(Reading time: 6 - 11 minutes)

 " அப்ப உன் புள்ளையை என் வகுப்புக்கு நீ அனுப்பலையா?"

 " தெருவில அவகூட விளையாடற புள்ள கூப்பிட்டான்னு சொன்னா, சரி போன்னேன்........."

 " நீ எத்தனையோ இடங்களுக்கு போயிருக்கே, எத்தனையோ பேரை பார்த்திருக்கே, அவங்களப்போல, இருக்கணும்னு ஆசைப்பட்டதே இல்லையா?"

 "எங்கள விடுங்கம்மா, உங்கள்லியே, கிராமத்திலே, டவுன்ல, நகரத்தில, ஒருத்தருக்கொருத்தர் வித்தியாசமா இருக்கீங்களே, ஒரு இடத்திலே இருக்கிறவங்க, இன்னொரு இடத்துல இருக்கறவங்கப்போல வாழ ஆசைப்படலியே, அப்படி ஆசைப்பட்டு ஊர்விட்டு ஊர் வந்தவங்க, நினச்சது நடக்காம பிச்சைதான எடுக்கறாங்க.......அம்மா!பொழுது விடிஞ்சா, பசிக்கு சோறு, தேடுவேன்,ஆனா பிச்சை எடுக்கமாட்டேன், கொடுத்த வேலை எதுவானாலும் செய்வேன், எனக்கு கிடைக்கறதுல, புள்ளைக்கும் தருவேன், அவளும் வளர்ந்தானா, தனியா பூடுவா, அவ என்னை தேடமாட்டா, நான் அவள தேடமாட்டேன்....உங்களால நம்ப முடியல இல்லே?"

 " நிச்சயமா!"

 " அம்மா! நாடோடிக் கும்பல், மலப்பக்கம் இருப்பவங்க, காட்டுப்பக்கம் வாழறவங்க, இப்படி அங்கங்கே கும்பல் கும்பலா வாழறாங்கம்மா! அவங்க வேற, நீங்க வேற! நீங்க நகரத்துல இருக்கறதனால, அவங்களப்பத்தி தெரியல, அதை விடுங்க! நீங்க பெரிய கட்டிட வீட்டில, வாழறவங்கதானே, ஆனா இங்க குப்பத்துல, குடிசைல வாழலயா, சனங்க?"

 " அதுசரி! இங்க இருக்கறவங்களுக்கு, எங்களப்போல வாழமுடியலியேன்னு ஏக்கமாயில்லயா?"

 " அவங்களுக்கு அதுக்கெல்லாம் ஏது நேரம்? அன்னாடங் காய்ச்சிங்க! ஏதோ உழச்சோம், தின்னோம், தூங்கினோம்னு ஒவ்வொரு நாளயும் கடத்துறவங்கம்மா!"

 " ஏகப்பட்ட விஷயம் தெரியுதே உனக்கு?"

 " நீங்க, கட்டிடங்களுக்குள்ள, யாரோ சொல்லித் தர்றத படிக்கிறீங்க, நான் பரந்த உலகத்துல, நேரா பார்த்து தெரிஞ்சுக்கறேன், உங்க படிப்பில உத்தியோகம் கிடைக்கும், பதவி கிடைக்கும், பணம் கிடைக்கும், என் படிப்புல அதெல்லாம் கிடைக்காது, ஆனா நிம்மதி கிடைக்கும், ஏன்னா எதிர்பார்ப்பே இல்லாத போது, ஏமாற்றம் வராதுல்லயா?

 உறவுன்னு இல்லாதபோது, பிரிவும் இல்லை! அதனால, வருத்தம், சோகம், துக்கம், எதுவும் இல்ல!

 வீடு இல்ல, அதனால ரேசன் அட்டை, ஆதார் அட்டை, வரி கட்டற பொறுப்பு, அக்கம்பக்கத்தோட சண்டை, நிலத் தகராறு எதுவும் இல்ல!

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.