழைத்துவரட்டுமா?"

 " முதல்லே, அவனை நீ விரும்பறயான்னு தெளிவா சொல்லு!"

 " இதெல்லாம் வெளிப்படையா சொல்லணுமாம்மா? எப்போ நான் நாளைக்கே உன்னைப் பார்க்க அவனை அழைத்து வரட்டுமான்னு கேட்கிறபோதே, புரிஞ்சிக்கணும்மா!"

 " ஓகோ! அவ்வளவு தூரத்துக்கு முற்றிப் போயிடுத்தா? பையன் நம்ம சாதியா? பணக்காரனா, ஏழையா? அவனோட அப்பா, அம்மா சம்மதிச்சிட்டாங்களா?"

 " அம்மா! நம்ம சாதியான்னு கேட்கிறியே, நாம எந்த சாதி? அப்பா ஒரு சாதி, நீ வேற சாதி! என்னை ரெண்டு சாதியும் ஏத்துக்கமாட்டாங்க, நான் கலப்பட சாதியை சேர்ந்தவள்! இப்ப கொஞ்ச நாளா, இந்த கலப்பட சாதி பெருகி வருதும்மா........"

 " இன்னமும் நீ என் கேள்விக்கு பதில் சொல்லலே?"

 " அவன் உன் சாதியை சேர்ந்தவனுமில்லே, அப்பா சாதியை சேர்ந்தவனுமில்லே........."

 " உன்னை மாதிரி கலப்பட சாதியா?"

 " சீச்சீ! அவன் சுத்த பிராமணன்ம்மா!"

 " ரேகா! எனக்கு நேர்ந்த கதியை தெரிந்துமா, பதினெட்டு வயசு ஆவதற்கு முன்பே, காதலித்து கல்யாணம் செய்துக்கற அளவுக்கு வந்துட்டே?"

 " அதையும் சொல்லிடறேம்மா! அவனுக்கு இருபத்திரண்டு வயது முடிஞ்சிடுச்சி, எனக்கு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.