(Reading time: 16 - 31 minutes)

சிறுகதை - இறுதி சந்திப்பு! - ரவை

ந்தச் செய்தியை படித்ததிலிருந்து மனசே சரியில்லை!

 உலகிலேயே அனைவரும் ஏகோபித்து ஒருமனதாக ஏற்கும் உண்மை:

 தாய் என்பவள் பெற்ற பிள்ளைகளிடத்தில் நிறைவான, தூய்மையான, அபரிமிதமான அன்பை செலுத்துபவள்! பிள்ளைகளுக்கு அவளே தெய்வம்!

 உண்மையா இல்லையா?

 அப்படிப்பட்ட தாய்க்குலத்தில், எப்படி இவள் மட்டும் வித்தியாசமாக, இல்லை, மிக கொடூரமாக, நடந்துகொண்டாள்?

 நினைத்துப் பார்க்கவே, குலை நடுங்குகிறது!

 நீங்களே அந்தக் காட்சியை பாருங்கள்!

 பதினெட்டு வயது நிரம்ப, இன்னும் மூன்றே நாட்கள் மீதமுள்ள கன்னிப் பெண்!

 அந்த வீட்டில் அவளும் அவள் தாயும் மட்டுமே வசிக்கின்றனர்.

 தாயின் பாதுகாப்பில் உள்ளதால், தனக்கு எந்த தீங்கும் நேராது என்ற பூரண நம்பிக்கையுடன், நிம்மதியாக ஆழ்ந்து உறங்குகிறாள்.

 நள்ளிரவு! என்ன இன்பமான கனவு கண்டாளோ, அந்தக் கன்னிப்பெண்! அவள் முகத்தில் புன்னகை!

 இந்தக் காட்சியை கண்ட அவள் தாய், வழக்கமாக, அவளருகில் படுத்து, அவளை கட்டியணைத்து கன்னத்தில் முத்தமிட்டு, கொஞ்சி மகிழ்வாள் இல்லையா?

 இந்தக் காட்சியிலேயும் அதைத் தானே நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?

 மாறாக, அங்கு நடந்ததை கவனியுங்கள்!

 தாய் படுக்கையிலிருந்து எழுந்து விளக்கை ஏற்றுகிறாள், உள்ளே சென்று கையில் ஒரு பாட்டிலையும், இன்னொரு கையில் தீப்பெட்டியையும் எடுத்து வந்து, சிறிதும் தயங்காமல், நேரே அந்த பெண் அருகே சென்று, அவள் உடல்மீது, கையிலிருந்த பாட்டிலில் இருந்த திரவத்தை கவிழ்த்துவிட்டு, சிறிதும் இடைவெளியின்றி, தீக்குச்சியை ஏற்றி, பெண்ணின்மீது போடுகிறாள்.

 அலறிக்கொண்டு, 'ஐயோ! அம்மா!' என கதறிக்கொண்டு, அந்தப் பெண் எழ முயற்சிக்கிறாள், முடியவில்லை. ஒரு வினாடியில், தீ உடல் முழுதும் பரவி, அவளை எரித்து சாம்பலாகிவிட்டது.

 கவனியுங்கள்! அந்தக் கடைசி நேரத்திலும், அந்தப் பெண், தன்னைப் பெற்ற தாயைத்தான் காப்பாற்ற அழைக்கிறாள்..........

 ஆனால், அந்த கொடூரமான தாய் சிறிதுகூட, அலறித் துடிக்கும் பெண்ணின்மீது இரக்கம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.